சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 3 June 2026

தன்னுலகம் மறந்தான்

 எலி  பிற எலி பிடித்திட

 எலிப்பொறியை

 அமைத்திடுவதில்லை. 


யானை கூட எதிரி 

யானை பிடித்திட 

பள்ளம் பறிப்பதில்லை... 


மனிதன் தானே

தன்னினம் மறந்து 

அடிமையாக்கி அகமகிழ்வான்.. 


மானிடர் தானே 

தன்னினம் அழித்திட்டு 

தன்னுலகம் அழித்திடுவான். 




No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...