நாம் அதைக் கண்டுபிடித்தோம்
நம் வசதிக்காக....
ஆடைகள்,
பாத்திரங்கள்,
தட்டுமுட்டு சாமான்களென,
அனைத்துக்குமாக...
அதற்கு பிளாஸ்டிக் என்று பெயரிட்டோம்...
என்றென்றும்,
அழிந்து விடாத,
வசதியான,
கண்டுபிடிப்பென்று,
பெருமை பீத்திக் கொண்டோம்...
ஆனால்......
அது அழியாத,
கூண்டாக
சுமையாக
மாறியது உலகிற்கு...
மழைநீர்
பூமியிலிறங்கவில்லை...
நிலத்துக்கு கீழே
நீரே கானாமல் போனது...
நீர்நிலைகளில்
கடற்பரப்பில்
மீன்கள் அதை வாங்கவில்லை
ஆமைகள் பயன்படுத்தவில்லை
வேறு உயிரினங்கள் கேட்கவில்லை
ஏன் மனிதனைத்தவிர
யாருக்கும் பயனில்லை..
பிளாஸ்டிக் குப்பைகளால்
மண் கதறுகிறது..
ஆறு, கடலென
அத்தனையும் கதறுகின்றன...
எல்லாம் முடிந்தபின்,
மனிதனும் கதறுவான்.,
ஆனால்
உயிர்க்கோளம்
சவக்குழியாயிருக்கும்....!!!?
நாம் அதை வசதி என்றோம்.
கடல் அதை ஒரு பொறி என்றது.
சில நிமிடங்கள் பயன்படுத்தப்பட்ட ஒரு நெகிழிப் புட்டி…
யோசிக்காமல் வீசப்பட்ட ஒரு உறை…
விட்டுச் செல்லப்பட்ட ஒரு சிக்ஸ்-பேக் வளையம்…
நமக்கு, அது வெறும் கழிவு.
அவற்றுக்கு, அது ஒரு கூண்டாக மாறியது.
மிகவும் சோகமான பகுதி என்னவென்றால்?
ஆமை அதை வாங்கவில்லை.
மீன் அதைப் பயன்படுத்தவில்லை.
கடல் அதைக் கேட்கவில்லை.
ஆனால், அதற்கான விலையைக் கொடுப்பவர்கள் அவர்கள்தான்.
நாம் தூக்கி எறியும் ஒவ்வொரு சிறிய நெகிழிப் பொருளுக்கும், நமது சாக்குப்போக்குகளை விட நீண்ட ஆயுள் உண்டு.
மனிதர்களுக்கு வசதி.
இயற்கைக்குத் துன்பம்.
இந்தக் கிரகத்திற்கு நாம் தகுதியானவர்கள் அல்ல.

மனிதர்கள் கழிவுகளை நீர்நிலைகளில் வீசுவதை தவிர்த்து பணியாளர்களிடம் கொடுத்தால் நலம். ஆனால், பெரும்பாலான மனிதர்கள், சாலை ஓரங்கள், வாய்க்கால், போன்றவற்றில்தான் வீசுகிறார்கள்.
ReplyDelete