சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 16 November 2015

சென்னையில் வெள்ளம்



ஊரெங்கும் ஒரே மழை
குளங்கள்உடைந்தன
சாலைகள் மறைந்தன
ஊரெல்லாம் வெள்ளக்காடு
மக்கள் மடிந்தனர்....
முன்பு ஆண்டவர்கள்
ஆள்பவர்களை குறை கூறினர் ....
ஆள்பவர்கள்
ஆண்டவர்களை குறை கூறினர் ...
மக்கள்
ஆண்டவரை குறை கூறினர் .....
ஆண்டவர் கூறினார்
மண் கொடுத்தேன்
மழை கொடுத்தேன்
மரம் செடி கொடி கொடுத்தேன்
ஆறு குளம் கொடுத்தேன்
வாழ வழிவகை
அத்தனையும் கொடுத்தேன்.
தன்னலத்தால் அத்தனையும்
அழித்து விட்டு
என்னை ஏன் அழைக்கிறாய்.... 

சென்னையில் வெள்ளம் க்கான பட முடிவு

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...