சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 18 June 2026

இனி எல்லாமே சைவம் தான்....

 


காட்டிலே தேர்தல் வந்தது

 ஆடுகள் ஆனந்தமாய் கூடின

 மாற்றம் வேண்டும் என்று கூவின


நரியார் கம்பீரமாய் வந்தார் 

சுற்றி சுற்றி வந்தார் 

சிரித்த முகத்தோடு வந்தார் 


அல்லக்கைகள் சத்தமாய் அலறின 

மாற்றம் மாற்றம் வேண்டுமென

ஆடுகள் மாற்றமென ஆமோதித்தன.


 நரியார் மென்மையாய் கூறினார் 

அடக்கமாய் அமைதியாய் கூறினார் 

ஆட்சிக்கு வந்தால் சைவம் ஆகிடுவேன்..


அல்லக்கைகள் சத்தமாய் கதறின 

இனி சைவம் சைவம் சைவம்.. 

ஆடுகளும் சைவமென கத்தின... 


நரியார் ஆட்சிக்கு வந்தார் - இனி 

நாம் சைவமே என்ற சூளுரைத்தார்

சைவம் சாப்பிடும் ஆடு மட்டுமே 

சமைத்து வர ஆணையிட்டார்..... 



No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...