Seeni.Karthikeyan pages

சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 3 July 2026

சமநிலை காப்போமெ


காடுகள்,

 ஆறுகள், 

பறவைகள், 

விலங்குகள்  

தூய்மையான காற்று 

ஒருபுறம்

இயற்கை தந்த

அருட்கொடையயாய்..... 


புகை, 

எண்ணெய்,

தொழிற்சாலைகள், 

கான்கிரீட் காடுகள் 

இயந்திரங்கள்

மறுபுறம்

வளர்ச்சி என்ற பேரில்.. 


 ஆனாலும் 

 கேட்கிறோம்

நாம் 

பூமி ஏன் சமநிலையை இழக்கிறதென

அறியாப்புள்ளை

போலே... 

மரங்களைப் புதைத்து, 

ஆறுகளை நஞ்சாக்கி, 

வனவிலங்குகளை 

வீடற்றவர்களாக்கி

பூமி வாழத் தகுதியற்றதாக்கி

முன்னேற்றமிதே என்கிறோம். 


 வளர்ச்சிக்கு எதிரானதல்ல இயற்கை

வேண்டுகிறது சமநிலையை இயற்கை.. 

வாழ்வோமே விவேகமாயிருந்தால்

வீழ்வோம் சமநிலை மறந்தால்... 


சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...