கூர்மையான அறிவு கொண்டவர்களே!குறைகளைக் களைந்து, வலிமையுடன் செயலாற்றும் ஆற்றல் மிக்கோரே! உங்களுடைய பெருமையையும், புகழையும் நிலைநாட்ட, அதன் மீது ஆணையிட்டு வாருங்கள்!. போத்தியிருக்கும் அறியாமையாகிய இருளை விலக்குவதற்காக, பெண்களாகிய உங்கள் புகழையும் சிறப்பையும் விளக்கிக் காட்டும், சிறந்த பெரிய மேகங்கள் போலக் கூடிச் செயல்படுங்கள். பகைவரால் தூர்ந்து போன புகழெல்லாம், தொன்மையான தமிழர் பட்டபாடெல்லாம், அழகிய, நீண்ட, பெரிய கண்களைக்கொண்ட பாவையரால் மீண்டும் பெற வேண்டி, வார்க்கப்பட்ட படைநடைகல்புகழ் வழிவழியாக நின்று புகழ்பாடும் சீரினைப்பெற்றிடுவீர்! சீறிப் போர்ப் பரணி பாடிடவாராய் பாவையரீர் என பாவலரேறு பெருஞ்சித்திரனார் அழைக்கிறார்...
*****************
கூர்த்த மதியீர்! குறைகடியும் வல்விறலீர்!
ஆர்த்த பெரும்புகழ்மேல் ஆணையிட்டே ஆர்த்தெழுவீர்!
போர்த்த இருள்விலகப் பூவையர்னும் சீர்விளக்கச்
சீர்த்த பெரும்புயலா வல்பிடியாச் செற்றிடுவீர்!
தூர்த்த புகழெல்லாம் தொல்தமிழர் பாடெல்லாம்
ஏர்த்தடங்கண் பாவையரால் மீண்டும் எழுந்தவென்றே
வார்த்த நெடுங்கல் வழிவழிக்கே நின்றுரைக்கும்
சீர்த்தி பெறுகவீர்! செற்றேலோ ரெம்பாவாய்!30.
-1965. இந்தியெதிர்ப்பு போரின் போது வேலூர்ச்சிறையுள்
பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள் சிறைப்பட்டிருந்த போது பாடியது.)
No comments:
Post a Comment