சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 6 January 2026

செந்தமிழ்ப் பாவை 21

 கார் போன்ற நீண்ட கூந்தலை உடையவளே! செந்தமிழுக்கு தீங்கு நிகழ்வதோ? .. சுவையான தேன் கசக்கலாமோ? எந்நாளும் இனித்திடும் எம்தமிழருக்கு இந்தியோ? பொறுத்துக்கொள்ள மாட்டோம்... கந்தையாகிய ஆடைகளை கூட அணிந்து கொள்வோம்... அறுசுவை நீங்கி வெறும் கிழங்குகளை புசித்து வாழ்வோம். கடும் கானகத்தில் கூட வாழ சம்மதிப்போம். ஒரு போதும் இந்தியனை கற்க சம்மதிக்க மாட்டோமென வளமிக்க தமிழகத்தின் அழகான அணிகலன்களை அணிந்த அழகுமிக்க தமிழ் மங்கை வெந்த உள்ளத்தோடும், வெற்றி பெறுவோமெனும் உறுதியோடு கூறுவாரேயானால் வடபுலத்தான் மொழியான இந்தி இங்கு வந்து புகுந்திடுமோ, விரைந்து எழுந்து முழங்கிடுவாய் செந்தமிழ்ப் பாவைதனை என பாவலரேறு பெருஞ்சித்திரனார் அழைக்கிறார்.

தமிழின் பெருமையையும், இந்தி மொழியை ஏற்க மறுக்கும் தமிழர்களின் உறுதியையும் உணர்த்தி, "செந்தமிழுக்குக் கேடு வருமா? தேனில் விஷம் கலக்குமா? எங்கள் தமிழர்களின் நாவிற்கு இந்த மொழியின் ஆதிக்கம் தேவையா? இல்லை, நாங்கள் ஏற்க மாட்டோம்! கந்தல் துணி அணிவோம்! கிழங்கு சாப்பிடுவோம்! காட்டுக்குச் செல்வோம்! ஆனால் இந்தி படிக்க ஒப்புக்கொள்ள மாட்டோம்!" என்ற பொருள்பட இந்தி எதிர்ப்பு உணர்வையும், தமிழ் மொழிப் பற்றையும் வெளிப்படுத்துகிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்....

*************

செந்தமிழுக்குத் தீதோ? தெளிதேனில் வெங்கசப்போ?

எந்தத்தமிழர் சென்நாவுக் கிந்தியோ? ஏலோம் யாம்!

கந்தை உடுப்போம்! கிழங்குண்போம் கான்செல்வோம்!

இந்தி படிக்க இசையோம் யாம்” என்பதனை

வெந்த உளத்தோடும் வெல்கின்ற வீறோடும்

இந்தத் தமிழ்நிலத்தின் ஏந்திழையார் கூறுவரேல்

வந்து புகுமோ? வடக்குமொழி? வார்குழலாய்!

முந்தி எழுந்தே முழங்கேலோ ரெம்பாவாய்!21

🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...