தமிழ் கூறும் நல்லுலகின் வாழ்வியல் சிந்தனை அறிவோம்
வாழ்நிலத்தின் அடிப்படையில் ஐவகை நிலங்களாக பிரிக்கப்பட்டு இயல்பு வாழ்க்கை முறை சிந்தனைகளை எடுத்து இயம்பியது நம் பண்டை தமிழ் இலக்கியங்கள்.
இது ஐங்குறுநூறின் வேட்கைப் பதிவில் உள்ள ஒரு பாடல்.இது மருத நில மக்களின் செழிப்பை, கரும்பு மற்றும் நெல் வயல்களில் செழித்து இருக்க வேண்டும் என்று விரும்பி பாடப்பட்டது.
ஆதன் அவினி என்பவன் சங்க கால சேர மன்னர்களில் ஒருவன். புலவர் ஓரம்போகியார் ஐங்குறுநூறு தொகுப்பில் உள்ள மருதத்திணை பாடல்களில் முதல் பத்திலுள்ள 10 பாடல்களையும் 'வாழி ஆதன் வாழி அவினி' என்று அரசவாழ்த்துப் பாடித் தொடங்குகிறார். இதில் ஆதன் என்பது தந்தையின் பெயர். அவினி என்பது மகன் பெயர்.
புலவர் ஓரம்போகியார் " பசி இல்லாமல் போகட்டும்! துன்பம் தரும் பிணியானது தொலைவிற்குச் சென்று நீங்கட்டும்!என்ற தமது உயரிய சிந்தனையை விதைக்கிறார்.
மன்னர்கள் பசி, பிணியின்றி வாழ வேண்டும்" எனத் தாய் வேண்ட, "ஆண் முதலை முழு மீனை உண்ணும் குளிர்ந்த நீர்நிலை ஊரன் (தலைவன்) தன் தேரில் வந்து என் முன் வாசலில் நிற்க வேண்டும்" எனத் தோழி (தலைவி) விரும்புகிறாள்
செழிப்பான குளிர்ந்த நீர்த்துறையை உடைய தலைவன் தன் ஊரில், ஆண் முதலை முழு மீனையும் உண்பது போல, தன் காதலியின் அருளைப் பேணாமல் அவளை வருத்துகிறான் என்ற கருத்தை, தலைவனின் செயலை உணர்த்தும் வகையில் தோழி கூறுவதாக அமைந்துள்ளது. ஆதன், அவினி வாழ்க! பசியும் நோயும் நீங்குக!" என்று தாய் விரும்புகிறாள். ஆனால், ஆண் முதலை முழு மீனை உண்ணும் குளிர்ந்த துறையையுடைய தலைவனுடைய தேர், தம் வீட்டு வாயிலில் நிற்க வேண்டும் என நம் தோழி விரும்புகிறாள்..
அனுபவம் அனைவருக்குமான நன்மையை நாடியது. வயது தன் துணையை தேடியது....
******************
வாழி ஆதன், வாழி அவினி!
பசி இல்லாகுக! பிணி சேண் நீங்குக!'
என வெட்டோளே, யாயே: யாமே,
'முதலைப் போத்து முழு மீன் ஆரும்
தண் துறை ஊரன் தேர் எம்
முன்கடை நிற்க' என வேட்டேமே.
**************
No comments:
Post a Comment