சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 3 January 2026

நவீன ஓநாயும் ஆட்டுக்குட்டியும்...

 

ஓநாய்:         
நான் குடிக்கும் நல்ல நீரை 
ஆட்டுக்குட்டியே ......
நீ ஏன் நான்கு காலால் 
கலக்குகிறாய் ஆட்டுக்குட்டியே?
ஆட்டுக்குட்டி: 
நீர் குடித்த மிச்சமன்றோ 
ஓநாய் அய்யாவே........
ஒதுங்கி நின்று குடிக்கின்றேன்
ஓநாய் அய்யாவே........ 
ஓநாய்: 
போன வருடத்திலே
 ஆட்டுக்குட்டியே ......
போக்கிரித்தனமாய் 
பேசினாய் ஆட்டுக்குட்டியே .?.....  
ஆட்டுக்குட்டி:
போன வருடத்திலே
ஓநாய் அய்யாவே.......
நானிந்த பூமியிலே 
பிறக்கவில்லைஓநாய் அய்யாவே.......
ஓநாய்: 
உன் தாயே வைத்திருக்கும்
 ஆட்டுக்குட்டியே ...
அதற்கு உன்னைத்தானே
கொன்றிடுவேன்ஆட்டுக்குட்டியே ...
                                                ****************************


*வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய குண்டுவீச்சில் 'எண்ணிக்கை குறிப்பிடப்படாதோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் காயமடைந்துள்ளனர்' - நியூயார்க் டைம்ஸ்...

*ஹிகுரோட் விமானத் தளத்தின் மீது அமெரிக்க வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்ட பின்னர், சந்தேகத்திற்குரிய வெனிசுலா வான் பாதுகாப்புப் பிரிவு இன்று எரிந்து கொண்டிருக்கிறது.

*அமெரிக்க வெளியுறவுத்துறைச் செயலர் மார்கோ ரூபியோ, ஜூலை 2025-ல் தான் கூறிய வார்த்தைகளை இப்போது மீண்டும் பதிவிட்டுள்ளார்.

'*மதுரோ வெனிசுலாவின் ஜனாதிபதி அல்ல, அவருடைய ஆட்சி சட்டபூர்வமான அரசாங்கமும் அல்ல'

தற்போது, ​​மதுரோ கைது செய்யப்பட்டுள்ளார்.

*அமெரிக்க இராணுவத்தின் சிறப்பு நடவடிக்கை பிரிவான டெல்டா படையால் மதுரோ கைப்பற்றப்பட்டார் - CBS செய்திகள்

அமெரிக்க ஆதரவு பெற்ற (சமாதான நோபல் பரிசு பெற்ற?!) மச்சாடோ வெனிசுலாவை அமெரிக்க எண்ணெய் மையமாக மாற்ற 'விரும்பினார்'

 டிசம்பர் 11, 2025 அன்று, மரியா கொரினா மச்சாடோ தனது நாட்டை அமெரிக்காவிற்கு விற்க தனது 'ஆசையை' வெட்கமின்றி வெளிப்படுத்தினார்:

💬 'வெனிசுலாவை அமெரிக்காவின் ஆற்றல், தொழில்நுட்பம் மற்றும் ஜனநாயக மையமாக மாற்றுவோம். நாங்கள் உங்களை நம்புகிறோம். அந்த நாளுக்காக நான் ஏங்குகிறேன்... அது விரைவில் வரப்போகிறது.'

அமெரிக்கா தனது வேண்டுகோளுக்கு பதிலளித்ததாகத் தெரிகிறது...

***********

ஈசோப் எழுதிய ஓநாயும் ஆட்டுக்குட்டியும் கதை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. ஓநாய் புத்தி கொண்ட ஆட்சியாளர்கள், ஆக்கிரமிப்பாளர்கள் இருக்கும் வரை தொடரும்..... 

பெட்ரோலுக்காக 

நேற்று இராக், லிபியா... இரசாயன அழிவு சாதனங்கள் இருக்கிறதென்ற குற்றச்சாட்டின் பேரில்

இன்று வெனிசுலா போதை மருந்து, ஜனநாயக பாதுகாப்பு என்ற பெயரில் 

நாளை யாரோ... ஏன் இந்தியாவாக கூட இருக்கலாம் ஏதோஒரு குற்றச்சாட்டின் பெயரில்..... 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...