அதே இடம்.
அதே மரம்..
காலங்கள் வேறு.
காட்சிகள் வேறு..
நேற்றைய காட்சி இன்றில்லை.
இன்றைய காட்சி நாளையில்லை..
மாற்றங்கள் இல்லா
காட்சிகள் இல்லை..
மாற்றங்களை மறந்தாலும்,
மாற்றங்கள மறுத்தாலும்,
வந்திடும் தொல்லை..
மதித்து ஏற்றுக் கொண்டாலதுவே
மகிழ்ச்சியின் எல்லை...

No comments:
Post a Comment