சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 7 April 2026

தேர்தல் திருவிழா11

 மதம் சாதியம் சார்ந்த காரணிகள்-மதம் மற்றும் சாதி சார்ந்த காரணிகள் .

இந்தியா ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மதம் சாதிய உணர்வுகளை சார்ந்து வாழக்கூடிய பிரதேசங்களாக இருந்திருக்கிறது.

 அன்னியராட்சி காலத்திலும் சாதிய மத உணர்வுகளோடு தான் மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். சுதந்திர போராட்ட காலத்தில் கூட மதத்தின் பெயராலேயே மக்களை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வந்தன. பால கங்காதர திலகர் போன்றவர்கள் இந்து மதத்தின் பெயராலும், முஸ்லிம் லீக் இஸ்லாத்தின் பெயராலும் அணி திரட்டுவதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார்கள். மதத்தின் பெயராலே இந்தியா பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்ட பிறகு மதத்தின் பெயரிலான அணிச்சேர்க்கை இயற்கையாக நிகழ்ந்துள்ளது.


 பொதுவுடைமைக் கட்சிகள் தவிர எல்லா கட்சிகளிலும் மத, சாதிய ரீதியான உணர்வு உடையவர்கள் மக்களை அணி திரட்டும் அளவிலும் உயர்ந்திருக்கிறார்கள்.

சனாதனத்தின் பெயராலேயே மக்கள் துண்டாடப்படுவதையும், தாழ்த்தப்பட்டவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டதையும் எதிர்த்து அம்பேத்கர் போன்றவர்கள், பொதுவுடமை வாதிகள், சோசலிஸ்ட்கள், சீர்திருத்தவாதிகள், திராவிட இயக்கத்தினர், மக்களிடம் பிரச்சாரம் செய்வது ஓரளவு முன்னேற்றம் கண்டனர். 


மகாத்மா காந்தி இந்து அடிப்படை வாதிகளால் படுகொலை செய்யப்பட்டதால் சனாதனவாதிகள், மத அடிப்படைவாதிகள், பொதுமக்களிடமிருந்து பெருமளவுக்கு அந்நியப்பட நேர்ந்தது. காங்கிரஸ் கட்சியில் மதசார்பற்ற எண்ணம் கொண்ட நேரு போன்றவர்கள் தலைமை ஏற்றதால் மதரீதியாக மக்களை அணி திரட்டுவது ஓரளவு சுணக்கம் கண்டது.

அது தேர்தல் அரசியலிலும் பிரதிபலித்தது. முதலாவது பாராளுமன்றத் தேர்தல் நடைபெற்ற போது மத அடிப்படை வாதிகள் ஜன சங்கம், ஹிந்து மகாசபா, ராமராஜிய பரிஷத் போன்ற இந்து மதத்தை முன்னிறுத்த கூடிய கட்சிகளும் முஸ்லிம் லீக் முஸ்லிம் போன்ற முன்னிறுத்தக் கூடிய கட்சிகளும் பெருமளவு மக்களால் நிராகரிக்கப்பட்டன. 

ராம ஜென்ம பூமி போன்ற பிரச்சனைகள் அவ்வப்போது எழுப்பப்பட்டு வந்தாலும் பெரிய அளவுக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை.

காலங்கள் செல்ல நேரு, இந்திரா காந்தி போன்ற மக்களிடம் பிரசித்தி பெற்ற தலைவர்கள் மறைவு, அரசின் மீதான மக்களின் அவநம்பிக்கைகள், காங்கிரஸ் கட்சியின் பலவீனங்கள், தலைமை வெற்றி போன்ற பல காரணங்கள், மத அடிப்படைவாதிகள் சூழலைபயன்படுத்திக்கொண்டது எல்லாம் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதேபோல ஜாதி ரீதியாக மக்கள் ஒன்று சேர்வது என்பது அரசியலில் ஜாதிய பலம் பெற்ற தலைவர்களை உருவாக்கியது.

முதலாவது தேர்தலில் ஆரம்பித்து சில குறிப்பிட்ட காலம் வரை ஜாதிய ரீதியான ஆதிக்கம் நீடித்திருந்தது. பிறகு மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்து, மீண்டும் தற்போது ஜாதி ரீதியாக அணிதிரட்டுதல் என்பது பெருமளவில் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

கிட்டத்தட்ட எல்லா கட்சிகளும் வேட்பாளர்களை தேர்வு செய்ய சாதிய பிண்ணனி, அதன் பலாபலத்தைக் கொண்டே தீர்மானிக்கிறார்கள். 

வேட்பாளரது தகுதி, திறமை, தியாகம் ஆகியவை மதிப்பிழந்து போய்விட்டது... 

தற்காலத்தில் மத, ஜாதிய ரீதியான காரணிகள் தேர்தல்களை தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக மாறிக் கொண்டிருக்கின்றன



தொடர்ந்து யோசிப்போமே.. 

1 comment:

  1. இவ்வகையான காரணிகள் மிகவும் எதிர் மறையான வினைகள் ஆற்றும். மக்களிடம் சிந்தனை இல்லை. அ கோ சூரி.

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...