பறவைக்கு வீடாய் தெரிவேன்.
குரங்குக்கு விளையாடும் இடமாய் தெரிவேன்.
விலங்குகளுக்கு உணவாய் தெரிவேன்.
குழந்தைகளுக்கு காய்கணியாய் தெரிவேன்.
தச்சனுக்கு நாற்காலியாய் தெரிவேன்.
சிலருக்கு விறகாய் தெரிவேன்...
வியாபாரிக்கு பணமாய் தெரிவேன்.
அவரவர் பார்வையில் அவரவர் தேவையாய்.
உண்மையில் நான் அத்தனையுமாக இருப்பேன்.
நான்தான் மரம்.

உவமை அருமை. எழுத்தில் எளிமை மரத்தின் பெருமை சிந்தனையில் புதுமை..இதை சிந்திப்பது நமது கடமை..செயலாற்றுவது நமது உடமை இல்லையேல் ஆகிவிடும் மடமை. அதனால் உலகம் ஆகிவிடும் வெறுமை...இதை சொல்லவேண்டியது என் உரிமை.. இக்கருத்துக்கள புறந்தள்ளுவது சிறுமை... இத்துடன் தீர்ந்தது என் எழுதுகோலின் கருமை..இது தமிழின் மகிமை..செல்வராஜ் கோவை.
ReplyDelete