சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 31 January 2026

கந்தர்வனின் கலை இரவு

 மண்ணை கல்லாக்கி

கல்லை சிலையாக்கி

சிலையை பேசவைக்கும்

சிந்திக்க வைக்கும்

மகா வித்தகன் ... 


புல் பூண்டு முளையா 

பொட்டல் தரையிலும்

விதைத்து பயிர் செய்யும் 

வித்தைகள் தெரிந்தவன். 


கதை கவிதை, நாடகமென

கலை பல கற்றவன்- பிறர்

கற்றிட வகை செய்திட்ட

கலைஞன் அவன்... 


அரசுப்பணி யோடு- சிவப்பு 

அரசியல் பணி செய்து

அகிலம் மாறிட, புரட்சி மலர

அவனி சிவந்திட உழைத்தவன்.. 


அன்பு அரவனைப்பு

ஆனந்தம் ஆவேசம் சினமென

எதனையும் மறைக்கா

சிறு குழந்தையவன்... 


அவன் தான் மனிதன் 

அவன் ஒரு கலைஞன்

அவன் ஒரு புரட்சியாளன்

அவன் பெயர் தானே 

கந்தர்வன்.. கந்தர்வன்... 


















தத்துவ தரிசனம்


 உங்கள் முடிசூட்டு விழாவிற்கு கைதட்டும் அதே கூட்டம்தான் உங்கள் தலை துண்டிக்கப்படும்போதும் கைதட்டும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். மக்களுக்கு ஒரு வேடிக்கை தேவைப்படுகிறது.

- டெர்ரி பிராட்செட்

பொதுமக்களின் பாராட்டு எவ்வளவு விரைவாகக் கொடூரமாக மாறக்கூடும் என்பதற்காக இந்தக் கூற்று நமக்கு நினைவூட்டுகிறது. மக்கள் பெரும்பாலும் உண்மை அல்லது நீதியைப் பற்றி ஆழமாகச் சிந்திக்காமல், அதிகாரம், வெற்றி மற்றும் நாடகத்தையே ஆரவாரத்துடன் வரவேற்கிறார்கள். கைதட்டலை அதிகம் நம்ப வேண்டாம் என்று பிராட்செட் நம்மை எச்சரிக்கிறார், ஏனென்றால் கூட்டங்கள் விசுவாசம் அல்லது ஞானத்தால் அல்ல, மாறாக வேடிக்கையாலேயே ஈர்க்கப்படுகின்றன. ஆரவாரங்கள் மங்கிப்போகும்போதும் உண்மையான நேர்மை உறுதியாக நிலைத்து நிற்கும்.


" மனிதப் பண்புகளிலேயே மிகவும் அரிதானது நிலைத்தன்மைதான்." — ஜெர்மி பெண்டாம்

தனிப்பட்ட குணம் என்பது எப்போதாவது காட்டும் முயற்சி அல்ல, மாறாக சீரான நடத்தையில்தான் வெளிப்படுகிறது என்பதை பெந்தாம் நமக்கு நினைவூட்டுகிறார். பலரும் நல்ல எண்ணங்களுடன் செயல்படுகிறார்கள், ஆனால் கடினமாகவோ அல்லது சிரமமாகவோ இருக்கும்போது, ​​​​தங்கள் விழுமியங்களுக்கு உண்மையாக இருப்பவர்கள் சிலரே. நிலைத்தன்மை நம்பிக்கையை வளர்க்கிறது, அடையாளத்தை உருவாக்குகிறது, மற்றும் கொள்கைகளை வாழும் உண்மையாக மாற்றுகிறது.


ஒரு வாழ்க்கை மற்றவர்களின் குரல்களை எதிரொலிப்பதை நிறுத்தும்போதுதான் அது உண்மையிலேயே ஒருவருக்கு சொந்தமானதாகிறது.

ஆஸ்கார் வைல்டின் மேற்கோள், மக்கள் எவ்வளவு எளிதில் கடன் வாங்கிய அடையாளங்களுக்குள் நழுவுகிறார்கள் என்பது நமக்கு நினைவூட்டுகிறது - கருத்துக்களைத் திரும்பத் திரும்பச் சொல்வது, நடத்தைகளை நகலெடுப்பது மற்றும் போலித்தனத்தை ஆர்வமாக தவறாகப் புரிந்துகொள்வது. நம்மை அவர் நாமே சிந்திக்கவும், உணர்வுபூர்வமாகத் தேர்ந்தெடுக்கவும், பழக்கத்தை விட அசல் தன்மையுடன் வாழவும் சவால் விடுகிறார். நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பிரதிபலிப்பதை நிறுத்தும் தருணத்திலிருந்து உண்மையான தனித்துவம் தொடங்குகிறது.


" உங்களிடம் உள்ள அனைத்தையும் கொண்டு, நீங்கள் இருக்கும் இடத்திலேயே, உங்களால் முடிந்ததைச் செய்யுங்கள்."

- தியோடர் ரூஸ்வெல்ட்

சாக்குப்போக்குகள் முன்னேற்றத்தை முடக்குகின்றன. நாம் பெரும்பாலும் சிறந்த வளங்களுக்காகவோ அல்லது சரியான நேரத்திற்காவோ காத்திருக்கிறோம். ரூஸ்வெல்ட், கையில் இருக்கும் கருவிகளைக் கொண்டே உடனடியாகச் செயல்பட வலியுறுத்துகிறார். வளமான மனப்பான்மையிலேயே மகத்துவம் பிறக்கிறது. நீங்கள் இன்றே வேலை செய்யத் தொடங்கினால், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இப்போதே நீங்கள் போதுமானவர்.




இலக்கிய சோலையிலே உலாவிடுவோம்

 ஒரு நாடு அறிவு சார் விடயத்தில் கொள்வோரும் கொடுப்போரும் ஆக இருக்கலாம். ஆனால் பொருள் சார்ந்த விடயத்தில் கொள்வோராக அதாவது இரப்பவராக ஒருவர் இருப்பின், அந்த நாடு வறுமையில் உள்ளது. அப்படியும் ஒருவர் இரப்பவராக இருப்பின், கொடுக்க மனமின்றி ஒருவர் ஈயாமல் இருப்பர் எனின் அந்நாடு வன்மையான நாடாகும். 

அதேபோல எடுத்துக் கொள்ளுங்கள் என அன்புடன் வேண்டுதல் பெருமையானது என்றால், அதைவிட உயர்ந்தது நான் வாங்கமாட்டேன் என பெருமிதத்துடன் இருப்பது தான் என சங்க கால வாழ்க்கை இருந்ததாக இலக்கியம் கூறுகிறது... என்ன காரணத்தாலோ வல்வில் ஓரியை காணசென்ற புலவருக்கு பரிசில் அளிக்காத நிலையில் பாடிய பாடல் இது..... 

இந்தப் பாடல், பழந்தமிழர்களின் கொடை மனப்பான்மையையும், சுயமரியாதையையும் காட்டுகிறது.

"ஈ என இரத்தல் இழிந்தன்று" என்பது, பிறரிடம் கையேந்தி இரப்பது இழிவான செயல்; ஆனால், இரப்பவனுக்கு "ஈயேன்" (நான் தரமாட்டேன்) என்று மறுப்பது அதைவிட இழிவான செயல்; அதனினும், 'கொள்' என்று அன்புடன் கொடுப்பது உயர்ந்தது; அதனினும், 'கொள்ளேன்' (நான் வாங்கமாட்டேன்) என்று மறுப்பது அதனிலும் உயர்ந்தது 

 இரப்பவனின் நிலை எவ்வளவு தாழ்வானது என்பதை உணர்ந்து, அவனுக்கு ஈயாமல் இருப்பது, அதனினும் இழிவானது, எனவே வள்ளல்கள் ஈய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்துகிறது. அதே சமயம், ஈயுபவனின் கொடை மனப்பான்மையையும், பெற மறுக்கும் ஈகை குணத்தையும் இது பாராட்டுகிறது. தெளிந்த நீரை உடைய கடலில் செல்வோர் அதன் நீரை உண்ணமாட்டார்கள். வளர்க்கும் ஆடுமாடுகளும், காட்டு விலங்கினங்களும் சென்று உண்ணும் சேறுபட்டக் கலங்கல் நீரே ஆயினும் தாகம் தீர்த்துக்கொள்ள அந்த நீரைத் தேடியே விரும்பி மக்கள் செல்வர்.

ஓரி,

கருமேகம் வானத்திலிருந்து சுரக்கும் மழை போல வழங்கும் வள்ளல் நீ.

உன்னிடம் பரிசில் கிடைக்காவிட்டால், தான் புறப்பட்டு வந்த புல் (நிமித்த காலம்) சரியில்லை என்று, நாடி வந்தவர் நொந்துகொள்வார்களே அல்லாமல் வள்ளல்களைப் பழிக்கும் வழக்கம் இல்லை. 

அதனால் உன்னை நான் நொந்துகொள்ள மாட்டேன். நீ நீடு வாழ்க.  

நூலாசிரியர்: புலவர் கழைதின் யானையார்.

நூல்: புறநானூறு (பாடல் 204). 

*******'******

"' ஈ' என இரத்தல் இழிந்தன்று; அதனெதிர் 'ஈயேன்' என்றல் அதனினும் இழிந்தன்று ! 'கொள்' எனக் கொடுத்தால் உயர்ந்தன்று; அதனெதிர் 'கொள்ளேன்' என்றல் அதனினும் உயர்ந்தன்று அதன் எதிர்,

'கொள்ளேன்' என்றல் அதனினும் உயர்ந்தன்று;

தெண் நீர்ப் பரப்பின் இமிழ் திரைப் பெருங் கடல் 

உண்ணார் ஆகுப, நீர் வெட்டோரே;

ஆவும் மாவும் சென்று உண, கலங்கி,

சேற்றொடு பட்ட சிறுமைத்துஆயினும்,

உண்நீர் மருங்கின் அதர் பல ஆகும்;

புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை, 

உள்ளிச் சென்றோர்ப் பழியலர்; அதனால்

புலவேன் வாழியர், ஓரி! விசும்பில்

கருவி வானம் போல

வரையாது சுரக்கும் வள்ளியோய்! நின்னே.-புறநானூறு 204-ஆம் பாடல். 


திணை :பாடாண் திணை; 

துறை :பரிசில் துறை.

வல்வில் ஓரியைக் 

கழைதின்யானையார் 

பாடியது.! -..." 



கிராமத்தில் புலி

 

ஊருக்குள் புலி புகுந்து 

ஆடு மாடுகளை தின்றதென்று

அட்டகாசம் செய்தனவென்று

ஆளுக்காள் கூப்பாடு போட்டனர்.. 

 அழித்திடுவோம் புலிகளை... 

அமைத்திட்டார் கூண்டுகளை

அகப்பட்ட புலிகள்.. 

அமைதியாய் புலம்பின. 

"கவனமாய் பாருங்கள் 

கானகத்தில் புகுந்ததே

கிராமம் தானே "என்று 





Friday, 30 January 2026

பாரதி கனவு..


 படைக்கு பெண்ணை

தலைமையேற்றிட

வைத்தல் நாட்டிற்கழகு...

புகழ்வாய்ந்த மகளிரால் 

பாரதியின் கனவு 

நனவானது.. 


கோர்ட் படிவாசலில்

பெண்ணை நிற்றிட

வைத்தல்

 சமூகத்திற்கிழுக்கு...

பாதித்து பரிதவிக்கும் 

மகளிர் நிலை கண்டால் 

பாரதியின் கனவோ

கானல் நீரானது...


இலக்கிய சோலையிலே உலாவிடுவோம்

 நாடு என்பதற்கு தமிழ் கூறும் நல் உலக இயற்கை வளம் புவியியல் அமைப்பு வாழ்நிலை கொண்டு குறிஞ்சி,முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐவகை நிலங்களாக பிரித்து இருக்கிறது இவை முறையே மலை, காடு, வயல், கடல், வறண்ட நிலங்களைக் குறிக்கின்றன. ஒவ்வொரு நிலத்திற்கும் உரிய தெய்வம், மக்கள், தொழில், உணவு, பறவை, விலங்கு, பூ, இசைக்கருவி எனத் தனித்துவமான கூறுகள் உள்ளன. 

எனவே நாடாக இருந்தாலும், காடாக இருந்தாலும், தாழ்ந்த நிலமாக பள்ளமாக இருந்தாலும், மேடான நிலமாக இருந்தாலும், என புவியமைப்பாக எவ்விடமாயினும் ஆடவர் நல்லவராய் விளங்குகின்றனரோ, அவ்விடத்தில் மேன்மை பெற்றுத் திகழ்வாய், நிலமே என்கிறார் ஔவையார். ஆடவர் என்பவர் ஆள்பவர்களைக் குறிக்கிறது. 

அதாவது ஒரு நல்ல நாடு என அழைக்கப்படுமாயின், அது நல்லவர்களால் ஆட்சி செய்யப்பட்டால் மட்டுமே அவ்வாறு சொல்ல முடியும். 

மன்னன் செங்கோல் தவறாது ஆட்சி புரிந்தால் நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருப்பர்.அதனால் களவு, கொலை, கொள்ளை  போன்ற எந்தவிதமான தீய செயல்களும் நடைபெற வாய்ப்பு  ருக்காது. மன்னன் நம்மை

பாதுகாத்துக் கொள்வான் என்ற

நம்பிக்கையில்தான் மக்கள் எந்தவித

அச்சமுமின்றி தூங்க முடிகிறது.

மாறாக மன்னன் கொடுங்கோலாக...

அளவுக்கு அதிகமாக வரி வசூலிப்பவனாக...

ஆடம்பர பிரியனாக ...இருந்தால்

நாட்டில் நல்லாட்சி நடைபெறாது.

நாட்டு மக்கள் மகிழ்ச்சியாக வாழ முடியாது.

நாட்டில் எப்போது என்ன நிகழுமோ என்ற ஒரு அச்ச உணர்வோடே வாழவேண்டி இருக்கும்.வறுமை குடிகொண்டு விடும்.

அதனால் களவு, வழிப்பறி, கொலை,

கொள்ளை மிகுந்து விடும்.


***************

நாடா கொன்றோ காடா கொன்றோ

அவலா கொன்றோ மிசையா கொன்றோ

எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நிலனே"

--------புறநானூறு 187.

பாடற் குறிப்பு :

பாடியவர் : ஒளவையார்.

இக்குறிப்பை  படித்துவிட்டு யாராவது எந்த தேசத்திலாவது ஆளுகின்ற ஆட்சியாளர் ஆடம்பரப்ரியாராக, கூத்து கட்டுபவராக, புளுகுணி மூட்டையாக, அளவு மீறி வரி வசூல் செய்து மக்களை நாசம் செய்பவராக, அரசாங்க சொத்தை தனது குடும்பத்தார் உறவினர்கள் நண்பர்களுக்கு வாரி இறைப்பவராக இருந்தால் மக்களுடைய துன்பங்களை புரிந்து கொள்ளாதவராக, பொல்லாதவராக இருந்தால் அது உங்களுடைய சிந்தனைக்கு விட்டு விடுகிறோம். இப்பாடலை யாரையும் குறிப்பிட்டு ஔவையார் பாடவில்லை என்பதையும் பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்


தியாகிகள் தினம்...

அந்நியர்களிடமிருந்து

விடுதலை 

வேண்டியி.. 

கத்தியின்றி, 

ரத்தமின்றி, 

யுத்தம் துவங்கியவர்... 


மண்ணின்   மைந்தரின் 

மதவெறிக்கு., 

துப்பாக்கிக்கு, 

பலியான்

துயரநாள்... 


"மனிதனை நேசிப்பவனை நேசிக்கிறேன்" என்று ஒரு அற்புதமான மணிமொழி உள்ளது. 

சக மனிதனையும் பிற மதங்களையும் மதிப்பது என்பது ஒரு மிகச் சிறந்த பண்பு. குறிப்பாக தலைவர்களுக்கு இருக்க வேண்டிய ஆகச்சிறந்த பண்பு. அந்த பண்பு இருந்ததால்தான் காந்தி மகாத்மா காந்தி என்று போற்றப்பட்டார். 

அவர் முரண்பாடே இல்லாத மனிதனா என்று கேட்டால் நிச்சயமாக இல்லை. ஏராளமான முரண்பட்ட கருத்துக்களை உடையவர் தான் என்றாலும் மாற்றங்களை அவர் ஏற்றுக்கொண்டவர்.  

“உண்மையைத் தேடுகிற என்னுடைய முயற்சியில் நான் பல கருத்துக்களைக் கைவிட்டிருக்கிறேன்.. பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்..”

"காந்தி அகிம்சை விஷயத்தில் மிகவும் வன்முறையாக இருக்கிறார்" காந்தி அகிம்சையில் மிகவும் வன்முறையாளர் என்று அந்த காலத்தில் சொல்லும் படியாக அகிம்சா போராட்டத்தில் விடாப்பிடியாக இருந்தார். அவர் ஒரு மிகப்பெரிய சுதந்திர போராட்ட வீரராக இருந்தால் போதும், போராட்ட வடிவங்கள் எங்காவது அஹிம்சை விதிகளை மீறினால் அவர் மிகவும் கடுமையாக நடந்து கொண்டார் கொண்டார் . . உதாரணமாக சவுரி சௌரா சம்பவத்தையே கூறலாம். 

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்ட போது கூட அவர்களுக்கு ஆதரவாக ஆங்கில அரசிடம் கோரிக்கை வைக்க கூட அவர் தயாராக இல்லை. அதே போல 1945 கப்பற்படை எழுச்சியின் போது அந்தப் போராட்டத்தை ஆதரிக்க மறுத்துவிட்டார். 

ஆனாலும் இந்திய மக்களை ஆங்கில அரசுக்கு எதிராக திரட்டுவதில் அவரது பங்கு மகத்தானதாக இருந்தது...

 அவர் முழுமையான சனாதன வாதியாக இருந்தபோது கூட ஏன் இந்து தீவிரவாதிகள் அவரை வெறுத்து கொலை செய்யும் அளவிற்கு சென்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது குறிப்பிடத்தக்கது ஆய்வுக்குரிய விஷயம்.... 

காந்தி இந்து மதத்தின் மீது தீவிரப்பற்று கொண்டவர் என்பதை விட முழுமையான சனாதான வாதி என்ற வகையில் வர்ணாசிரம தர்மத்தை ஏற்றுக்கொண்டவர். இந்து மதக்கோட்பாடுகளை தன் நடைமுறைவாழ்வில் கடைப்பிடிப்பவர். இந்தியாவில் ராமராஜ்யம் மலர வேண்டும் என்று ஆசைப்பட்டவர். அப்படியிருந்தும் கோட்சே ஏன் காந்தியைக் கொல்ல வேண்டும்... 

அவர் வர்ணாசிரமதர்மத்தைக் கடைப்பிடிப்பவர் என்றாலும் தீண்டாமைக்கு எதிராக மிகக் கடுமையாகப் போராடினார். அவர் தலித்துகளை ஹரியின் மைந்தர்கள் என்று அதாவது ஹரிஜன் என்றே அழைத்தார். 

அவர் இந்து மதப்பற்றாளராக இருந்த போதிலும், மதச்சார்பின்மை தான் இந்த நாட்டின் உயிர்நாடியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

இந்திய தேசியம் என்பது முஸ்லீம்களையும் உள்ளடக்கியது என்பதில் உறுதியாக இருந்ததால் தான் கொல்லப்படுவதற்கு பதினான்கு நாட்களுக்கு முன்னால் “ பெரும்பான்மை மக்களுக்கு மட்டுமே இந்தியா உரியது, சிறுபான்மையினர் அவர்களுக்கு அடங்கிக் கிடக்க வேண்டும் என்று சொல்வதற்கு எவருக்கும் உரிமையில்லை..” முழங்கினார்.மதவெறி தாண்டவமாடிய பகுதிகளுக்கு பாதயாத்திரையாக சென்று அமைதியை நிலைநாட்ட போராடினார்... 

மதநல்லிணக்கத்திற்காக தன்னுடைய உயிரைப் பணயம் வைத்தார். பிரிவினையின் போது நடந்த மதவெறி வன்முறைக்களத்தில் தன்னந்தனியராகச் சென்றார். அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த மவுண்ட் பேட்டன், “ உலகின் இரக்கமற்ற அந்த இரவில் ஆயுதமற்ற அந்த ஒற்றை மனிதர் பெற்ற வெற்றியை பஞ்சாபில் பலத்த ஆயுதங்களைக் கொண்ட 5500 ராணுவ வீரர்கள் பெற இயலவில்லை. மதவெறிக்கு எதிரான போரில் அவர் ஒற்றை மனிதப்படை ( one man army ) “ என்று சொன்னார்.

காந்தி சநாதனவாதி. ஆனால் அவர் தன்னுடைய குருவாகப் போற்றிய கோபாலகிருஷ்ண கோகலேயும், தன்னுடைய வாரிசாக அறிவித்த ஜவகர்லால் நேரும் நாத்திகர்கள்.அது மட்டுமல்ல, அனைத்து மதத்தினருக்கும் சமமான மரியாதை அளித்தார். இதில் நாத்திகமும் அடக்கம். நாத்திகவாதியான பேராசியர் கோராவுக்கு நேர்காணல் அளித்த காந்தி அதுவரை ' கடவுள் தான் உண்மை ' என்று சொல்லிக் கொண்டிருந்தவர் அந்த நேர்காணலுக்குப் பின் ' உண்மையே கடவுள் ' என்று தன் கருத்தை மாற்றிக் கொண்டவர்.

இந்த மாற்றம் அனைத்து மதப்பேரவையில் நாத்திகத்துக்கும் சமமான இடம் வழங்கப்பட்டுள்ளது.

காந்தி தனது லட்சியமாக அறிவித்த ராமராஜ்யம் பற்றி விளக்கினார் "ராமராஜ்யம் என்று சொல்லும்போது நான் இந்து ஆட்சி என்ற பொருளில் கூறவில்லை. பொருளிலேயே ராமனும் கூறுகிறேன் ரஹீமும் ஒன்று தான். வாய்மை மற்றும் நியாயம் என்ற கடவுளைத் தவிர வேறு எந்தக் கடவுளையும் நான் அங்கீகரிக்கவில்லை." 

ராமராஜ்யம் என்பது பொருளுடைமை, இல்லாமை, நிறம் இனம் குலம், பாலினம், ஆகிய ஏற்றத்தாழ்வுகள் நீங்கிய. நிறைவான ஜனநாயகம் என்று பொருள்படும்.  நிலமும், அரசும் மக்களுக்கே சொந்தமானதாக இருக்கும். நீதி என்பது காலந்தவறாததாக, முறையானதாக, செலவு குறைவானதாக, இருக்கும்.

 வழிபாட்டுச்சுதந்திரம், பேச்சுச்சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம், ஆகியவை இருக்கும்.

ஒரு அரசு வாய்மை மற்றும் அகிம்சையைப் பற்றி இருக்க வேண்டும். வளமான, மகிழ்ச்சிகரமான, தன்னிறைவு கொண்ட கிராமங்களையும், கிராமப்புறங்களையும் கொண்டிருக்க வேண்டும்..” என்று விளக்கமளித்தார்.

சுருக்கமாக சொல்வதானால் அவர் சொல்லக்கூடிய ராமராஜ்யத்தில் ஒரே படித்துறையில் புலியும் ஆடும் ஒன்றாக நீர் அருந்தி, ஒருத்தர் வாழ்வில் ஒருத்தர் குறுக்கிடா வண்ணம் சமாதான சகவாழ்வு வாழ்வது என்பது தான். 

இந்து மதக்கோட்பாடுகளைப் பின்பற்றுகிறவராக இருந்தாலும் காந்தி பகுத்தறிவும், அறவுணர்வும் தான் மதக்கோட்பாடுகளில் மேலோங்கியிருக்க வேண்டும். விரும்பினார்.

பகுத்தறிவுக்குப் பொருந்தாத, அறவுணர்வில்லாத எல்லா மதக்கோட்பாடுகளையும் பகவத்கீதையாக இருந்தாலும் திருக்குர்ஆனாக இருந்தாலும் சரி நிராகரிப்பதாகக் கூறினார். அதே போல எல்லாமதங்களையும் சமமாகக் கருத வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

 “என்னைப் பொறுத்தவரையில் பல்வேறு மதங்களும் ஒரே தோட்டத்தின் அழகிய பூக்கள் தான், அல்லது ஒரே மரத்தின் கம்பீரமான கிளைகள் தான்..” என்று சொன்னார்.

தன் வாழ்க்கையையே ஒரு திறந்த புத்தகமாக சிந்தனையும் வாழ்வும் ஒன்றாகவே இருந்ததால் தானே மகாத்மாவை இந்து மதவெறியர்கள் வெறுத்தனர்.

பிரிட்டிஷ் ஆண்ட அடிமை இந்தியாவில் பல ஆண்டுகளாக பத்திரமாக இருந்து போராடிய மகாத்மா சுதந்திரம் இந்தியாவில் மண்ணின் மைந்தர்களால் அதிலும் அவர் நேசிக்கிற இந்து மதத்தின் பாதுகாவலர்கள் என அறிவித்துக் கொண்டவரின் வெறியாட்டங்களால் ஐந்து மாதங்கள் கொலையுண்டார் என்பது மிகவும் துயரமானது.. 

ஒருவேளை மகாத்மா மதவெறியர்களால் கொல்லப்படாமல் இருந்திருந்தால், என்றோ காங்கிரஸ் கட்சி சனாதனவாதிகளின் கைப்பிடிகளுக்குள் சென்றிருக்கும். நேரு என்ற மதசார்பற்ற மனிதர்களை ஒதுக்கி வைத்தார்.. காந்தியின் படுகொலை சனாதன வாதிகளை மக்களிடமிருந்து தள்ளி வைத்தது. எனினும் சனாதன சக்திகள் மீண்டும் மேலோங்கிவிட்டது. அதன் விளைவு,  காந்தி படுகொலை செய்யப்பட்ட 70 ஆண்டுகளாக அவரைக் கொன்ற கோட்சேவுக்கு இந்தியா முழுவதும் சிலை வைக்க முயற்சிகள் நடந்தன வருகின்றன. 

"ரகுபதி ராகவ ராஜாராம்

பதீத பாவன சீதாராம்

ஈசுவர அல்லா தேரே நாம்

சப்கோ சன்மதி தே பகவான்." 

ஈஸ்வரனும் அல்லாவும் அவன் ஒருவனின் பெயரே என்று  இந்தப்பாடலின் கடைசி இரண்டு வரிகளை சொல்லிக் கொண்டேயிருக்கிறது. .



எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...