Friday, 9 August 2024
அபுதாபியில் நாங்கள் 2
சின்ன வயசில் சென்னை என்றாலே திரைப்படங்களில் ஞாபகம் வருவது 14 மாடி கட்டிடம் தான் .
அண்ணாந்து பார்க்கிறே மாளிகை கட்டி
அருகில் ஓலை குடிசை கட்டி
பொண்ணான உலகென்று பேரு வைத்தால் இந்த பூமி சிரிக்கும்
அந்த சாமி சிரிக்கும் என்று MGR
படத்தில் வரும் பாடல் நினைவுக்கு வரும்.
அபுதாபியில் திரும்பிய பக்கமெல்லாம் பல மாடி கட்டிடம் தான்
பார்க்க பார்க்க பிரமிப்பு தான்..
Thursday, 8 August 2024
அபுதாபியில் நாங்கள்
விமானத்தில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கும் என் மனைவிக்கும் ரொம்ப நாளா க இருந்தது.வெளிநாட்டு பயணம் எண்பது வெறும் கனவு மட்டுமே.....
உள்நாட்டு விமானத்திலேயே பயணம் செய்யவில்லை .இதிலென்ன வெளிநாட்டு பயணம் வேண்டிக்கிடக்கிறது என்று நினைத்திருக்க ஒரு நாள் இளைய மகன் அபுதாபி வர வேண்டும் என வற்புறுத்தி அழைத்தார்.
சரி போகலாம் என்று நினைத்தால் பாஸ்போர்ட் வாங்கவில்லை.உடனே தட்கல் முறையில் ஏற்பாடு செய்து விசா வாங்கி அனுப்பி வைத்தார்
ஒரு வழியாக எல்லாருடைய வழி அனுப்புதலுடன் வந்து சேர்ந்தோம்
இப்படியாக எங்கள் கனவு நிறைவேறியது
Subscribe to:
Posts (Atom)
சமநிலை காப்போமெ
காடுகள், ஆறுகள், பறவைகள், விலங்குகள் தூய்மையான காற்று ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்..... புகை, எண்ணெய், தொழிற்சாலைகள், கான்கி...
-
பணி ஓய்வு பெறும் போது ஒரு நண்பர் ஆலோசனை வழங்கினார். ஏனெனில் அவர் பணி ஓய்வு பெற்றவர். பொதுவாகவே பணி ஓய்வு பெற்றபின் வேலை பார்த்த அலுவலகங்களு...
-
நான் முதன் முதலாக பணிக்கு சேர்ந்த இடம் திருவரங்குளம் ஆரம்ப சுகாதார நிலையம் என்று சொல்லி இருந்தேன். இந்தியாவிலேயே முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்...
-
ஒன்பது வயது சிறுவனாக, ஒரு வாரம் பருத்திப் பறித்துச் சம்பாதித்த ஒரு நிக்கல் நாணயத்தை சட்டைப்பையில் வைத்துக்கொண்டு ஒரு உணவகத்திற்குள் நுழைவத...























