சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 26 April 2026

தேரை இழுத்து தெருவில் விட்ட கதை

தேரை இழுத்துத் தெருவில் விட்ட கதை" என்று தமிழில் ஒரு பிரபலமான பழமொழி உண்டு. 

அது ஒன்னும் இல்லங்க. கோயிலில் நிலைகொண்டுள்ள தேரை பிரம்மாண்டமாக அலங்காரம் பண்ணிட்டு வந்து, நடுரோட்டில் இழுத்து வந்து, சண்டையோ, ஏதோ பிரச்சனையோ பண்ணிட்டு, தேரை நடுத்தெருவில் நிறுத்திட்டு போன கதை தான்.

 ரொம்ப புனிதமா அல்லது பக்தியோட செய்ய வேண்டிய வேலையை தேவையில்லாம இழுத்து அசிங்கப்படுத்தினால் எப்படி இருக்கும் என்பது தான் இந்த பழமொழி. 

மிகப் பெரிய, பொறுப்பான ஒரு காரியத்தையோ அல்லது பெரிய பொறுப்பையோ கையில் எடுத்துக்கொண்டு, அதைச் சரியாகச் செய்யத் தெரியாமல் பாதியிலேயே விட்டுவிட்டு, அதனால் பெரிய குழப்பத்தையும், தேவையற்ற சிக்கலையும் உண்டாக்கும் செயலை இது குறிக்கிறது.

இது யாருக்கு பொருத்தமோ இல்லையோ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு இது மிகவும் பொருத்தமான பழமொழி தான் .

 உலகத்துல எத்தனையோ நாடுகள் அணு ஆயுதம் தயார் பண்ணி வச்சிருக்காங்க. அணு சோதனைகள் பண்ணிட்டு இருக்காங்க. யுரேனியத்தை செறிவூட்டெல்லாம் பண்ணிட்டு இருக்காங்க. இதை செய்பவர்கள் வசதியான நாடு, வசதி இல்லாத நாடு அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது. அப்படி பார்க்க போனா பாகிஸ்தான், வட கொரியா கூட அணுகுண்டு வச்சிருக்காங்க இஸ்ரேல் கூட வச்சிருக்கு. ஆனால் அணுகுண்டு போட்டு லட்சக்கணக்கான மக்களை கொன்ற பாவத்தை செஞ்ச ஒரே நாடு அமெரிக்கா மட்டும் தான். அதுக்காக இந்த உலகம் அமெரிக்காவை தண்டிக்கலை .  

ஆளாளுக்கு அணுகுண்டு தயார் பண்ண ஆரம்பிச்ச உடனே அமெரிக்காவால தாங்க முடியல. உலக நாடுகள எல்லாம் சேர்த்துக்கிட்டு அணு ஆராய்ச்சிய அழிவு சக்திக்கு பயன்படுத்துவதை தடுத்து நிறுத்துறோம்கிற பேர்லபன்னாட்டு அணுசக்தி முகமை என்ற அமைப்பை உருவாக்கி (IAEA) அனுசோதனைகளை கட்டுப்படுத்த ஏற்பாடு பண்ண ஆரம்பிச்சாங்க. அனுகுண்டை ஏற்கனவே பண்ணுனவங்கள எல்லாம் விட்டுட்டு இனிமே யாரும் பண்ண கூடாதுன்னு சொல்லி, அனுஆராய்ச்சி செய்கிற நாடுகளை  எல்லாம் ரொம்ப டார்ச்சர் பண்ண ஆரம்பிச்சாங்க. 

இதுல மாட்டிகிட்டு பிரச்சனைகளுக்கு ஆளான நாடுகள்ல ஈரான் பிரதானமானது. அவர்களுக்கு இருக்கக்கூடிய எண்ணெய் வளத்துக்கு, மனித வளத்துக்கு, அறிவு பலத்துக்கு, அவங்க எவ்வளவோ உயரத்தில இருந்திருக்கணும். தங்களுடைய நாட்டிலிருந்து எண்ணெய் திருட விடாம அமெரிக்காவை துரத்தின ஒரே பாவத்துக்காக,பல தடைகளை சந்தித்தது. இன்றைக்கு வரைக்கும் யுரேனியம் செறிவூட்டல், எல்லா சோதனைகளையும் செய்ய, ஏன் ஆக்கப்பூர்வமாக கூட பயன்படுத்தக்கூடாதுன்னு பிரச்சனை பன்னுது அமெரிக்கா . 

ஆனால் ஈரானுக்கு யுரேனியத்தை வழங்கி அனுசோதனைக்கு துவக்கப்புள்ளியாக இருந்தது அமெரிக்கா என்பது பலருக்கும் தெரியாத விடயம். 

1953 ஆகஸ்ட் 19 அன்று, ஈரானின் பிரதமர் முகமது மொசாதேக் அமெரிக்கா, பிரித்தானிய தூண்டுதலால் ஒரு ஆட்சிக்கவிழ்ப்பின் மூலம் பதவியிலிருந்து அகற்றப்பட்டார். 1953ல முழு ஆட்சி பொறுப்பேற்ற அமெரிக்க அடிமை ஷா மன்னனை வலியுறுத்தி யுரேனியத்தை வழங்கி அனுசோதனைக்கு அமெரிக்கா வழங்கியது. அதற்கு காரணம் ஈரான் வளர்ச்சி அடைய வேண்டும் அணுசக்தி பெற வேண்டும் என்ற பெருந்தன்மையான காரணம் ஒன்றும் இல்லை. அன்றைய சோவியத் யூனியன் அதாவது ரஷ்யாவிற்கு எதிராக அண்டை நாடான ஈரானை அணுசக்தி உள்ள நாடாக மாற்றி வைத்தால் தங்கள் எதிர்கால திட்டத்திற்கு பயன்படும் என்ற குறுகிய நோக்கத்தோடு தான் அவ்வாறு செய்யப்பட்டது. ஆனால் 1979 இஸ்லாமிய புரட்சியின் விளைவாக ஷாமன்னன் துரத்தப்பட்டு, எண்ணெய் வளம் தேசியமயமாக்கப்பட்ட பின் காட்சிகள் மாறின. 

அன்றிலிருந்து இன்று வரை நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈரானுக்கு தொல்லைகள் கொடுத்து வந்த அமெரிக்காவின் திடீர் ஞானோதயத்திற்கு பிறகு ஈரான் அணு சக்தியை பயன்படுத்தி உலகிற்கு அச்சுறுத்தலாக மாறிவிட்டதாக ஒரு பிம்பத்தை உருவாக்கியது.

 ஈரான் எந்த வகையிலும் யுரேனியத்தினைப் பயன்படுத்துவது, அணு ஆராய்ச்சியில் ஈடுபடுத்தக் கூடாது என்ற முறையில் கொடுத்த தடைகளின் விளைவாகவும், சர்வதேச அழுத்தம் காரணமாகவும்  2015 அணுசக்தி ஒப்பந்தம் (JCPOA)உருவானது. அந்த ஒப்பந்தமானது ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, ஈரான், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து(P5+1) இடையே கையெழுத்திடப்பட்ட ஒரு முக்கிய ஒப்பந்தமாகும். இதன்படி, பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு ஈடாக, ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டலைக் குறைத்து, சர்வதேச கண்காணிப்பு ஏற்றம் ;

 அதன்படி தன்னிடமிருந்து செறிவூட்டப்பட்ட 98% யுரேனியத்தை ரஷ்யாவிடம் ஒப்படைத்தது. பொருளாதார தடைகள் நீக்கப்பட்டதன் விளைவாக ஓரளவு தனது நாட்டின் வளர்ச்சி பாதைக்கு ஈரான் அழைத்துச் சென்றது. இந்த ஒப்பந்தமானது 30 ஆண்டுகள் நடைமுறையில் இருந்தது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2018-ல் இந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்து, தடைகளை மீண்டும் விதித்து ஈரானுக்கு கொடைச்சல் கொடுக்க ஆரம்பித்தார். 

ஏற்கனவே அமெரிக்காவோட அடியாளான இஸ்ரேல் தனது ஜியோனிச கொள்கைகளை பயன்படுத்தி மத்திய தரை கிழக்கு நாடுகளில் இருக்கும் பெரும்பாலான நாடுகளை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருச்சு. அதுக்கு இடைஞ்சலா இருந்தது, மிச்சம் இருக்கிற பாலஸ்தீனத்தோட காசா பகுதியும் லெபனானில் உள்ள தீவிரவாத குழுவும், அவங்களுக்கு உதவி செய்கிற ஈரானும் தான். எப்படியாவது ஈரானை அடிச்சு நாசம் பண்ணனும்னு நினைச்சு ஒரு கைப்பிள்ளையை தேடிச்சு.வசதியா எப்ஸ்டீன் பைல்கள் பிரச்சனைகளில் சிக்கிய டிரம்ப் எனும் அடிமை இஸ்ரேலுக்கு கிடைக்க, டிரம்ப் மூலம் பன்னாட்டு அணுசக்தி முகமையின் (IAEA) முகத்தை சோதனை செய்தது. ஈரானும் சோதனைகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்து, அந்த முகமும் யுரேனிய ஆபத்து இல்லை என்று சொல்லியும் கூட இஸ்ரேலும் அமெரிக்கா ஈரான் மேல படை எடுத்தது அந்த நாட்டோட உச்சபட்ச தலைவர்கள் பல தலைவர்களையும், விஞ்ஞானிகளையும் படுகொலை செய்தது. பள்ளிக்கூடம், மருத்துவமனை, என ஒன்றையும் விட்டு வைக்காமல் பொதுமக்கள் தளங்களையும் தாக்கி பொதுமக்களையும் படுகொலை செய்தது. 

எப்ப பார்த்தாலும் அடி வாங்கிட்டு போறதுக்கு ஒன்னும் ஈரான் முட்டாள் இல்லை என திருப்பி மிக பலமான அடியை இஸ்ரேலுக்கும், அரபு நாடுகளில் இருக்கக்கூடிய அமெரிக்க தளங்களுக்கும் கொடுத்தது. ஹார்மோஸ் முனையை அடைத்தது. 

இப்ப விளைவு என்ன?! உலக நாட்டு மக்களுக்கு ஏராளமான சிரமங்கள், எரிபொருள் தட்டுப்பாடு, போர் பதற்றம், அமைதி இன்மைக்கு காரணம், டிராம்போட முட்டாள்தனமான நடவடிக்கையும், இஸ்ரேல் போர்வெறியும் தானே. 

இப்ப தேரை இழுத்துத் தெருவில் விட்ட கதை"என்ற இந்த பழமொழி சரிதானே

2 comments:

  1. Nice history

    ReplyDelete
  2. Sadam Hussain Shahul HameedMonday, April 27, 2026

    இரத்தினச்சுருக்க வரலாறு 👌.. நன்றி 👍

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...