சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 6 June 2026

எங்கே போனது அண்டை வீட்டார் நட்பு....

 


என் அம்மா பக்கத்து வீட்டுக்காரர்களிடம் உப்பு கேட்பதை நான் கேட்டேன். ஆனால் எங்கள் வீட்டில் உப்பு இருந்தது. நான் அவரிடம், 'ஏன் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் உப்பு கேட்கிறாய்?' என்று கேட்டேன். அதற்கு அவர், 'ஏனென்றால், நம் பக்கத்து வீட்டுக்காரர்களிடம் அதிகப் பணம் இல்லை, அவர்கள் அடிக்கடி நம்மிடம் ஏதாவது கேட்பார்கள். அவ்வப்போது, ​​நானும் அவர்களிடம் சிறிய, விலை மலிவான பொருட்களைக் கேட்பேன். அப்போதுதான், நமக்கும் அவர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதை அவர்கள் உணர்வார்கள். இப்படிச் செய்வதால், அவர்கள் மிகவும் சௌகரியமாக உணர்வார்கள், மேலும் தங்களுக்குத் தேவையான அனைத்தையும் தொடர்ந்து நம்மிடம் கேட்பதும் எளிதாகிவிடும்' என்று பதிலளித்தார்.

இதைத்தான் நான் என் அம்மாவிடமிருந்து கற்றுக்கொண்டேன்... பிறர் உணர்வுகளைப் புரிந்துகொள்ளும், பணிவான, ஆதரவான குழந்தைகளை, எண்ணற்ற நற்பண்புகளுடன் வளர்ப்போம்!

ஏனிந்த மாற்றங்கள்? யோசிப்போமே. 

ஒரு காலத்தில் அண்டை வீட்டாருடனான உறவு உறவினர்களின் உறவைப் போலவே வலுவாக தான் இருந்தது. நகர்ப்புறங்களில் ஒண்டுக்குடித்தன காரர்களாக மக்கள் மிக நெருக்கமாகவே வாழ்ந்தார்கள். அவர்களிடையே ஜாதி மத வேற்றுமைகள் அனேகமாக இல்லவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். உறவினர்களைப் போல உறவு முறை சொல்லித்தான் வளர்ந்தார்கள். பிள்ளைகளை வளர்த்தார்கள். அவர்களது உறவினர்களுக்கு என்ன உறவு முறையோ அந்த முறை இவர்களுக்கும் தொடர்ந்தது. திருவிழாக்கள், பண்டிகைகள் என எல்லாவற்றிலும் கூட்டாகவே கொண்டாடினார்கள். உணவு பரிமாறிக் கொள்வதிலிருந்து உதவி செய்வது வரை எல்லாவற்றிலும் அன்பு இழையோடி இருந்தது. தகவல் தொடர்பு உங்களான சாதனங்களான தொலைக்காட்சி வருவதற்கு முன்பு வரை எல்லாம் நன்றாகத் தான் இருந்தது யாராவது ஒருவர் வீட்டில் வானொலி பேட்டி இருக்கும் பாட்டு கேட்பதற்கு ஒளி சித்திரம் கேட்பதற்கு என கும்பலாக அடைந்து கிடந்து ரசித்து இருக்கிறோம் திரைப்படங்களை பார்க்க பார்க்க திரையரங்குகளுக்கு இணைந்து கும்பலாக தான் சென்றோம் தொலைக்காட்சிகள் வந்த பிறகு ஓரளவு சுருங்க ஆரம்பித்த உறவு அலைபேசிகள் வந்த பிறகு அனேகமாக காணாமலே போனது. ஏன் வீட்டிற்குள்ளேயே உள்ளவர்களுடைய உறவு கூட சுருங்கி போனது. 

உலகம் மிக சுருங்கி உள்ளங்கள் மிகவும் விலகிச் சென்று விட்டன. மாறவில்லை எனில் மனிதர்கள் இயந்திரங்களைப்போல ஆகிவிட நேரிடும்.... 


4 comments:

  1. அன்பின் சீனி .கா..
    அவரின் .. இளமைக்கால ..ஏன் எங்களின் இளமைக்கால மனிதநேய உறவுகளை மிக அழகாக கொடுத்திருக்கிறார் .படிக்க படிக்க ஆசையாக இருக்கிறது ..அந்த காலம் போல் இந்த காலமும் வர வேண்டுமே என்று..
    மனிதர்களுக்கான உறவுகள் மனிதநேயத்துடன் கடந்த காலங்களை நினைத்துத்தான் பெருமூச்சு விட வேண்டியது இருக்கிறது ..என்னத்த சொல்ல

    ReplyDelete
  2. எனக்கு நல்லா memory இருக்குறது, எங்க வீட்ல இளமை காலத்தில் நடந்து உள்ளது நண்பரே, வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அண்டை வீட்டார் யாரென்று அறியாமலே ஓர் புன்சிரிப்போடு
    40×40 ச.அடிக்குள் வாழ்ந்து ..பாசம் மனித நேயம் அறியாமலே 80 களில்
    வாழ்ந்த வாழ்க்கை யை ஆச்சரியமாக
    கண்டு
    கேணி , உரல் ,ஆட்டுக்கல், வீட்டுக்கு வரும் உறவுகளை அறியாத வாழ்முறை நாகரிகம் அனைத்து சம்பிரதாயங்களையும் பூஜ்யமாக்கியது இந்நாவீன உலகம்...

    ReplyDelete

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...