கூர்மையான வேல் போன்ற விழிகளை உடையவளே!
நன் காலை பொழுது முதல், இருள் கவிழும் மாலை வரை, கடும் உழைப்பில் ஈடுபட்டு, அதன் களைப்பால் விடிகின்ற பொழுது கூட அறியாமல் மீன் போன்ற கண்களை மூடித் துங்குகின்றாயோ?!
எதிரிகள் அமுது போன்ற பாலில் கொடும் நஞ்சினைக்கலந்தது போல அமுது போன்ற நம் தமிழில் ஆரிய மொழியாகிய நஞ்சினை கலக்குகிறார்கள் என்பதனை காண்பாயாக! கொடும் பகைவர் பின்னங்கால் பிடரிபட தெரித்தோடும் வண்ணம் எதிர்த்து நீ போரிடவில்லை என்றால், ஆலை பஞ்சு போல நம் தமிழினம் நசுக்கப்படுவோம் ஆழ்ந்த ஞானம் கொண்ட இளங்குமரியே! போரிட விழித்தெழுவாயாக என பாவலரேறு பெருஞ்சித்திரனார் துயிலெழுப்புகிறார்..
*****************
காலை முதலாக் கவின்மாலைப் போழ்துவரை
வேலை புரிந்த களைப்பால் விடியுமட்டும்
சேலேன் விழிமூடித் தூங்குதியோ! செந்தமிழென்
பாலிற் கொடுநஞ்சைப் பாய்ச்சினர்காண்; கூர்மழுங்கா
வேலில் வடித்த விழியுடையாய்! வெம்பகைவர்
காலில் தலைதெறிக்க ஓடக் கனன்றிலையேல்!
ஆலைப் படுபஞ்சாய் ஆக்கப் படுவோங்காண்!
வாலைக் குமரி! விரையேலோ ரெம்பாவாய்!25
No comments:
Post a Comment