புதுக்கோட்டை மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மருந்தாளுநராக பணி மாறுதல் பெற்று செல்லும்போது அறுவை கிடங்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டேன். வாராவாரம் மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர்கள் செவிலிய கண்காணிப்பாளர் மருந்து கிடங்கு பொறுப்பாளர்கள் புடை சூழ சுகாதார சுற்றுப்பயணங்கள் தலைமை மருத்துவமனையில் நடத்துவார்கள்.
மருத்துவமனைகளில் சுகாதாரச் சுற்றுப்பயணங்கள், சுத்தம், சுகாதாரம் மற்றும் தொற்றுக்கட்டுப்பாட்டு நெறிமுறைகள் கடுமையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்காக, வழக்கமான ஆய்வுகளாகும். மருத்துவமனை நிர்வாகிகள் மற்றும் செவிலியர் மேற்பார்வையாளர்களால் வழிநடத்தப்படும். .இக்குழுவினரோடு கிடங்கு பொறுப்பாளர் என்ற முறையில் உடன் செல்ல வேண்டியது நமது கடமை. . உள் நோயாளிகள் பிரிவு அறுவைஅரங்கு போன்ற இடங்களில் பயன்படுத்த முடியாத அளவுக்கு கழித்தொதுக்கம் செய்யப்பட வேண்டிய அறுவை உபகரண கருவிகள் நிறைய இடங்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும். தொடர்ச்சியாக கழித்தொதுக்கம் (கண்டனம்) செய்யப்படாததால் அல்லது பழுது பார்க்கப்படாததால் அவை கிடத்தப்பட்டிருக்கும் . .
அப்போது மருத்துவமனை கண்காணிப்பாளராகப் பொறுப்பாளர் மருத்துவர் ஜி எட்வின் அவர்கள் எனக்கு மிகவும் பரிச்சயமானவர் . என் மீது அன்பு கொண்டவர் நான் அறிவொளி இயக்கப் பணிகளில் செயல்படும்போது எனது சமூகப் பணிகளைப் பாராட்டி எனக்கு மிகவும் உதவி செய்வார் . அதேபோல மாவட்ட தலைமை மருத்துவமனையில் அவர் இரத்த வங்கி பொறுப்பாளராக இருந்தபோது எனக்கு தெரிந்த நண்பர்களை திரட்டி ரத்ததான கழகங்கள் அவருக்கு உறுதுணையாக இருந்தேன். அவர் அறுவை சிகிச்சை உபகரண கருவிகள் கழித்தொதுக்கம் செய்வதில் திட்டமிட்டு ஏதாவது செய்யுங்கள் என்று பணித்தார். என்னுடன் அறுங்கை உபகரணகிடங்கில் பணிபுரிந்த மருந்தாளுனர் திரு கனக முத்து என்னோடு ஒத்த கருத்து உடையவர்.
முறைப்படி வரிசைக்கிரமமாக பட்டியல் தயார் செய்து மருத்துவமனை கண்காணிப்பாளர் அல்லது இணை இயக்குநரது அதிகார வரம்பிற்கு உட்பட்ட அளவிற்கு கழித்தொதுக்கம் செய்வது என்பது மிக நீண்ட பணி. இருந்தால் போதும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வத்துடன் நான் ஒரு சுற்றறிக்கை தயார் செய்து அனைத்து உள் நோயாளிகள் பிரிவு அறுவை சிகிச்சை அரங்குகளில் கழித்தெடுக்க வேண்டிய பொருட்களின் பட்டியல்களை தயார் செய்து தருமாறு எல்லோருக்கும் அனுப்பினேன் அப்பட்டியலில் அப்பொருள்கள் பெற்ற தேதி உபயோகப்படுத்திய காலம் அதன் விலை காரணமாக அனைத்தையும் சேகரித்தேன் . அது ஒரு மிக நீண்ட , பெரிய பணியாகும்
அதிர்ஷ்டவசமாகவோ அல்லது எதார்த்தமாகவோ அப்போது சுகாதார பணிகள் திட்ட மேலாண்மை இயக்குனராக இருந்த பங்கஜ் குமார் பன்சால் ஐஏஎஸ் அவர்கள் தமிழகமெங்கும் மருத்துவமனைகளில் கழிப்பறைக்கான பட்டியல் தயார் செய்து அனுப்புமாறு பணித்தார். நான் ஏற்கனவே அந்தப் பணியை துவக்கி விட்ட காரணத்தால் எனக்கு மிகவும் எளிதாக அமைந்தது
ஏறக்குறைய 60 ஆண்டுகளாக இருந்த உபகரண கருவிகள் உள்ளிட்ட பயன்பாட்டில் கருவிகள் உள்ளிட்ட பட்டியலைச் செய்து வைத்திருந்ததால் உடனடியாக அதை மருத்துவத்துறை இயக்குநரகத்திற்கு சமர்ப்பித்தோம் ஒரு சிறப்பு ஆணையமாக அரசிடம் இருந்து செலவழித்து ஆணை பிறப்பிக்கப்பட்டது அதன் மதிப்பு கிட்டத்தட்ட 37 லட்ச ரூபாய் அந்த சாதனையாக அமைந்தது. இதன்மூலம் மருத்துவமனையில் இருந்து மிக நீண்ட காலம் பயன்பாட்டில் இல்லாத பழுது நீக்கம் செய்ய முடியாத நிலையில் அறுவை சிகிச்சை உபகரணம், கருவிகள் கழித்தொழில் செய்ததால் செவிலியர்களுக்கும் இருந்த மிகப் பெரிய சுமை குறைந்தது . நான் முதலில் பணியில் சேர்ந்த போதே திருவரங்குளம் அரசினர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கோபண்ணா அவர்கள் எனக்கு மிகச் சிறந்த பயிற்சிகள் கொடுத்திருந்தார் ..
அறுவை சிகிச்சை கருவிகள் மற்றும் மருத்துவ இயந்திர உபகரணங்களின் பதிவுகள் இரு பதிவேடுகளில் முதன்மை இருப்பு மற்றும் அவசர இருப்பு / ஒதுக்கப்பட்ட இருப்பு முறையே தனித்தனியாக பதிவு செய்ய வேண்டும்.
அவசர இருப்பு / ஒதுக்கப்பட்ட இருப்பு பதிவேடு என்பது பொருள்களை வரவு செய்து உள்நோயாளிகள் போன்ற பிரிவுகள் பல துறைகளுக்கு வழங்கப்பட்டது, மீதம் உள்ளதை தொடர்ந்து பராமரித்தல் ஆகும். அதன் மூலம் மற்றவை முதன்மை கிடங்கில் கையில் இருப்பு இருக்கும். அதை சோதித்து சரி பார்த்துக் கொள்ளலாம்.
அதேசமயம் முதன்மை இருப்பு பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட பொருட்கள் என்பது ஒட்டுமொத்தமாக நிறுவனத்தின் கையிருப்பை கொண்டிருக்கும் அப்பொருள்கள் கழிந்ததும் அல்லது நிரந்தரமாக வேறு நிலையங்களுக்கு மாற்றப்படும் போது மட்டுமே கணக்கில் இருந்து கழிக்கப்படும்.
மருத்துவ இயந்திர உபகரணங்கள் பழுது ஏற்படும் போது பழுது நீக்க பதிவேட்டில் பதிவு செய்து அது சரி செய்த விபரம் அதற்கான செலவுகள் குறித்து வைத்திடல் வேண்டும் .
ஒரு மருத்துவ உபகரணம் அடிக்கடி பழுது ஏற்படும்போது இதுவரை பழுதுநீக்கம் செய்யப்பட்ட செலவுகள் , புதிதாக செலவு பண்ண வேண்டிய தொகை ஆகியவற்றின் மதிப்பு மொத்த மதிப்பீட்டை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அதிகம் என்று கருதினால் அப்பொருளைக் கழித்தல் செய்யலாம்.
மருத்துவக் கருவிகளுக்கான பொறியாளர் மருத்துவ உபகரணங்கள் பழுது ஏற்படும் போது பழுது நீக்கம் செய்ய முடியாத நிலையில் அல்லது அதற்கான உதிரிப் பொருட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளதால் கழித்தால் சான்றிதழ் வழங்கினால் கலித்தொகை செய்து விடலாம்.
கழித்தொடுக்கம் செய்யப்படவேண்டிய சிகிச்சை கருவிகள் மற்றும் உபகரண பொருட்கள் ஆகியவற்றிற்கான பட்டியலை தயார் செய்து அதற்கான காரண காரியங்களை பரிசீலித்து அதற்கென உள்ள குழு நிதி அதிகாரத்திற்கு ஏற்ப கழித்தொடுக்கம் செய்து ஆணையிடும்.
Condemnation என்பதன் நேரடி மொழி மாற்றமானது கண்டிக்கப்பட்ட என்று வரும். பொருள்களை தொழில் நுட்பரீதியாக பார்த்தால் கழித்து ஒதுக்கிவைத்தலேயாகும். அரசில் கழித்து ஒதுக்கம் செய்யப்பட பொருள்கள் ஏலம் விடப்பட்டு தொகை அரசு கருவூலத்தில் செலுத்தப்படும்.ஏலம் விடுதல் auction ஆகும்.
ஒரு மருத்துவமனைஅறுவை கருவிகள் மற்றும் மருத்துவ உபகரணங்களை பெறுவதில் இருந்து, முதன்மை பதிவேட்டில் பதிவு செய்தல், அவற்றை விநியோகம் செய்தல், பழுது ஏற்பட்டால் பழுது நீக்கம் செய்தல், கடைசியாக கழித்தொழில் செய்து முதன்மை பதிவேட்டில் கழித்தல் வரை அனைத்து இடங்களிலும் மருந்தாளுனரின் பங்கு முதன்மையாக உள்ளது.
வெளி பார்வைக்கு அறுவை சிகிச்சை தொடர்பான பணிகளில் மருந்தாளுனருக்கு பங்கே இல்லாதது போல தோன்றினாலும், அனைத்து துறைகளுக்கானமருத்துவ கருவிகள் மற்றும் உபகரணங்களோடு உள்ள தொடர்பு பணியும் மிகவும் முக்கியமானது.
ஆனால் வெளி உலகத்திற்கு தெரியாதது , பெரிதாக யாராலும் மதிக்கப்படாதது என்பதுதான் வருத்தத்திற்குரிய விஷயம்.
Super Sir. Very useful.
ReplyDelete