சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 13 January 2026

திராவிடம் என்றும் வெல்க...

ஆயிரம் ஆண்டுகளாய்  ஆரியத்தின் ஆலிங்கனத்தில் அகப்பட்டழிந்தது அருந்தமிழர் வாழ்வு.

சனாதான சதிகளால் சாதிகளென சீரழிந்தது செந்தமிழனின்        சீர்மிகு வாழ்க்கை...

அந்நியர் ஆங்கிலேயர் ஆள்பவர் ஆட்சியில் எவர்வரினும்        அதிகாரம் செய்திட புகுந்தார்!   

எங்கும்  எதிலும் ஆரியமென எதனிலும் புகுந்து ஆதிக்கம்  எய்திடச் செய்தார்..

ஆண்ட தகுதி இழந்த தமிழரோ ஆண்ட பரம்பரை நாங்களென்றார் அர்த்தமில்லா கதை ஆயிரமளந்தார்.

ஆரியத்துக் கடிமை நிலையாகி ஆரியம் படைத்த நால்வர்ணத்தை  அடிமையாக்கினர் மக்களை.. 

அங்காளி பங்காளி சண்டையில். ஆளும் உரிமைப்போட்டியில் அன்னியருக்கு அடிமையானார். 

திராவிடமெனும் பதாகையின்கீழ் தீந்தமிழர் வாழ்வு பெற                தமிழர் தலைவர்கள் போரிட்டார். 

தமிழர் அனைவரும் திரண்டு      தமிழ் பகை ஒழித்திட                  தாரினி அதிர முழக்கமிட்டார். 

திராவிடம் வென்றது, தமிழர்  திறமாக ஆட்சி செய்தார்.      திகழ்ந்தது வளர்தமிழகமாக.. 

பல பத்தாண்டுகள் தமிழகத்தில் புதுமை ஆட்சி தந்தார்,                புதுமை சட்டம் பலதந்தார்.. 

ஆதிக்கம் பறிபோன ஆரியர்  ஆத்திரத்தில் புலம்புகிறார்    திராவிடத்தால் விழுந்தோமென..

அடிமைகளை இழந்தாலே        ஆரியர் புலம்புகிறார்கள்  அவரடிமைகளும் புலம்புகிறார்... 

தெரு நாய்களும்  குறைக்கின்றன திராவிடத்தால் விழுந்தோமென  திராவிடம் தீய சக்தியென..... 

உரக்க சொல்வோம், உயர்ந்தோம் உலகினில் தமிழரின்று            உன்னத திராவிடத்தாலின்று.

அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்...

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

1 comment:

  1. வெல்க திராவிடம்.மனித நேயம்

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...