சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 25 January 2026

வீர வணக்க நாள்

 எத்தனை நாள் இந்திப்போர்?

==========

எத்தனை நாள் எத்தனை ஆண்(டு) எத்தனைப் போர் எத்தனைப் பேர் 

எத்தனைத் தோள் இந்திக் கெழுவதோ?


எத்தனைப்பேச் செத்தனைத்தாள்? எத்தனைப்பா டெத்தனைப் பாட்(டு) 

எத்தனை தாம் எழுதிக் குவிப்பதோ?


எத்தனைநாள் நாம் பொறுப்ப(து)

எத்தனைப் பேர் நாமிறப்ப(து)


எத்தனைநாள் இந்தி எதிர்ப்பதோ?


ஒத்திணையும் எண்ணமிலை; 

ஒன்றிரண்டு பார்த்துவிட 

ஊர்ப்படைக்கு நாளொன் றுரைப்பமே!

======

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 


-1967

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...