இனிய மலரினும் மேலான பெண்பாவாய்! மாணிக்கம் போன்ற சிவந்த சூரியன் பெரிய கடலில் இருந்து மேலே எழும்பும். வலைஞர் திரைகடலோடி படகுகளேறி வலைகளை வீசி, மீன்களைப் பிடித்துத் துறைமுகத்திற்குத் திரும்புவார் . உழவர்கள் கதிரவன் எழுவதற்கு முன்பே உழவுத் தொழிலைத் தொடங்குவார். இருள் சூழ்ந்த பொழுதில் நாணும் குணமுடையோரான மகளிர் குளிப்பதற்காக நீர் குளக்கரையில் செல்கின்ற பொழுதில், அவர்களின் வளைக்குடங்கள் கிண்கிணிக்கும்படி சத்தம் எழுப்புகின்றன. இங்ஙனம் உலகமே விழித்தெழும்போழ்தில் உறங்குதல் முறையோ? பொலிவு நிறைந்த தமிழை பேணும்பொருட்டு பெண்புலி போன்றவளே நீ விழித்தெழுந்தால் ஆரியர் தாம் பிழைப்பாரா? தூண் கூட துரும்பாகிவிடாதா? துணிந்தெழுந்திடுவாய் தமிழ்ப்பாவாய் என பாவலரேறு பெருஞ்சித்திரனார் துயிலெழுப்புகிறார்...
****************
மாணிக்கச் செம்பரிதி வார்கடலை விட்டெழும்பும்;
தோணி வலைவீசித் தோய்துறைக்கு மீண்டுவரும்;
காணி உழுதார் கதிரெழுமுன் வேளாளர்!
நாணும் மடவார் இருளுடையில் நீர்குடைவார்!
கேணிக் கரையில் வளைக்குடங்கள் கிண்கிணிக்கும்!
பூணுதியே பேயுறக்கம்! பூவாய்! பொலிதமிழைப்
பேண வெழுந்தால் பிழைப்பாரா? பெண்புலியே!
தூணுந் துரும்பாம்! துணிவேலோ ரெம்பாவாய்!28
🙏 🙏 🙏🙏🙏🙏
No comments:
Post a Comment