நான் மருந்தாளுனராக பணியில் சேர்ந்தபோது ஆங்கிலத்தில் pharmacist என்பதற்காக விளக்கத்தை எனது முன்னோடிகள் கூறுவார்கள். எங்கள் மாநில மாநாட்டு மலரில் படித்தது மனப்பாடமாக உள்ளது. இதன் படி பணிபுரிந்தால் உண்மையில் சிறந்த மருந்தாளுனராக பணிபுரிந்திட முடியும்...
P - punctuality
H- humanity
A--ability
R-Reliability
M-Morality
A-Acceptance
C-Ccordiality
I-Integrity
S-Sincrarity
T-Tolerence
Punctuality நேரம் தவறாமை என்பது மருந்தாளுனரைப்பொறுத்த மட்டில் பணிக்கு உரிய நேரத்தில் வருவது மட்டுமே என்பது அல்ல. உரிய நேரத்தில் மருந்துகளை பெற்று வழங்கலேயாகும்.
The right drug should be given in the right time, in right dosage , in the right direction. என்பதே மருந்தாளுநரின் தாரகமந்திரம்.
Humanity எனும் மனிதாபிமானம்தான் மருத்துவ உலகின் அடிப்படை தத்துவம். மனிதத்துவம் மீது அன்பு கொண்டு அவர் உயிர் காத்திடமருந்துகள் வழங்கி பிற துறைமருத்துவ சேவைகள் பெற்றிட உழைத்திடுவது மருந்தாளுனரின் இயல்பான பண்பாகும்.
Ability எனப்படும் திறன். மருத்துவ துறையில் அனைத்து விதமான சேவைகளும் தடையின்றி கிடைக்க, ஒருங்கிணைந்த பணியில் முதன்மையானவர் மருந்தாளுனர்.
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்துஅதனை அவன்கண் விடல்.என்கிறது திருக்குறள்.
:ஒரு செயலை இன்ன வழியால், இன்ன காரணத்தால் இவன் செய்து முடிப்பான் என்று நன்கு ஆராய்ந்து, அந்தச் செயலை அவனிடமே ஒப்படைக்க வேண்டும் என்கிறவகையில் திறம்பட ஒருங்கிணைப்பு பணியாற்றுகிறார் மருந்தாளுனர்.
Reliability எனும் நம்பகத்தன்மையுடன் நோயாளிகள் உயிர் காத்திட மருந்துகள் தரத்துடன் கிடைத்திடும் வகையில், சேகரித்து முறையாக தகுந்த விதத்தில் பராமரித்து, காலாவதியாகிவிடாமல் முறையாக மருந்து கிடைத்திட உழைப்பவர் மருந்தாளுனரே...
Morality எனும் ஒழுக்கமாகிய உயிர்ப்புடன் தனது மருந்தியலுக்கான நெறிமுறைகளை கடைப்பிடித்திடும் பண்பு மிக்க மருத்துவ பணியாளர் மருந்தாளுனர் ஆவார்.
Acceptance எனும் ஏற்றுக்கொள்ளுதலாகிய உயரிய முதிர்ச்சியுடன் தனக்கு பெயரும் புகழும் கிடைக்காவிட்டாலும் , புகழுக்கு மயங்காமல், அவமதிப்பு க்கும் கலங்காமல், பொறுமையுடன் மக்கள் பணியாற்றுபவர் மருந்தாளுனர் ஆவார்.
Cordiality எனும் நல்லுறவினை நோயாளிகளிடம் பேணி மருந்து தொடர்பான நல்ஆலோசணைகளை வழங்கி மருந்தியலின் சிறப்பம்சங்களை கொண்டு செயல்படுபவர் மருந்தாளுநராவார்.
Integrity ஒருமைப்பாடு மருத்துவ துறை, பணியாளர்கள் நோயாளிகள் ஆகியோருக்கிடையே நட்புறவு பாலமாக செயல்படுபவர் மருந்தாளுநராவார்.
Sincerety எனும் நேர்மை, அர்ப்பணிப்பு உணர்வுடன் இயன்றவரை மக்கள் நலப்பணியினை சிறப்பாக செயலாற்றிபடுபவர் மருந்தாளுனர் ஆவார்.
Tolerance எனும் சகிப்புத்தன்மையுடன் தனக்கு உயர்வுகள் கிடைக்கிறதோ இல்லையோ கவலைப்படாமல் தனக்கிட்ட பணியில் சிறந்து விளங்கும் பணியாளர் மருந்தாளுனர் ஆவார்.
தனது பெயரில் உள்ள முதலெழுத்துகளின் உயர்குணஙகளைக்கொண்டு பணியாற்றிடும் பேறு மருந்தாளுநருக்கே உரித்தான பெருமையாகும்.

No comments:
Post a Comment