சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 4 January 2026

செந்தமிழ்ப் பாவை 19

 இயற்கையான ஒளியும் அழகும் உடைய பெண்ணே! மஞ்சள் பூசி நிலவு போல் முகமும் கார்குழலில் மல்லிகைச் சரம் சூட்டி அழகாய் செஞ்சாண்டு பொட்டு வைத்து சிரித்த முகத்தோடு வஞ்சியே, வாள்விழி மூடி இரவு போனது அறியாது, செஞ்சூரியன் உதித்ததும் அறியாமல் துயில் கொள்கிறாயே! நாட்டை ஆண்டு கொண்டிருப்போர் நம் தமிழ் மீது நஞ்சை தெளித்துக் கொண்டிருக்கிறார், அருந்தமிழர் அஞ்சி நிலை குலைந்து போய் உள்ளார். மிகுந்த விரகத்தினால் வீரம் மங்கிப் போகுமுன்னே, பகையினை பஞ்சு போல மென்மையாக ஊதி பறந்து போயிட, விழித்தெழுவாய் ஆரணங்கே என பாவலரேறு பெருஞ்சித்திரனார் அழைக்கிறார்... 

****************

மஞ்சள் மதிமுகமும் மல்லிகைசேர் வார்குழலும்

செஞ்சாந்துப் போட்டு சிரிக்கும் எழிலோடு

வஞ்சி இராமுழுதும் வாள்விழியும் மூடியளாய்த்

துஞ்சி யிருக்கின்றாய்! செம்பரிதி தோன்றினால்!

நஞ்சைத் தமிழ்மேல் தெளிக்கின்றார் நாடாள்வார்.

அஞ்சிக் குலைந்தார் அருந்தமிழர் ஆரணங்கே!

விஞ்சும் விரகால் விறல்மறந்து போகுமுன்னே

பஞ்சென்றே ஊதாய், பகையேலோ ரெம்பாவாய்! 19

🙏🙏🙏🙏

No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...