உங்கள் ஊரிலேயே மிகவும் படித்த நபராக நீங்கள் இருப்பதாக கற்பனை செய்து பாருங்கள்.
உங்களிடம் முதுகலைப் பட்டம் உள்ளது.
நீங்கள் ஒரு முழுப் பள்ளியையும் நடத்துகிறீர்கள்.
நீங்கள் ஆசிரியர்களை நியமிக்கிறீர்கள். புத்தகங்களை வாங்குகிறீர்கள். இளம் உள்ளங்களைச் செதுக்குகிறீர்கள்.
மேலும் ஒவ்வொரு காலையிலும், உங்கள் சொந்தக் கட்டிடத்தின் பின்புறம் சுற்றி வருகிறீர்கள்.
ஏனெனில், முன்வாசல் வெள்ளையினப் பார்வையாளர்களுக்கு மட்டுமே உரியது. நீங்கள் நுழைய முடியாது. எவ்வளவு கொடூரமாக இருக்கும்...
இதுதான் ராபர்ட் லீ பிளாக்வெல்லின் என்ற கறுப்பின பள்ளி தலைமை ஆசிரியரின் வாழ்க்கை.
வட கரோலினாவில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் இருந்த ஒரே கறுப்பினப் பள்ளியின் தலைமை ஆசிரியர்.
அந்தப் பள்ளியில் உடற்பயிற்சிக் கூடம் இல்லை. அறிவியல் ஆய்வகம் இல்லை. உணவகம் இல்லை.
ஆனால் அங்கிருந்த வெள்ளையினப் பள்ளியில் இந்த மூன்றும் இருந்தன.
ஆனால் ராபர்ட் தன் மாணவர்களிடம் ஒருபோதும் புகார் செய்ததில்லை.
"நீங்கள் குறைந்தவர்கள் அல்ல. உங்கள் முறைக்காகக் காத்திருக்கிறீர்கள்."என்று எப்போதும் கூறுவார்.
ஒவ்வொரு திங்கட்கிழமை காலையிலும், வெள்ளையினக் கண்காணிப்பாளர் ஆய்வு செய்து வருவார்.
ராபர்ட் வெளியே நடந்து செல்வார்.
கட்டிடத்தைச் சுற்றி வருவார்.
சமையலறையின் பின்புறக் கதவு வழியாக உள்ளே நுழைவார்.பிறகு முன் வாசலில் கண்காணிப்பாளரைச் சந்திக்க. , உள்ளிருந்து தாழ்வாரங்கள் வழியாக முன் பகுதிக்கு நடந்து செல்வார்.
ஏனெனில் அதுதான் விதி.
ஒரு வெள்ளையர் பார்த்துக் கொண்டிருந்தாள், ஒரு கறுப்பினத்தவரால் தன் சொந்தப் பள்ளியின் முன் வாசலுக்குள் நுழைய முடியாது.
பன்னிரண்டு ஆண்டுகள் இவ்வாறே ராபர்ட் வாழ்க்கையில் கழிந்தது.
அவருடைய மாணவர்களுக்கு இது ஒருபோதும் தெரியாது.
1964-ல் ஒரு நாள், ஜேம்ஸ் என்ற 16 வயது சிறுவன், பள்ளி முடிந்ததும் கூடைப்பந்து பயிற்சி செய்வதற்காகத் தங்கினான்.
தலைமை ஆசிரியர் பிளாக்வெல் முன் வாசலுக்கு வெளியே நடந்து செல்வதை அவன் பார்த்தான்.
வழக்கம் போல கட்டிடத்தைச் சுற்றி நடந்தார்.பின் வாசலுக்குள் வந்தார்.சமையலறை வழியாக நடந்தார்.முன் வாசலுக்கு நடந்தார்.அதைத் திறந்தார்.
அங்கே யாரும் இல்லை.
அவர் இதை மூன்று முறை செய்வதை ஜேம்ஸ் பார்த்தான்.
பிறகு ஜேம்ஸ் கேட்டான்: "திரு. பிளாக்வெல். நீங்கள் என்ன செய்கிறீர்கள்?"
அந்த வயதான தலைமை ஆசிரியர் அவனைப் பார்த்தார்.
ஒருபோதும் மறக்காத பதிலொன்ற ஜேம்ஸ் சொன்னார்.
"நான் பயிற்சி செய்கிறேன்," என்றார் அவர். "ஏனென்றால், என்றாவது ஒரு நாள், 'முடியாது' என்று சொல்லப்பட்ட வலியை நினைவுகூராமல், என் வீட்டு வாசலைக் கடந்து செல்ல விரும்புகிறேன்"
ஜேம்ஸுக்கு அப்போது அது புரியவில்லை.
ஆனால் பின்னர் அவர் புரிந்து கொண்டார். அவர் ஒரு வழக்கறிஞரானார்.
1971-ல் அவர் அந்தப் பள்ளி மாவட்டத்தின் மீது வழக்கு தொடர்ந்தார்.
அவர் வென்றார்.
வீட்டு வாசல் விதி ரத்து செய்யப்பட்டது.
ராபர்ட் லீ பிளாக்வெல்லுக்கு அப்போது 68 வயது.
அவர் தன் வீட்டு வாசலைக் கடந்து சென்றார்.
200 மாணவர்களுக்கு முன்னால், அதே கண்காணிப்பாளருக்கு முன்னால், கண்ணீர் விட்டு அவர் அழுதார்.அவருடைய மாணவர்களும் அழுதனர்.
பின்னர் மௌனத்தை கலைத்து அவர் கூறினார்.
"இந்தக் கதவு மரத்தால் ஆனது. ஆனால் 12 ஆண்டுகளாக, அது இரும்பைப் போல உணர்ந்தது."
இனப் பாகுபாட்டுக் காலத்தில் கறுப்பினத் தலைமை ஆசிரியர்களின் ஆவணப்படுத்தப்பட்ட அனுபவங்களைப் பதிப்பித்த உண்மை நிகழ்ச்சி இது.
நம் நாட்டில் தலைமை ஆசிரியருக்கு அப்படி ஒரு அவமானம் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. குருகுல முறை திண்ணை பள்ளி காணாமல் போய் நவீன மெக்காலே கல்வித் திட்டம் வந்த பிறகு இங்கு பொதுப்பள்ளிகளாக தான் வந்தது. அப்படி விதி கடைப்பிடிக்கவில்லை. ஆனாலும் உயர் சாதிக் நிறை தவிர பிற சாதியினர் அதிகம் தலைமை ஆசிரியர்களாக நியமிக்கப்படவே இல்லை.
நீண்ட காலங்களுக்கு பிறகே இங்கு சமூக நீதி கிட்டியது.

No comments:
Post a Comment