பச்சிளம் குழந்தைக்கோ
பாலுக்காய் பசி...
பாலகனுக்கோ
படிப்புக்காய் பசி..
வாலிபனுக்கோ வாழ
வேலைக்காய் பசி...
கலைஞர்களுக்கு
கலைப்பசி....
காம வெறியருக்கோ
காமப்பசி....
அரசியல் வாதிகளுக்கோ
அதிகாரப்பசி..
ஆக்கிரமிப்பாளருக்கோ
அகிலம் விழுங்கப்பசி..
பலரின் பசி வாழ்வதற்கு
சிலரின் பசி அழிவிற்கே....


No comments:
Post a Comment