சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 28 January 2026

ஓரு மருந்தாளுனரின் நினைவலைகள்

 நான் முன்பே குறிப்பிட்டிருந்ததைப் போல கடந்த காலங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான நிதி ஒதுக்கீடு அல்லது மருந்துகளோ வழங்கப்பட்டன. பிறகு அரசே தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் என்ற அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் மருந்துகளை வழங்குகின்ற முறை வந்தது, பிறகு நிதி ஒதுக்கீட்டில் விஞ்ஞான பூர்வமாக முன்னேற்றமான நிலை வந்தது என்பதை அறிவோம். அந்தந்த மருத்துவ நிலையங்களின் செயல்பாடுகளின் அடிப்படையில் அதாவது வெளிப்புற நோயாளிகள் எண்ணிக்கை , உள் நோயாளிகள் எண்ணிக்கை, சிறு அறுவை சிகிச்சைகள், பெரிய அறுவை சிகிச்சைகள், பிரசவங்களின் எண்ணிக்கை போன்ற செயல்பாட்டு குறியீடுகளின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதால் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. அதன் விளைவாக அந்தந்த நிலையங்களே தங்களுக்கு தேவையான மருந்து பற்றி இடை தயார் செய்து ஒதுக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் அடிப்படையில் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் மூலம் மருந்துகளை பெற்றுக்கொண்டு வழங்கப்படுகிறது.

நான் மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் சேர்ந்த போது சற்று மருந்து பற்றாக்குறை பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டி வந்தது. அதனை சமாளிப்பதற்கு நான் சற்று கடுமையாக உழைக்க வேண்டி வந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் பயன்படுத்தப்பட்ட அனைத்து மருந்துகளையும் கணினியில் பட்டியல் தயார் செய்து, அதனுடைய ஒரு வருட சராசரியை கணக்கிட்டு அதனோடு 10 சதவீதத்தை கூடுதல் ஆக்கி ஒரு குறைந்தபட்ச தேவை பட்டியலை ஓராண்டு திட்டமாக தயாரித்தேன். அதனோடு நான் முன் கூறிய V E D அனாலிசிஸ் ஏபிசி அனாலிசிஸ், இரண்டு முறைகளையும் மனதில் கொண்டு அங்கிருந்த அனுபவமிக்க தலைமை மருந்தாளுநர் காலம் சென்ற ஜெயலட்சுமி மற்றும் செந்தமிழ்ச்செல்வி சித்ராதேவி ஆகியோரிடம் கலந்து கொண்டு ஒரு வருடாந்திர தேவைப்பட்டியலை தயாரித்தேன். அதன்படி கணினியில் அன்றைய மருந்து கையிருப்பை பதிவு செய்த உடனேயே அது எத்தனை நாளைக்கு வரும் என்று கணிக்க முடிந்தது. அதனால் ஓரளவு மருந்து சேவை கழகத்தில் இருக்கக்கூடிய கையிருப்பு மருந்திற்கு தக்கவாறும் மருந்துகளை கொள்முதல் செய்தேன்.

அதுபோக அந்த மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் உபரி மருந்துகள் மற்றும் காலாவதி தேதி நெருங்கி வரக்கூடிய மருந்துகள் ஆகியவற்றை அரசினர் ராஜாஜி மருத்துவமனைக்கு பெற்றுக் கொண்டு நிலைமைகளை சமாளித்தேன் அதுபோக மீனாட்சி மருத்துவமனை மற்றும் தன்னார்வ அமைப்புகள் வழங்கக்கூடிய மருந்துகள் ஆகியவற்றையும் பெற்றுக் கொண்டு ஓரளவு சமாளிக்க முடிந்தது அது போக கூடுதல் மருந்து தேவைக்கான நியாயங்களை விளக்கி மருத்துவமனை முதல்வர், இயக்குநர் மூலம் அரசுக்கு உரிய முறையாக அணுகி கூடுதல் நிதி ஒதுக்கீடு பெற்று பிரச்சனைகளை தீர்க்க முடிந்தது மருந்தாளுனர்கள் முயற்சி செய்தால் திட்டமிடுதலில் சரியான பங்கேற்பினை செய்து மருந்து தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்பது எனது அனுபவம்... 

இன்னும் தொடரும்... 


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...