அழகான கண்களையுடைய பெண்ணே!
எந்த ஒரு மொழிக்கு ஆபத்து என்றாலும் முதலில் உணர்பவர்கள் ,பாதிக்கப்படுபவர்கள், மாணவர்களும் இளைஞர்களும் தான். ஏனெனில் கற்றுக் கொண்டிருப்பவர்களும், அன்மையில் பயின்றோராகவும் அவர்கள் தான் இருப்பார்கள். அதனால் தான் தமிழ் மொழிக்கு ஆபத்து என்று வந்தபோது மாணவர்களை மொழி காக்க வேண்டி நின்றோம். அதை உணராத மற்றவர்களிடம் கால் பிடித்து கேட்டு நின்றோம். மொழிக்கு இழுக்கு நேரும்போது வெட்கப்படாத மக்களுக்கு நல்ல அறத்தைப் பாடி நின்றோம்.இதை உணராமல் தமிழுக்கு தீங்கு விளைவிக்க எண்ணும் வீணர்களெல்லாம் வீர தமிழ்க்குல பெண்கள் வெகுண்டெழுந்தால், தூன் போல உறுதியுடன் இருந்தாலும் துண்டு துண்டாக நொறுங்கிப்போவார்கள்..எனவே வெற்றி பெற விழித்தெழுவாய். உயர்ந்த மலைகளின் மேல் செந்தமிழின் புகழைப் பொறித்து வைப்பாய்!வெட்கத்தை ஒதுக்கு! பயத்தை நசுக்கு!மொழி காத்திட துயில் கொண்டோமெனும் குறைபாடுகளை நீக்குவாயாக என பாவலரேறு பெருஞ்சித்திரனார் அழைக்கிறார்...
பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் இப்பாடல் தமிழர்களின் வீரம், மானம், தன்னம்பிக்கை, மற்றும் தமிழின் பெருமையை நிலைநாட்ட வேண்டும் என்ற உத்வேகத்தை வலியுறுத்துகிறது, பெண்களை எழுச்சியுறச் சொல்லி, அச்சத்தையும் வெட்கத்தையும் தவிர்த்து, தமிழின் புகழை உயர்ந்த மலையில் பொறிக்கச் சொல்கிறது.
தமிழர்களே! வீணர்களாக இராமல், பெண்கள் உட்பட அனைவரும் எழுந்து நின்று, தங்கள் மானத்தையும், தமிழ் மொழியின் பெருமையையும் நிலைநாட்ட வேண்டும், அச்சத்தையும் வெட்கத்தையும் உதறித் தள்ளி, குறைபாடுகளை நீக்கி, தமிழின் புகழை உலகறியச் செய்ய வேண்டும் என்பதையே இப்பாடல் வலியுறுத்துகிறது.
*****************
மாணவரை வேண்டினோம்; மற்றவரைக் கால்பிடித்தோம்!
நாணமிலா மக்களுக்கு நல்லமறம் பாடிநின்றோம்!
வீணவரே இந்நிலையில் பெண்டிர் வெகுண்டெழுந்தால்
தூணவரே ஆனாலும் துந்துரும்பாய்ப் போவார்காண்!
பூணுதியே வெல்பெருமை! பூங்கண்ணே நீவிழிப்பாய்!
சேணுயர்ந்த குன்றின்மேல் செந்தமிழின் சீர்பொறிப்பாய்!
நாணம் ஒதுக்கிடுவாய்! அச்சம் நசுக்கிடுவாய்!
கோணா தெழுந்துகுறை போக்கேலோ ரெம்பாவாய்! 17
🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment