வந்திடவில்லை
வளர்ச்சியனைத்தும்
ஒரே நாளில்...
காடுகள் அழித்து
கழனிகள் திருத்தி,
ஏரிகள் வெட்டி
ஆறுகள் மறித்து,
அணைகள் கட்டி,
வயல்தனில் விவசாயம்
கண்டி ட காலங்கள்
ஆயின ஆண்டுகள்
நூறு நூறு...
..
காடுகள் அழிந்து,
ஊர்கள், நகர்கள்,
நாடென மாறிட
ஆயின ஆண்டுகள் ஆயிரம்..
வளர்ச்சி வளர்ச்சியென
உலகம் மாறிட
அழிந்தது அத்தனை
இயற்கை வளமுமே...
இயற்கை அழிந்து
செயற்கைகள் ஆயிடின்
பூவுலகு ஆகிடுமே
புதை குழியாய் தானே..
பூவுலகு புதைகுழியாயிடின்
உயிரினங்கள் அழிந்து போயிடின்
உயிர்க்கோளமென
உரைத்திடல் எங்ஙனம்...
உயிர்க்கோளம் காத்திடல்
வேண்டின் உதறிடுவோம்
நெகிழி தன்னை...
அழித்திடுவோம் அழிவு
ஆயுதம் தன்னை..
மரம் நடுவோம்
மண் வளம் காப்போம்
மழை தனை பெறுவோம்
ஆக்கமும் அழிவும்
நம் கையில் தானே...
எதிர்காலம் திடீரென்று இருண்டுவிடாது.நாம் அதை மெதுவாகக் கட்டமைத்து வருகிறோம்... ஒவ்வொரு நாளும்.
ஒரு பக்கம் மரங்கள், தூய்மையான ஆறுகள், பறவைகள், புத்துணர்ச்சியான காற்று, மற்றும் குழந்தைப்பருவம்.
மறுபக்கம் புகை, நெகிழி, உயிரற்ற நிலம், முகக்கவசங்கள், மற்றும் மௌனம்.
பயமுறுத்தும் விஷயம் என்னவென்றால் — இந்த இரண்டு எதிர்காலங்களும் சாத்தியமே.
தேர்வு 2050-ல் இல்லை.
தேர்வு இன்றே.
மரங்களை நடுங்கள். நெகிழியைக் குறையுங்கள். தண்ணீரைச் சேமியுங்கள். மாசுபாட்டைக் கேள்விக்குட்படுத்துங்கள். விவேகமாகத் தேர்ந்தெடுங்கள்.
ஏனென்றால், நாம் இப்போது எடுக்கும் முடிவுகளுக்குள்தான் நாளைய குழந்தைகள் வாழ்வார்கள்.
இன்றே தேர்ந்தெடுங்கள், நாளையைக் காப்போம். 🌱
விழிப்பு தேவை நெகிழி ஒழிப்பு தேவை மரம் நடுவோம் வருங்கால சந்ததிக்கு கரம் கொடுப்போம் கோவை செல்வராஜ்.
ReplyDelete