சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 22 June 2026

ஒரு மருந்தாளுநரின் நினைவலைகள்.

ஒரு 18 வயது வாலிபனாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனராக பணி ஏற்ற நான்,  58 வது வயதில் ஆரம்ப சுகாதார நிலைய இயக்குனரகத்தில் மருந்து கிடங்கு அலுவலராக பணியிலிருந்து ஓய்வு பெற்றது ஒரு சக்கரம் சுழல்வதைப் போலவே எனக்குத் தோன்றியது .

ஒரு மருந்தாளுனராக அநேகமாக எல்லா துறைகளிலும் பல்வேறு நிலைகளில் பணியாற்றக் கூடிய சந்தர்ப்பம் எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டம் என்று சொல்வேன்.

 இறுதியாக பொதுசுகாதாரத்துறை இயக்குனரகத்தில் பணிபுரிந்ததை மிகப் பெருமையாகவே கருதுகிறேன் .

இந்த பெருமைக்கு எல்லாம் சொந்தக்காரர் அன்றைய பொது சுகாதாரத்துறை இயக்குனராக இருந்த மதிப்பிற்கும் மரியாதைக்குரிய திரு மரு குழந்தைசாமி அவர்களையே சாரும்.  ஏனென்றால் அவர் தான் இயக்குனரகத்தில் மருந்து கிடங்கு அலுவலர்,  மற்றும் மருந்தாளுனர் பணியிடங்கள் வேண்டும் என்று அரசிடம் வாதாடி பெற்றவர் .

நான் பல்வேறு காரணங்களினால் மதுரை அரசினர் ராஜாஜி மருத்துவமனையில் இருந்து பொதுச் சுகாதாரத்துறை இயக்குனரகத்திற்குபணி மாறுதல் பற்றி பெற்று பணியாற்றினேன் .

இயக்குனர் அவர்களை சந்தித்தபோது எனது பணிக்காலம் பற்றி கேட்டறிந்தார் . ""உங்களது அனுபவம் இத்துறையில் உள்ள மருந்தாளுனர்களுக்கும் இத்துறைக்கும் பயன் அளிக்கட்டும் ""என்று கூறி எனக்கு உயரிய மதிப்பு மரியாதையும் அளித்தார்.  அப்பணியிடம் புதிதாக உருவாக்கப்பட்டதால் மருந்து கிடங்கு அலுவலருக்கான பணிகள் அலுவலகத்தில் வரையறுக்கப்படவில்லை . எனினும் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் தொடர்பான அனைத்து விடயங்களிலும் மருந்து கிடங்கு அலுவலரின் பங்கேற்பு இருந்திட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

 துணை இயக்குனர்களுக்கான மாதாந்திர கூட்டங்களில் பங்கேற்கும் வாய்ப்பு கிட்டியது.  பல்வேறு அரசுத்துறை கூட்டங்களிலும் கலந்து கொள்ளக் கூடிய வாய்ப்பு கட்டியது.  அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் பல்வேறு திட்டங்களுக்கான மருந்துகளுக்கான நிதி ஒதுக்கீடும் செய்யும் பொறுப்பில் மருந்து கிடங்கு அலுவலர் முக்கிய பங்கேற்க வேண்டியிருந்தது.

 அதன்படி அன்று இருந்த கிட்டத்தட்ட 2000 ஆரம்ப சுகாதார நிலையங்களுடைய வெளிப்புற நோயாளிகள் உள்புற நோயாளிகள் சிகிச்சை , பிரசவங்கள், அறுவை சிகிச்சைகள் போன்று பல்வேறு செயல்பாடுகளை ஆய்ந்து அதன் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யும் பணியினை செய்தேன்.  அதேபோல பல்வேறு திட்டங்களுக்கான செயல்பாடுகள் , நாய்க்கடி தடுப்பூசி வழங்குதல் போன்ற திட்டங்களிலும் நிதி ஒதுக்கீடு செய்யும் பொறுப்பினை செய்து வந்தேன்.  அது ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டமான அனுபவமாகும்.


மேலும் பன்னிரு ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கும்பகோணம் மகாமகத்தில் நோய் தடுப்பு ஏற்பாடுகளை பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் செய்திருந்தது . கிட்டத்தட்ட 125 மருத்துவ முகாம்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  அவற்றுக்கான மருந்துகள் வழங்குதல் அதனுடைய செயல்பாடுகள் தேவைகளை கவனித்தல் என மிக முக்கியமான மேற்பார்வை பணியினை செய்திடுமாறு என்னை இயக்குனர் பணித்திருந்தார்.  14 நாட்கள் அங்கேயே தங்கி அத்தனை ஏற்பாடுகளையும் பார்வையிட்டு எல்லா முகாம்களையும் அடிக்கடிபார்வையிட்டுசெயல்பட்டேன். இதற்கிடையில் போலியோ தடுப்பு ஊசி மருந்து வழங்கும் சிறப்பு திட்ட நாளும் இறுதி நாளன்று வந்ததால் அதையும் சேர்த்து மிகச் சிறப்பாக செயல்பட்டோம் . .அவ்வாறு செயல்பட முடிந்ததற்கு காரணம் மேலதிகாரியில் இருந்து கடை மட்ட பணியாளர் வரை இணைந்து சிறப்பாக பணியாற்றியதே காரணம் . அப்பணிகளைப் பற்றி இயக்குனர் அவர்கள் மனந்திறந்து மிகவும் பாராட்டினார். 

அதேபோல வர்தா புயல் வந்த போது தகவல் தொடர்புகள் எல்லாம் அற்றுப் போயிருந்த நிலையில் எப்படியோ எனக்கு ஒரு அழைப்பு வந்தது . பேசியது எங்களது இயக்குனர் அவர்கள்.  வர்தா புயல் நிவாரண பணிகள் தொடர்பாக மருத்துவ முகாம்கள் அமைக்கப்படுவது குறித்து உடனடியாக தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தை தொடர்பு கொண்டு தேவையான மருந்துகளைப் பற்றி முகாம்கள் நடத்திட பணித்தார் .துரித கதியில் இயங்கி தேவையான மருந்துகளை பெற்று எழும்பூர்குடும்ப அலுவலகத்தை மையமாகக் கொண்டு நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டன . தமிழகமெங்கும் இருந்து ஏராளமான நடமாடு மருத்துவ குழுக்கள் மாற்றுப் பணியாக அங்கு அனுப்பப்பட்டனர்.  மிகச் சிறப்பாக 10 நாட்கள் அங்கேயே தங்கி முகாம்களை சிறப்பாக நடத்தி முடித்தோம் 

அதன் பிறகு அடுத்த வருடம் மழை வந்த போதும்முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதேபோல மருத்துவ முகாம்களை நடத்தினோம் . நிவாரண பணியில் எவ்வாறெல்லாம் வேலை செய்ய முடியும் என்பதற்கு அந்த மருத்துவ முகாம்களே சிறந்த பயிற்சியாக அமைந்தது . சிறப்பாக பணியாற்றியவர்களை இயக்குனர் வெகுவாக பாராட்டினார் .

இயக்குனரகத்தில் முதன் முதலில் பணியேற்ற போது அவர் தமிழகமெங்கும் இருக்கக்கூடிய ஆரம்ப சுகாதாரநிலையங்களை சென்று பார்வையிட்டு மருந்தாளுனர்களுக்கு புத்தாக்க பயிற்சி வழங்கிட பணித்தார்.  அங்கு பணிபுரிந்த 2 ஆண்டு காலத்தில் 300-க்கும் மேற்பட்டநிலையங்களை பார்வையிட்டு நிறை குறைகளை கண்டறிந்து நிறைகளை பாராட்டி,  குறைகளை சுட்டிக்காட்டி வரும் காலங்களில் சிறப்பாக பணி புரிந்திடும் வகையில் எல்லா மாவட்டங்களிலும் புத்தாக்க பயிற்சி கூட்டங்களை நடத்தி வந்தேன்.  இது அறிவொளி இயக்கத்தில் ஏற்கனவே நிறைய பயிற்சி முகாம்கள் நடத்தியதன் அனுபவங்கள் அடிப்படையில் இந்த பயிற்சி முகாம்களை நடத்த முடிந்தது .

அதேபோல தேசிய சுகாதார திட்ட இயக்குனர் மேலாண்மை இயக்குனர் திரு டாரஸ் அகமது ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் சென்ற காமன் ரிவியூ மிஷன் குழுவிலும் ஒருமுறை பங்கேற்று சிறப்பாக செயல்பட முடிந்தது . அதேபோல நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கான திட்ட அலுவலரான மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி பிரியா அவர்களுடைய குழுவிலும் பங்கேற்று நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் பார்வையிட்டு பயிற்சிகள் அளித்தேன்.  இப்பணி காலத்தில் கூடுதல் இயக்குனராக பணிபுரிந்த மரு சித்ரா, இணை இயக்குனர்களாக பணிபுரிந்த மரு  சகாயராணி ரீட்டா ஆகியோரது வழிகாட்டுதலின் அமைந்த குழுக்களில் பயணித்து செயல்பட்டேன்.

 ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுனராக பணியில் சேர்ந்து இயக்குனர் அலுவலகத்தில் மருந்து கிடங்கு அலுவலராக பணிபுரிந்து 40 ஆண்டு கால பணிகள்மிக மிக சிறப்பாக செயல்பட முடிந்தது என்பது மிகவும் மகிழ்ச்சிக்குரிய விஷயம் .

மகாகவி பாரதி சொன்னது போல பதவி எவ்வளவு பெரிது என்பதல்ல முக்கியம். சிறப்புடன், பொறுப்புடன் செய்யும் மக்கள் சேவையே மிக சிறந்தது என்பதற்கு அவரது வைர வரிகளே உதாரணம் 

""வையகம் காப்பவரேனும் சிறு வாழைப்பழக்கடை வைப்பவர் எனும் பொய்யகல தொழில் செய்து பிறர் போற்றிட வாழ்பவர் எங்கனும் மேலோர். . 


 

4 comments:

  1. தங்களின் சேவைகள் பாராட்டத் தக்கது.சேவைகள் தொடர வாழ்த்துக்கள்!
    மு.முருகேசன்.

    ReplyDelete
  2. வாழ்த்துக்கள்
    MSO (Ret)

    ReplyDelete
  3. வணக்கம் சார். தங்களுக்கு பிறகு பொது சுகாதாரத் துறை இயக்குநரகத்தில் பணி புரியும் வாய்ப்பு கிடைத்தது. நீங்கள் குறிப்பிட்டது போலவே அதிர்ஷ்டம் மற்றும் பெருமையே என்பதை நானும் உணர்ந்தேன்.நான் பணி புரியும் போது இருந்த இயக்குநர்கள் மரு.குழந்தைசாமி மரு. செல்வ விநாயகம் இருவருமே மருந்து கிடங்கு அலுவலர்களை நல்லவிதமாக நடத்தினார்கள்.அது மட்டும் அல்லாமல் கூடுதல் இயக்குநர்கள் மற்றும் அலுவலகத்தில் சௌந்தர்யா,இந்து தட்டச்சர் கிருஷ்ணா ஆகியோர் ஒத்துழைப்பும் இருந்தபடியால் என்னால் 5 1/2 வருடங்கள் சொந்த ஊர் கோவையை விட்டு சென்னையில் இருக்க முடிந்தது நல்ல சுவையான அனுபவம்.
    தி.மாரியப்பன்

    ReplyDelete
  4. CONGRATULATIONS TO THE HERO OF THIS STORY WHO WAS THE FIRST ,ONE AND THE ONLY PHARMACY OFFICER WENT FOR INSPECTING MORE THAN 300 numbers OF GOVT PRIMARY HEALTH CENTRES IN TAMILNADU GOVT HEALTH SERVICE HISTORY. ... BESTWISHES FOR YOUR VALUABLE AND REMARKABLE RECORD BREAK SERVICES AS A PHARMACY OFFICER. I FEEL SO PROUD THAT YOU ARE MY COLLEGE MATE. REGARDS. KOVAI SELVARAJ.Rtd.Medical Store Officer.

    ReplyDelete

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...