சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 21 June 2026

ஒரு மருந்தாளுனரின் நினைவலைகள்

  அரசு பணியில் இருக்கும் மருந்தாளுனருக்கு பணியில் இருக்கக்கூடிய காலத்தில் சந்திக்கும் மிகப்பெரிய சோதனைகளி,ல் முதலாவது நோயாளிகளிடம் நல்ல முறையில் உறவை பேணி பணியாற்றுதல் இரண்டாவதாக ஆய்வுக்குவரும் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குதல் , மூன்றாவதாக தணிக்கை குழு ஆய்வில் தணிக்கைக்க் ஆளாகாதிருப்பது. . 

 

நோயாளிகளை சமாளிப்பது என்பது பெரிய விஷயம் இல்லை மருந்து பற்றாக்குறை இல்லாத, ஏற்படாத நிலையில் சிறப்பாகவே பணிபுரியலாம் . மேலும் தேவைக்கேற்ப மருந்தாளுனர் இல்லாத நிலையில் நோயாளிகளின் கூட்டத்தை சமாளிப்பதில் உண்டான பிரச்சனை இதற்கு நிர்வாகம்தான் உதவி செய்ய வேண்டும் அப்படி உதவி ஏதும் கிடைக்காத நிலையில் மருந்தாஆளுநர் மன உளைச்சலில் அவதிப்பட்டு சாக வேண்டியதுதான். மற்றபடி மருந்தாளுநர் தனது கடமையை உணர்ந்து முறையாக செயல்பட்டால் பொதுமக்களிடம் கெட்ட பெயர் வாங்க வேண்டிய அவசியம் இல்லை . 


இரண்டாவது மேலதிகாதிகள் ஆய்வுக்கு வரும் போது கணக்கினை மிக சரியாக வைத்திருக்கும் பட்சத்தில் , அல்லது நேர்மையாக செயல்படும் பட்சத்தில் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. கடமையை முறையாக செய்யும்போது கெட்ட பெயர் வழங்க வேண்டிய அவசியம் இல்லை .

நான் பணிக்கு வந்த காலத்தில் மரு. கிருஷ்ணன் அவர்கள் மாவட்ட சுகாதார அதிகாரியாக இருந்தார் . அவர் ஆய்வுக்கு வருகிறார் என்றால் எல்லோருக்குமே சிம்ம சொப்பனம் தான். மணி அடித்த மாதிரி சரியாக ஏழு மணிக்கு நிலையத்திற்குள் நுழைவார். அ முதல் ஃ அவரை அத்தனை துறைகளையும் மிக கவனமாக நுணுக்கமாக ஆய்வு செய்வார் . அம்மாதிரியான அலுவலர்களை சந்தித்து நல்ல பெயர் வாங்கியவர்களுக்கு வாழ்நாளில் எந்த அதிகாரியை கண்டும் அஞ்ச வேண்டியதில்லை. அப்பொழுதெல்லாம் மாத்திரைகளை எல்லாம் கொட்டி எண்ணிப்பார்ப்பார்கள். ஒரு டப்பாவில் ஆயிரம் மாத்திரை என்று போடப்பட்டு வந்தால் யாரும் எண்ணிப் பார்த்து வாங்குவதில்லை . ஆயிரம் இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் வேலை செய்ய வேண்டியது .அப்பொழுதெல்லாம் மாத்திரைகள் உதிரியாக வரும் . ஆயிரம் மாத்திரை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கும்போது சில மாத்திரைகள் நுணுங்கி தூளாகிவிடும். எண்ணினால் குறையத்தான் செய்யும் . நூற்றுக்கு நூறு சரியாக ஒருபோதும் இருக்காது. தற்போது பிளிஸ்டர் அட்டைகளில் வரம்போதோ சில அட்டைகளில் மாத்திரையே இல்லாமல் காலியாக வருகிறது. லமையக்கிடங்கில் இருக்கும் மருந்துகளை மிக துல்லியமாக பராமரித்து விட முடியும். மருந்தகத்தில் மருந்துகளை வைத்து பராமரிப்பது என்பது உண்மையில் சிரமமானது .


ஆரம்ப சுகாதார நிலையங்களில் அப்பொழுது எல்லாம் தணிக்கை இருவிதமாக நடைபெறும் ஒன்று துறை ரீதியான தணிக்கை இரண்டாவது மாநில கணக்காயர் அலுவலகத்தில் இருந்து வரும் தணிக்கை. 

கணக்கில் ஏற்படும் தவறு அல்லது பொருட்களிலோ ஏற்படும் பற்றாக்குறைக்கு (Shortage)ஈடாக தொகையை அரசுக்கு மீள செலுத்துதல்,மற்றும் தணிக்கை நிலுவை தான் பெரும் தலைவலியாக இருக்கும். 

 .தணிக்கைகளில் குறைபாடுகள் இருந்து தணிக்கை தடை நீக்கம் செய்யப்படவில்லை என்றால் தலைவலி... எக்காலமும் இருந்து கொண்டேதான் இருக்கும் பணி ஓய்வு பெறுவது கூட கடினம் தான். 

மழையூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் எழுத்தராய் பணிபுரிந்தஎனது நண்பர் திரு சிவசங்கரன் வேடிக்கையான ஒரு நிகழ்ச்சியை சொல்லுவார். 1972 ஆம் வருடம் இந்திய சுதந்திர வெள்ளிவிழா கொண்டாட்டத்தின் போது அங்கு பணிபுரிந்த மருத்துவ அலுவலர் கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். . அவர் கேக் வெட்டி எல்லாருக்கும் கொடுத்தது என்னமோ உண்மைதான் . ஆனால் கேக் வாங்குவதற்கு சட்டத்தில் இடமில்லை என்று அதற்கான தொகையை அவரிடம் இருந்து வசூலிக்க சொல்லி தணிக்கை பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. தொகை என்னமோ சொற்ப தொகை தான் . அந்த நிகழ்ச்சி கடந்து எத்தனையோ ஆண்டுகள் கழிந்து விட்டன. மருத்துவரும் மாற்றலாகி சென்று விட்டார். இருக்கும் இடம் விவரம் தெரியவில்லை யாரிடமிருந்து பணத்தை வசூலிப்பது என்று தெரியாததால் அந்த பத்தி நீடித்துக் கொண்டே இருந்தது வருடா வருடம் இருக்கின்ற மருத்துவ அலுவலர்களும் அப்பத்திக்கான பதிலில் தகவல் இல்லை என்று எழுதி அப்படி நிறைவு செய்யாமல் விட்டுவிட்டார்கள். வருடா வருடா வருடம் தணிக்கை நிலுவை பத்திகளைப் பற்றியஆய்வறிக்கையில் அந்த ஒரு பத்தியை அவர்களால் முடித்து வைக்க முடியவில்லை. புதிதாக வந்த மருத்துவர் பார்த்தார் இதெல்லாம் ஒரு தொகையா, நானே தருகிறேன் அவர் பெயரை போட்டு கட்டித் தொலைங்கப்பா . இந்த பத்தியை வேறு விடாமல் வைத்து ஏன் கட்டி அழுகிறீர்கள் என்று பிரச்சினையை முடித்து விட்டார். 

வேடிக்கை அந்தப் பத்தியை பற்றி விடாமல் எழுதி அதற்கான தபால் செலவு உள்ளிட்ட செலவுகளை உண்மையில் கணக்கு போட்டு பார்த்தால் அந்த கேக் காசை விட பல மடங்கு ஆயிருக்கும் இதுதான் அரசாங்க பணத்தை நமது ஆட்கள் கட்டிக் காக்கும் லட்சணம். 

நான் வந்த புதிதில் மருந்து கிடங்கில் இருந்து மருந்து எடுக்கும் போது பதிவேற்றல் கழித்து விடுவேன் மருத்துவர் அப்போதே கையெழுத்துட்டு ஒப்பீடு செய்து விடுவார் அதனால் குறைவதற்கு வாய்ப்பு இல்லை அதேபோல் நான் கோட்டைப்பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும்போது மருத்துவ அலுவலர் ரத்தினவேல் அவர்களுக்கு அவர் கையெழுத்து போட்ட பிறகுதான் மருந்தையே வெளியில் எடுக்க விடுவார் உடனுக்குடன் எழுதி சோதித்து விட்டால், கணக்கில் குறைவதற்கும் வாய்ப்பு இல்லை தணிக்கையில் பிரச்சனை வருவதற்கு வாய்ப்பு இல்லை. 

நான் நான் ஒரு மருத்துவமனையில் பணியாற்றியபோது ஏதோ ஒரு நோயாளியின் உயிரை காப்பாற்றுவதற்காக அவசரமாக ஒரு மருந்து வாங்கி கொடுத்து உடனே பயன்படுத்தப்பட்டு விட்டது அதற்கான பட்டியலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆனால் அதை மருந்து கிடங்கு பதிவேட்டில் பதிவேற்றம் செய்யாமல் விட்டு விட்டேன். அது பின்னாளில் தணிக்கைத்துறையால் கண்டுபடிக்கப்பட்டு , ஆயிரத்து நூற்று ஐம்பததிரண்டு ரூபாய் கையில் இருந்து பணம் கட்டினேன் எனது 40 ஆண்டு அரசு பணியில் நான் கட்டிய தண்ட தொகை அது மட்டுமே ஏதோ நோயாளியை காப்பாற்றும் அவசரத்தில் எப்படியோ விட்டுவிட்டேன் அது மட்டும் ஞாபகம் இருக்கிறது அவ்வளவுதான.

எனது பனிக்காலத்தில் தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தில் பணியாற்றிய போது உலக தரச்சான்று நிறுவனத்திற்கான சான்றிதழ் அந்நிறுவனம் பெற்றிருந்ததால் உள் தணிக்கைக்காக தணிக்கையாளர் பயிற்சிக்கு சென்று இருந்தேன் எங்களுக்கு பயிற்சி அளித்த கமாண்டோ பாலசுப்ரமணியம் அவர்கள் கூறிய ஒரு வார்த்தை தான் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தணிக்கை என்பது குறை கண்டுபிடிக்கும் பணி அல்ல. அது உண்மைகளைக் கண்டறியும் பணி...  

No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...