சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 14 June 2026

அபூர்வ தலைவர்?!!

பொதுவாகவே உலக மக்களில் நிறைய பேருக்கு ஒரு நம்பிக்கை நிலவுகிறது. ஒரு தலைவன் அல்லது ஆட்சியாளன் திருமணமே செய்து கொள்ளாத பிரம்மச்சாரியாகவோ, அல்லது குழந்தை குட்டி இல்லாதவனாகவோ இருந்தால் அவன் பணம் சேர்க்க மாட்டான், ஊழல் செய்ய மாட்டான், எளிமையாக இருப்பான், நேர்மையாக இருப்பான் அவன் பணம் சம்பாதித்து யாருக்கு வைக்கப் போகிறார் என்றெல்லாம் கதை கட்டுவார்கள். அவர்களைப் பற்றி ஒரு கதாநாயகனுக்குரிய பிம்பத்தை உருவாக்குவார்கள். பிற்காலத்தில் கடவுளாகவே மாற்றி விடுவார்கள். ஆனால் உண்மையில் அப்பேற்பட்ட ஆட்கள் ஆட்சிக்கு வந்தால், எவ்வளவு மோசமானவராக இருப்பார்கள் என்பதற்கு வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. உதாரணத்துக்கு ஹிட்லர் எடுத்துக் கொள்ளுங்கள்.

ஹிட்லரைப்பற்றி சில உண்மைகள் தெரிந்து கொள்வோம்?! ..

1. ஹிட்லர் திருமணம் செய்துகொள்ளவில்லை, ஆனால் ஒரு காதலி இருந்தாள்.

2. நாட்டில் ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் எதிரியாக இருந்ததாக நினைத்தார். 

3. ஹிட்லரின் ஆதரவாளர்கள் கண்மூடித்தனமாக ஹிட்லரை அவதார புருஷராக நம்பினார்கள், ஹிட்லர் பற்றிய உண்மைகளை, விமர்சனங்களை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

4. ஹிட்லர் தனது சிறு வயதில் ஓவியங்களை வரைந்து விற்று சம்பாதித்தார்..

5. ஹிட்லர் நாளிதழ், ஊடகங்கள் அனைத்தும் தன்னை பற்றிய செய்திகளை பதியுமாறு செய்தார்..ஊடகங்களும் அவ்வாறே ஹிட்லர் புகழ் பாடி செய்தி வெளியிட்டன...

6. உழைப்பாளர் சங்கங்கள் அனைத்தையும் ஒடுக்கினார்...

7. ஹிட்லர் தனக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை தேசவிரோதி என்று முத்திரை குத்தினார், நயவஞ்சகர்கள் என்று அழைத்தார்..

8. ஹிட்லர், சாதாரண அடிப்படை தொண்டராக பாசிச நாஜி படையில் சேர்ந்தார்... தனக்கு எதிரானவர்களுக்கு குழிகளை பறித்து பாசிச நாஜி படைக்கு தலைமை பதவியை பிடித்தார்...

9. நாட்டின் அனைத்து பிரச்சினையும் ஒரு நொடியில், மிக துரிதமாக தீர்வு காண தன்னால் முடியும் என்று வாக்குறுதி கொடுத்து ஆட்சியை பிடித்தார்...

10. ஆட்சி, அதிகாரத்திற்கு வந்த ஹிட்லரால் நாட்டின் சாதாரண ஒரு பிரச்சினைக்கு கூட தீர்வு காண முடியவில்லை... ஆனால் ஜெர்மனியை அதல பாதாளத்திற்கு கொண்டு சென்றார்..

11. ''நாட்டிற்கு நல்ல காலம் வர போகிறது, நாடு வல்லரசு ஆக போகிறது'' என்பது தான் ஹிட்லரின் தேர்தல் ஸ்லோகமாக இருந்தது...

12. ஹிட்லரின் நாஜி கட்சி வெற்றி பெற்று முதல் முறையாக பார்லிமென்றிக்கு ஹிட்லர் சென்ற போது அங்கு உணர்ச்சி மிகுதியால் அழுதார்...

13. பொய்கள் மற்றும் வெறுப்புகளை மட்டுமே மக்கள் மத்தியில் பரப்பி ஹிட்லர் ஆட்சிக்கு வந்தார்...

14. விலையுயர்ந்த ஆடைகள் அணிவதை ஹிட்லர் அதிகமாக விரும்பினார்...

15. ஹிட்லர் பொய்களை உண்மைகள் போலவும், உண்மைகளை பொய்கள் போலவும் பேச கலையை அறிந்தவர்...

16. ஹிட்லர் தன்னை முதன்மை படுத்தி ''நான், எனது'' என்று மட்டும் தான் அனைத்து தருணத்திலும் பேசினார்...

17. ஹிட்லர் ரேடியோவில் பேசுவதை மக்களுக்கு ஒலிப்பரப்புவதை அதிகம் விரும்பினார்... 

18. ஹிட்லருக்கு ரகசிய காதலி இருந்தால் அவளை உளவு பார்க்க தனிகுழு வைத்து இருந்தார்...

19. "நண்பர்களே, தோழர்களே'' என்ற வார்த்தையை தான் தனது பிரச்சாரங்களில் அதிகம் உபயோகம் செய்தார்...

20. ஹிட்லர் தன்னை புகைப்படம் எடுப்பதை அதிகம் விரும்பினார்...

இந்த குணாம்சங்களோடு யாருடோவது, யாரையாவது நீங்கள் ஒப்பிட்டு பார்த்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பில்லை



No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...