தமிழுக்கு கானம் பாடிய வானம்பாடிகளுக்கு முதல் வணக்கம்.... தமிழின் சீவனைக்காத்திட. தம் உயிரை பலி கொடுத்த. தமிழ் வீரருக்கு வீர வணக்கம்
எம்மொழி தமிழ் மொழி ஈடு இணை இல்லா எழில் மிகு தொன்மை மொழி எந்நாளும் வாழும் மொழி. ஏற்றம்மிகு இலக்கியங்கள் இயற்றிட்ட அழகு மொழி
அறம் பொருள் இன்பமென அத்தனையும் கண்டதமிழ் அகம் புறம் என வாழ்வியல் அற்புதம் கண்ட தமிழ். ஐவகை நிலம் கண்டு. ஆட்சி செய்த தமிழ்..
ஆயிரம் ஆண்டுகளாய் அகிலமெங்கும வனிகம் செய்து அகிலத்து மொழிகள் பல கற்று அன்னைத் தமிழையும் பரப்பி அகிலத்தோரை எல்லாம் கேளீரென அறைகூவியவன் தமிழன்...
அன்றாடம் வளரும் அறிவியலை அகிலத்தோடு கற்ற தமிழ்.. இத்தனைச் சிறப்புடன் இறுமாந்திருக்கும் தமிழனை அடக்க நினைப்போர். அவனுக்கு தூசு தான்..
அரிதாரம் பூசி அழகாய் பல்லிளித்து அண்டியே நுழைந்திட்ட இந்தியை, அதிகாரம் செலுத்திட, அனுமதித்திட அழிந்திட நாங்கள் என்றுமே அடிமைகளல்ல அருந்தமிழர்கள்.. அடங்கமாட்டான் என்றுமே தமிழன்..
எத்தனை எத்தனை போர்கள் எத்தனை எத்தனை சதிகள் எத்தனை எத்தனை தடைகள் எத்தனை எத்தனை வந்தாலும் எதிர்த்து களம்காண்பான் தமிழன்.. என்றுமே வென்றிடுவான் தமிழன்..
ஒழிந்தது தமிழென்று எதிரிகள் இறுமாந்த வேளை.... எழுந்திட்டார் பீனிக்ஸாக எழுச்சிமிகு தமிழர்... எம்மொழிகாக்க உயிர்த்தியாகம் எய்திட்டோருக்கு வீரவணக்கம்..
No comments:
Post a Comment