கார் போன்ற கூந்தலை உடையவளே! இருள் மண்டி சூழ்ந்திருந்த பொழுது கழிந்ததென்று, விடியலை வரவேற்க சிலிர்த்தெழுந்து, அழகான தனது கொண்டை குலுங்கிடவே, தொண்டை கிழியும் வண்ணம், கொக்கரக்கோ என சேவல் கம்பீரக்குரலில் துயிலெழுப்புகிறது.
தோட்டத்தில் பாலை வாரி வழங்கிட மடு நிறைந்த பசுக்கள் கூவி நிற்கின்றன..
விவசாயத் தொண்டாற்றிட விவசாயத்தொழிலாளர் தம்பணிக்கான குரலெழுப்பி கழனி நோக்கிச் செல்கின்றனர்.
தமிழ்கூறும் நல்லுழகின் பண்டைப்பெருமை மறந்து அதன் மேன்மை காத்திட மறந்து, கருவண்டு போன்ற விழிகளை மூடி உறங்குகிறாயே!
அண்டை மாநிலத்தார் ஆரியம் தினித்து நம்மை அடிமை கொள்ள வந்தது காண்பாயாக! மொழிகாக்க, இனம் காக்க ஏராளமாய் பணிகள் காத்திருக்கின்றன.. துயிலெழுவாய் என தமிழ்ப்பாவையரை அழைக்கிறார் பாவலரேறு பெருஞ்சித்திரனார்.....
**************
மண்டும் இருள்போய் மனைச்சேவல் சீர்த்தெழுந்து
கொண்டை குலுங்கிடவே கொக்கரக்கோ கோவென்று
தொண்டை கிழியத் துயிலெழுப்பும்! தோட்டத்தே!
மண்டுங் கறவை மடிநிரம்பிக் கூவிநிற்கும்;
தொண்டு புரியும் பணியாளர் பேச்செழும்பும்!
பண்டைப் பெருமைநலம் பண்ண மறந்தவளாய்,
வண்டு விழிமுடி வார்குழலும் தூங்குதியே!
ஆண்டை நிலத்தார் அடிமைகொள வந்தார்காண்!
உண்டு பணிகள்! உணர்கேலோ ரெம்பாவாய்!26
🙏 🙏 🙏🙏🙏
No comments:
Post a Comment