சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 7 January 2026

செந்தமிழ்ப் பாவை 22

 இளமையெல்லாம் தேக்கி செழித்து வளர்ந்த, அழகான, நல்ல இளம் பெண்ணே!பூக்கள் பரப்பிய புதிய பஞ்சணையின் மீது உறங்கிக் கொண்டிருக்கிறாயே!தொன்மையும், சிறப்பும் வாய்ந்த தமிழின் பல வளங்களும், சிறப்பும் மங்கிவிட்டன பார்!அந்தப் பழைய பெருமைகள் அழிந்துவிட்டன பார்!. அதன் விளைவால் வாழ்வில் உயர்வு காணாத நம் இளைஞர் ஊக்கம் குறைந்து சோர்வானார். நெஞ்சம் முழுதும் ஏக்கம் நிறைந்தவரானார். வெறும் சோற்றுக்கோ ஏங்கி நின்றார். இந்நிலை உணர்ந்து தமிழும், தமிழ் சமுதாயமும் மீண்டெழும் நோக்கம் கருதியே மெல்லிடை கொண்டவளே! கணல் போன்று நம்தமிழைக்காக்க எழுந்திடுவாய் என பாவலரேறு பெருஞ்சித்திரனார் துயிலெழுப்புகிறார். 

******************

தேக்கும் இளமை திரண்டெழுந்த நற்பாவாய்!

பூக்கும் மலரின் புதுப்பஞ் சணைமேலே

தூக்கம் வளருதியே! தொல்தமிழும் பல்வகையோ

ஆக்கம் தளர்ந்ததுகாண்! அற்றைச்சீர் மாய்ந்ததுகாண்!

ஊக்கம் குறைந்தார் உயர்வறியா நம்மிளைஞர்!

ஏக்கம் நிறைந்தார்! இடுசோற்றுக் கேங்கிநின்றார்!

நோக்கம் கருதியே நுண்ணிடையாய் நந்தமிழைக்

காக்க எழுவாய் கனன்றேலோ ரெம்பாவாய்!22

🙏🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...