உங்கள் வரலாற்றை நீங்கள் அறியாவிட்டால், அவர்கள் உங்களுக்கு என்ன சொல்கிறார்களோ அதுவாகவே நீங்கள் ஆகிவிடுவீர்கள். - இம்மானுவேல் குலு
ஒருமுறை சொல்லப்பட்ட பொய் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது.
திரும்பத் திரும்பச் சொல்லப்படும் பொய் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
அது ஒருமுறை 'பொது அறிவாக' மாறிவிட்டால், மக்கள் அதை ஆராய்வதை நிறுத்திவிடுகிறார்கள்.
இப்படித்தான் வஞ்சகம் நிலைத்து நிற்கிறது.
இதையே தான் கோயபல்ஸின் தத்துவம் கூறுகிறது "ஒரு பொய்யை திரும்பச் சொல்வதன் மூலம் அது உண்மை என்று சொல்வவனையே நம்ப வைத்து விடும்"
உலகில் அக்கிரமக்காரர்கள் அராஜகவாதிகள், அரச பயங்கரவாதிகள், பாசிஸ்டுகள் நாஜிஸ்டுகள் அனைவரும் கையாளும் ஒரே தந்திரம் இதுதான். பொய்யை திரும்ப திரும்ப சொல்வதே, அதை நம்புகிற மாதிரி சொல்வது, நம்பியே ஆக வேண்டும் என்று சொல்வது, அதற்கு பல முலாம் பூசி சொல்வது என்று விதவிதமாக பொய் சொல்வார்கள்.
அதற்கு மதம் சார்ந்த புராணக் கதைகள் அல்லது இனப்பெருமை என்று மறுத்து பேச முடியாத வகையில் பொய்யை சொல்லும்போது, அந்த பொய் வென்று விடும். அது வஞ்சகமாக மாறி ஒட்டுமொத்த சமூகத்தையும் சீரழித்து விடும்.
இதற்கு ஒரே பதிலடி பொய் என்றால் எடுத்த எடுப்பிலேயே நிர்தாட்சண்யமாக அதை நிராகரித்து விடுவது தான். அதை எதிர்க்கவில்லை என்றால், எதிர்த்தால் என்ன விளைவுகள் ஏற்படுமோ என்று ஒதுங்கிப் போனால் அந்த பொய்கள் திரும்பத் திரும்ப வளைய வந்து உண்மையாகிவிடும்.
எதையும் அப்படியே நம்பாமல், "ஏன்? எதற்கு?" என்ற கேள்வி கேட்பது பகுத்தறிவின் அடிப்படை. இந்த பழக்கம் உங்கள் சிந்தனைத் திறனை மேம்படுத்துவது, அறியாமையை அகற்றி தெளிவான முடிவுகளை எடுக்க உதவும்.
'எதையும் அப்படியே நம்பாதே, ஏன்? எதற்கு? எப்படி? என்ற கேள்வி கேள்' என்கிறார் பகுத்தறியும் பண்பை ஊட்டிய தந்தை பெரியார்.

Super theme Kovai Selvaraj
ReplyDelete