சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 13 June 2026

பூவுலகு காப்போம்..

 சுட்டு எரிக்கிறதா சூரியன்?! 


சூரியனின் வெப்பம் ஒன்றும் கூடி கூடிடவில்லை. அது மில்லியன் கணக்கான ஆண்டுகளாக அதே வெப்பத்தில் தான் தகித்துக் கொண்டிருக்கிறது. இப்பூலகில் அதனுடைய வெப்பம் நம்மை தாக்காமல் தடுத்துக் கொண்டிருந்த இயற்கை அமைப்பினை நாம் சீரழித்ததனால் அதனுடைய வெப்பம் நமக்கு நேரடியாக தெரிய ஆரம்பித்து இருக்கிறது.. அவ்வளவு தான்!. 

ஐந்தறிவு வரை கொண்ட விலங்குகளுக்கு இந்த விஞ்ஞான உண்மை தெரிவதில்லை. ஆனால் இப்பூவுலகின் தன்மையை அழிக்கவும் இல்லை. ஆறறிவு படைத்த மனிதர்கள் மட்டுமே அத்தனையும் ஆராய்ச்சி செய்து, அறிவியல் உண்மைகளை கண்டறிந்து, எல்லா உண்மைகளும் தெரிந்து கொண்டு  இயற்கை காடுகளை அழித்து நாசமும் செய்துவிட்டு, ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுச்சூழல் பாதுகாப்பு தினம் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதை விட கேலிக்கூத்தான விடயம் ஒன்று இருக்கிறதா என்ன?! 


No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...