Sunday, 13 January 2013
Saturday, 12 January 2013
Monday, 7 January 2013
Thursday, 3 January 2013
வழி தவறிய வெள்ளாடுகள்
புத்தாண்டு முடித்த கையோடு வீட்டுக்கு இரண்டு புதிய நண்பர்கள் வந்து சேர்ந்தார்கள்.வேண்டுமென்று வரவில்லை.பாதை தெரியாமல் வந்து சேர்ந்தார்கள்.வீதி நாய்கள் துரத்தியதால் தாயை விட்டு பிரிந்த வெள்ளாட்டு குட்டிகள் தாம் அவை ..
வாசலில் வந்து நின்ற அவர்களை பார்த்த என் பத்தினியார் வீட்டுக்குள் கொண்டு வந்து விட்டார்.
(அவர்களுக்கும் முகவரி சொல்ல தெரியவில்லை?!)
முதலில் உரிமையாளர்கள் யாரென்று விசாரித்து பார்த்தால்யாருக்கும் தெரியவில்லை.பசி களைப்பு வேறு...தாயை பிரிந்த சோகம் ...பரிதாபமாய் கத்தி தீர்த்து விட்டார்கள்... என்ன கொடுப்பதென்று தெரியவில்லை.பிறந்து இரண்டு நாள் தானிருக்கும்
தண்ணீரை நக்கி பார்த்தன..இலைகளை மோந்து பார்த்தன....ஒன்றும் நடக்கவில்லை.உடனே கடைக்கு சென்று பாட்டிலும்,பீடிங் ரப்பரும் வாங்கி வரசொன்ன என் மனைவி பாட்டிலில் பாலடைத்து ஆட்டுக்கு ஊட்டி விட்டாள்
.நானும் கையில் வைத்து தடவி கொடுத்ததும் சற்றே ஆறுதலடைந்தன.எனினும் சொந்தக்காரர் வரவில்லை என்றால் என்ன செய்வது என்ற கவலை வேறு....
குட்டியை பிரிந்த ஆட்டின் நிலை பொறுக்காத ஆட்டுக்குட்டிகளின் சொந்தக்காரர் ஒரு வழியாக தேடி கண்டு பிடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்தார்.அவரிடம் ஆட்டு குட்டிகளை ஒப்படைத்ததும் கவலை தீர்ந்தது என்றாலும் குட்டிகளை பிரிகையில் சற்று கவலையாக தானிருந்தது......
Subscribe to:
Posts (Atom)
எச்சரிக்கை
தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...
-
பணி ஓய்வு பெறும் போது ஒரு நண்பர் ஆலோசனை வழங்கினார். ஏனெனில் அவர் பணி ஓய்வு பெற்றவர். பொதுவாகவே பணி ஓய்வு பெற்றபின் வேலை பார்த்த அலுவலகங்களு...
-
நான் முதன் முதலாக பணிக்கு சேர்ந்த இடம் திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் என்று சொல்லி இருந்தேன். இந்தியாவிலேயே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்...
-
40 ஆண்டுகளுக்கு முன் தைத்திங்களில், இதே நாளில், (10.02.1986)இனிய மாலைப் பொழுதினிலே, ஒரு கல்விச்சாலை தன்னிலே, ஒரு எளிய, சுயமரியாதை, சாதி மறுப...



