ஜனவரி - 3 ஆசிரியர் தின வாழ்த்துகள்
*இந்தியாவின் கல்விச் சுடர் - சாவித்திரிபாய் பூலே பிறந்த தினம் இன்று ஜனவரி - 3*
பெண்கள் இன்று விண்வெளி வரை உயர்ந்திருக்கிறார்கள் என்றால், அதற்கான முதல் விதையை 1848-லேயே விதைத்தவர் அன்னை சாவித்திரிபாய் பூலே. இன்று (ஜனவரி 3) அவரது பிறந்தநாள்.
அவரின் புரட்சிகரப் பணிகள்...
✓முதல் ஆசிரியை: பல எதிர்ப்புகளுக்கு மத்தியில், புனேவில் பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோருக்கான முதல் பள்ளியைத் தொடங்கினார்.
✓மாற்றுப் புடவை: பள்ளிக்குச் செல்லும்போது சாதியவாதிகள் அவர் மீது சேற்றையும், கற்களையும் வீசினர். "இவற்றை நான் பூக்களாகக் கருதுகிறேன்" என்று கூறி, பள்ளி சென்றதும் வேறொரு புடவையை மாற்றிக்கொண்டு பாடம் நடத்தினார். அந்தத் துணிச்சலே இன்று கோடிக்கணக்கான பெண்களுக்குக் கல்வி வழங்கி இருக்கிறது.
✓சமூகத் தாய்: விதவை மறுமணம், சிசுக்கொலை தடுப்பு மற்றும் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சேவை எனத் தன் வாழ்நாளெல்லாம் மக்களுக்காகவே அர்ப்பணித்தார்.
கல்வி என்பது சலுகை அல்ல, அது அடிப்படை உரிமை என்பதை உரக்கச் சொன்னவர். பிளேக் நோயாளிகளைக் காக்கும் பணியில் தன் உயிரையே ஈந்த அந்தத் தியாகத் தலைவியை இன்று போற்றுவோம்.
"கல்வி அறிவே ஒரு பெண்ணின் உண்மையான பலம்!"
சாவித்திரி பாய் புலே மற்றும் பாத்திமா ஷேக் இணைந்து மகாராஷ்டிரா பகுதியில் முதல் பெண்கள் பள்ளி திறந்து மேலும் இந்த பகுதியில் இது மிகவும் சாதகமான தாக்கம். அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பள்ளிக்குச் சென்று படிக்கத் துவங்கினர்.
1870 இல் இருந்து இந்த படத்தை பார்ப்பது நீங்கள் யூகிக்கலாம்.


No comments:
Post a Comment