சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 3 April 2026

டிரம்ப் என்னும் கற்கால காட்டுமிராண்டி

 


நாம் அனைவருக்குமே ஒரு பெருத்த சந்தேகம் ஏற்பட்டிருக்கும். நாம் 21 வது நூற்றாண்டில் தான் வசிக்கிறோமா? அல்லது கற்கால நாகரிக அமைப்பில் வசிக்கிறோமா?? என்ற கேள்வி கடுமையாக எழுந்து கொண்டிருக்கிறது. 

இதுவரை வரலாற்றில் ஏராளமான அரசுகள் தோன்றி இருக்கின்றன. பேரரசுகள் உருவாகி இருக்கின்றன. மகா சாம்ராஜ்யங்கள் உருவாகி இருக்கின்றன. 

தடி எடுத்தவன் தண்டல்காரன், ஆயுதம் படைத்தவன் ஆட்சியாளன் என்கிற நிலைமை தான் காலம் காலமாக இருந்து வந்தன. எங்கேயும் பொன் பொருள் கிடைக்கும் என்றால் அவற்றை ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு படையெடுத்து சென்று ஆக்கிரமிப்பது, நிலங்களை ஆக்கிரமிப்பது  சொத்துக்களை கவர்ந்து வருவது  மனிதர்களை அடிமையாக்குவது  போன்ற கேவலமான கலாச்சாரம் பல நூற்றாண்டுகள் நிலைத்திருந்தன. 

எந்திர புரட்சிக்கு பிறகு உலகெங்கும் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் ஜனநாயக முறைக்கு  செல்வதற்கான முயற்சிகள் நடைபெற்றன. அதே நேரம் செல்வம் படைத்தவர்களின் கையில் ஆட்சி சென்று பிற நாடுகளை காலணி ஆதிக்கத்திற்கு உட்படுத்துவது, சுரண்டுவது என்ற வழக்கம்  வளர்ந்தது. அந்த காலணி ஆதிக்கத்திற்கான போட்டியில் நடைபெற்றது இரண்டு உலகப்போர்கள். 

இடையே உருவான சோசலிச அமைப்பும்,  இரு உலகப் போர்களின் விளைவான அரசுகளின் தோல்விகள் நேரடியாக காலணி ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது என்பதை வரலாறு அறிந்த அனைவருக்கும் தெரியும். 

இரண்டாம் உலகப் போரின் முடிவில் ஐக்கிய நாடுகள் சபை  உருவானதும், சர்வதேச நீதிமன்றம் அமைந்ததும் வரலாற்றில் பெரிய சாதனைகளே. 

மனித உரிமைகள், அரசுகளுக்கான உரிமைகள், மாண்புகள் ஆகியவற்றிற்கு ஓரளவு மதிப்பு கொடுப்பதற்கான அமைப்பாக ஐநா திகழ்ந்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறோம்.

 ஐநா சபையில் பாதுகாப்பு சபை உள்ளிட்ட ஏராளமான கிளை அமைப்புகள், பல்வேறு அரங்கங்களில் மனிதர்களின் உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம் சுய கௌரவம், மனித உரிமைகள் மகளிர் உரிமைகள், குழந்தைகள் நலன் போன்றவற்றிற்கான நலத்திட்டங்களை உருவாக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றது. 

அவற்றில் ஓரளவு முன்னேற்றமும் பல இடங்களில் பின்னடைவும் கண்ணாரக் கண்டு கொண்டிருக்கிறோம். 

இன குழுக்களுக்கு இடையிலான மோதல்களை தடுப்பதில் ஐநா சபை முயற்சி செய்தாலும், இன அழிப்பு என்பது உலகின் ஏதேனும் ஒரு பகுதிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. 

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால் அரசு தனி அரசுகளுக்கான உரிமைகள் பாதுகாப்பு என்பது எவ்வளவு கேலிக்கூத்தாக்கப்பட்டு வருகிறது என்பதற்கு சமீபத்திய சில உதாரணங்களே போதுமானது. பட்டவர்த்தனமாக ஒரு நாட்டினுடைய எண்ணெய் வளத்தை நாங்கள் எடுத்துக் கொள்வோம், அதற்காக ஆட்சியாளர்களை கைது செய்வோம் கொலை கூட செய்வோம் என்று ஒரு வல்லரசு கொக்கரிக்கிறது என்றால் அதை தடுக்க வக்கற்ற  சபையாக ஐநா இருந்து கொண்டிருக்கிறது என்பதுதான் வேதனையான விஷயம். 

பாதுகாப்பு சபையில் வீட்டோ அதிகாரம் என்ற கேவலமான சர்வாதிகாரமான ஒரு அதிகாரம் ஐந்து நாடுகள் மட்டும் கையில் கொடுக்கப்பட்டு, அவர்கள் விரும்புகிற வகையில் ஒட்டுமொத்த உலக அரசியலை உலக பாதுகாப்பை இஷ்டத்திற்கு வளைக்க முடியும் என்பது தான் இதற்கெல்லாம் காரணம்.

 உச்சபட்சமாக டிரம்ப் என்னும் மனித குல விரோதி, காட்டுமிராண்டி, கிறுக்கன், பைத்தியக்காரன் என்று எல்லா பட்டங்களுக்கும் தகுதியான ஒரு மனிதர் அமெரிக்காவை ஆண்டு கொண்டிருக்கிறார். 

அவர் அமெரிக்கா மட்டுமல்ல, ஒட்டு மொத்த உலகையுமே தான் ஆள்வதாக நினைத்துக் கொண்டு கொக்கரிக்கிறார். வெனிசுலாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மதுரோவையும் அவரது மனைவியையும் ரவுடித்தனமாக கைது செய்து அவரது நாட்டிற்கு கொண்டு சென்று, ஒட்டுமொத்த வெனிசுலாவின் எண்ணை வளம் எனக்கே சொந்தம் என அறிவித்திருக்கிறார். 

அடுத்த கட்டமாக ஈரானிய தலைவர் கொமேனி மற்றும் பல தலைவர்களை படுகொலை செய்து விட்டு பள்ளிகள்  பல்கலைக்கழக வளாகங்கள், மருத்துவ மணைகள், மீது குண்டு வீசி குழந்தைகள், மாணவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலரையும் கொலை செய்துவிட்டு மனித உரிமைகள் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார். உச்சபட்சமாக ஈரானை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டு கற்காலத்திற்கு அனுப்பி வைப்பேன் என்று சொல்கிறார். இவரை முன்னர் குறிப்பிட்ட பட்டங்களினால் அழைத்தால் என்ன தவறு என்று யோசிக்க வைக்கிறது. 

இன்று யாருக்கோ என்று இருந்தால் நாளை நமக்கும் இந்த கதி தான் என்பதை உணர்ந்ததால் தான் அமெரிக்காவிலிருந்து அகில உலகமெங்கும் டிரம்ப் பதவி விலக வலியுறுத்தி போராட்டங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

வரலாற்றின் தண்டனையிலிருந்து யாரும் தப்ப முடியாது..... 

****************

அமெரிக்கா சர்வ வல்லமை படைத்ததோ அல்லது எல்லாம் அறிந்ததோ அல்ல. நாம் உலகின் மக்கள் தொகையில் வெறும் 6% மட்டுமே; மீதமுள்ள 94% மனிதகுலத்தின் மீது நமது விருப்பத்தைத் திணிக்க முடியாது. நம்மால் ஒவ்வொரு தவறையும் சரிசெய்யவோ அல்லது ஒவ்வொரு துன்பத்தையும் மாற்றியமைக்கவோ முடியாது. ஒவ்வொரு உலகப் பிரச்சனைக்கும் ஒரு அமெரிக்கத் தீர்வு இருக்க முடியாது. - ஜே.எஃப்.கென்னடி முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி. 

********


அமெரிக்கா "அவர்களுடைய ஒவ்வொரு மின் உற்பத்தி நிலையத்தையும் தாக்கும்" என்று டிரம்ப்  அச்சுறுத்தினார்.

பொதுமக்களுக்கான எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்கள், போர்க்காலச் சட்டங்களின் கீழ் பரவலாக சட்டவிரோதமானதாகக் கருதப்படுகின்றன, மேலும் அவை ஒரு போர்க்குற்றமாகவும் அமையக்கூடும்.

"அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில், அவர்கள் இருக்க வேண்டிய கற்காலத்திற்கே அவர்களைத் திரும்ப அழைத்துச் செல்லப் போகிறோம்,"- காட்டுமிராண்டி டிரம்ப்

3 comments:

  1. இது போன்ற கண்டனங்கள் உலகெங்கிலும் பரவட்டும். கோவை செல்வராஜ்

    ReplyDelete
  2. கண்டனங்கள் கடலனெ பெறுகட்டும்.மனிதம் தழைக்கட்டும். அ கோ சூரி.

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...