2026 தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பொதுத் தேர்தல்கள் பற்றிய ஆய்வுகளை காண்போம். இது வெறும் தேர்தல் ஆருடமாக அல்லது கருத்துருவாக்கமாக மட்டும் பார்க்காமல் பகுப்பாய்வு செய்து பார்க்கலாம். இத்தேர்தலில் பிரதானமாக இரு அணிகளும் இரு கட்சிகளும் ஆட்சியை கைப்பற்றுவதற்காக களத்தில் இறங்கியுள்ளனர்.
ஒன்று ஆளும் கட்சியாக இருக்க திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஒரு அணியும், அடுத்து அகில இந்திய அண்ணா திராவிடக் கழகத்தின் முதன்மைக் கொண்ட தேசிய ஜனநாயகக் கூட்டணியும்,மூன்றாவதாக ஏற்கனவே சில தேர்தல்களை தனியாக சந்தித்த சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியும் ,நான்காவதாக புதிதாக துவங்கும் கட்சி களம் காணும் திரைப்பட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம், இது தவிர நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒரு பிரிவும், சசிகலா உருவாக்கிய கட்சியும் இணைந்து போட்டியிடுகிறது.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 2024 பொதுத் தேர்தலில் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள 39 இடங்களையும் வென்ற திமுக கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்த இந்திய தேசிய காங்கிரசு, இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் நீதிக் கழகத்தில் நீடித்தன.திபின்னர் கஹாசன் தலைமையிலான கூட்டணி. வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் காலதாமதம் செய்வதாகவும், திமுகவை ஓரங்கட்டுகிறோம் என்று கூறி, கூட்டணியில் இருந்து வெளியேறியது. அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட ஓ. பன்னீர்செல்வம், பி. எச். மனோஜ் பாண்டியன், ஆர். வைத்திலிங்கம் ஆகிய மூத்த தலைவர்கள் திமுகவில் இணைந்தனர்.
2023 செப்டம்பர் 25 அன்று, பாரதிய ஜனதா கட்சி (பாசக) தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது. 2024 பொதுத் தேர்தலில், அதிமுக தலைமையிலான கூட்டணியும், பாசக தலைமையிலான கூட்டணியும் தனித்தனியாகப் போட்டியிட்டன, இரண்டுமே மாநிலத்தில் எந்த இடத்தையும் வெல்லவில்லை.2025 ஏப்ரல் 11 அன்று, இரு கட்சிகளும் மீண்டும் ஒரு கூட்டணியை அமைத்தன, இக்கூட்டணியில் பழனிசாமி முதலமைச்சர் வேட்பாளரானார்.2026 சனவரி 7 அன்று, அன்புமணி தலைமையிலான பாமக, அதிமுக கூட்டணி. டி. வி. தினகரன் தலைமையிலான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அதிமுக கூட்டணியில் இணைந்தது.
இறுதியாக அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாரதிய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் டி. டி. வி. தினகரன், தமிழ் மாநில காங்கிரசு ஜி. கே. வாசன், இந்திய ஜனநாயகக் கட்சி, அனைத்திந்திய பார்வர்டு பிளாக், பசும்பொன் தேசியக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, புரட்சி பாரதம் கட்சி, புதிய நீதிக் கட்சி, தென்னிந்திய பார்வேர்டு பிளாக், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், உழவர் உழைப்பாளர், தமிழ் மாநில முஸ்லிம் லீக், சிங்கத் தமிழர் முன்னேற்றக் கழகம் போன்ற கட்சிகளுடன் களம் காண்கிறது.
2026 மார்ச் 20 அன்று, இராமதாசு தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி, வி. கே. சசிகலா தலைமையிலான அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து களம் காண்கிறார்.
புதிதாக கட்சி துவங்கி களம் காணும் திரைப்பட நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கே. ஏ. செங்கோட்டையன், மற்றும் சில முன்னாள் அரசியல்வாதிகள் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறது
பொதுவாகவே கீழ் கண்ட காரணிகளே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றன.
*கூட்டணி காரணிகள்.
2021 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி 20,982,088 (45.38%) வாக்குகள் பெற்று 159 இடங்களில் வெற்றி பெற்றது.
திமுக 188 இடங்களில் போட்டியிட்டு, 17,430,179 வாக்குகள், 37.70சதவீத வாக்குகள் பெற்று 133 இடங்களில் வெற்றி பெற்றனர்.
இந்திய தேசிய காங்கிரஸ் 25 இடங்களில் போட்டியிட்டு, 1,976,527 வாக்குகள், 4.28சதவீத வாக்குகள் பெற்று 18 இடங்களில் வெற்றி பெற்றனர்.
சிபிஐ 6 இடங்களில் போட்டியிட்டு, 504,537 வாக்குகள்,1. 09 சதவீத வாக்குகள் பெற்று 2இடங்களில் வெற்றி பெற்றனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 இடங்களில் போட்டியிட்டு, 457,763 வாக்குகள், 0.99 சதவீத வாக்குகள் பெற்று 4இடங்களில் வெற்றி பெற்றனர்.
சிபிஎம் 6 இடங்களில் போட்டியிட்டு, 390,819 வாக்குகள்,0. 85சதவீத வாக்குகள் பெற்று 2இடங்களில் வெற்றி பெற்றனர்.
இந்திய ஒன்றிய முஸ்லிம் லீக் இடங்களில் போட்டியிட்டு, 222,263 வாக்குகள்,0. 48 சதவீத வாக்குகள் பெற்று ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை
2021 ஆம் ஆண்டு தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 18,363,499 (39.71%) வாக்குகளுடன் 75 இடங்களில் வெற்றி பெற்றது.
அதிமுக 191 இடங்களில் போட்டியிட்டு, 15,391,055 வாக்குகள், 33.29 சதவீத வாக்குகள் பெற்று 66 இடங்களில் வெற்றி பெற்றனர்.
பாமக 23 இடங்களில் போட்டியிட்டு,1,758,774 வாக்குகள்,3. 80சதவீத வாக்குகள் பெற்று 5 இடங்களில் வெற்றி பெற்றனர்.
பா ஜ க இடங்களில் 20 போட்டியிட்டு, 1,213,670 வாக்குகள், 2.62 சதவீத வாக்குகள் பெற்று 4 இடங்களில் வெற்றி பெற்றனர்.
நாம் தமிழர் கட்சி 234 234 இடங்களில் போட்டியிட்டு, 3,042,307 வாக்குகள், 6.58சதவீத வாக்குகள் பெற்றாலும், ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை .
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தேசிய முற்போக்கு திராவிட கழகம், இதர சிறிய கட்சிகளான கோகுல மக்கள் கட்சி, மருது சேனை சங்கம், விடுதலை தமிழ் புலிகள் கட்சி, மக்கள் அரசுக் கட்சி, இந்திய சமூக ஜனநாயகக் கட்சி, அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் போன்ற கட்சிகளுடன் இணைந்து போட்டியிட்டு 1,289,276(2.84%) வாக்குகள் கூட பெறவில்லை.
2021 புதிய கூட்டணியாக மக்கள் நீதி மையம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி,இந்திய ஜனநாயக கட்சி,ஜனதா தளம் (சமயச்சார்பற்ற) ஓரு அணியாக போட்டியிட்டனர்.
சென்ற தேர்தலில் திமுக கூட்டணி பலம் அடிப்படையிலும், முந்தைய அதிமுக அரசுக்கு எதிரான ஆளுமை எதிர்ப்பு காரணங்கள், அதிமுக ஜெயலலிதா போன்ற ஆளுமை இல்லாத தலைமை போன்ற காரணங்களால் வெற்றி பெற்றது.
*ஆளுமை எதிர்ப்பு காரணிகள்-anti incumbency காரணிகள்.
இன்றைய சமூக அமைப்பில் எந்த ஒரு அரசாக இருந்தாலும் மக்களின் முழுமையான நம்பிக்கையை பெற்றோ அல்லது எதிர்ப்பை பெறாமல் ஆள்வது என்பது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அதிலும் மாநில அரசு என்பது மத்திய அரசோடு மோதல் போக்கோடு செயல்படும் போது, நிதி நெருக்கடியிலிருந்து பல்வேறு சட்டப் பிரச்சனைகள் வரை சந்திக்க வேண்டி இருக்கும். பொது மக்களின் எதிர்ப்புகளையும் காண வேண்டி இருக்கும். இது தவிர மாநில அரசின் கொள்கை, நிர்வாக செயல்பாடு நடைமுறை சிக்கல்கள் ஆகியவை ஓரளவு எதிர்ப்பு உணர்வை உண்டாக்கத்தான் செய்யும். அதே நேரத்தில் சில சாதனைகள், மக்களுக்கு செய்யக்கூடிய நலத்திட்டங்கள் அந்த எதிர்ப்புணர்வுகளை மட்டுப்படுத்தக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை அரசு நிர்வாகத்தின் இயல்பான மந்தபோக்கு, அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், நிர்வாக இயந்திரத்தின் ஊழல் நடவடிக்கைகள் மக்களின் வெறுப்புணர்வை அதிகரிக்கத்தான் செய்யும்.
கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தை ஆண்ட திராவிட முன்னேற்ற கழக அரசு மீது மக்களுக்கு சில அதிருப்திகளும் உள்ளன என்பது உண்மை. அரசு இயந்திரத்தில் இயல்பான ஊழல் போக்குகள், உள்ளாட்சிகளில் உள்ள நிர்வாக சீர்கேடுகள், சில வரி உயர்வுகள், பொதுவான விலைவாசி உயர்வு, தொழிலாளர் பிரச்சினைகளில் அரசு எடுத்த நிலைப்பாடுகள், அரசு ஊழியர் ஆசிரியர்கள் ஓய்வூதியம் தீர்க்காதது போன்ற விடயங்களில் அரசின் மீதான கசப்புணர்ச்சிகள் உள்ளன. அவை எந்த அளவுக்கு தேர்தலை பாதிக்கும் என்பது பரிசீலனைக்குரிய விஷயம். அதே நேரத்தில் அரசின் நலத்திட்டங்கள் அவசியம் எந்த அளவு சமன்படுத்தி உள்ளது என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். மானாமதுரை காவல் நிலைய அஜித்குமார் மரணம், பல்கலைக்கழக மாணவி கற்பழிப்பு, வேங்கை வயலில் குடிநீரில் கலந்தது போன்ற பல விடயங்கள் அரசின் செயல்பாட்டுக்கு எதிரான கரும்புள்ளிகள் என்றாலும் அரசு மறைக்காமல் உடனடியாக எடுக்கப்பட்ட பாதிப்புகளை சமாளிக்குமா என்பதைப் பார்க்க வேண்டும். ஆனால் பொதுவாக இந்த அரசு தூக்கி எறியப்பட வேண்டும் என்கிற அளவுக்கு மக்களின் வெறுப்புணர்வையோ எதிர்ப்புணர்வையோ சந்தித்ததாக தெரியவில்லை.
அவ்வாறு திமுகவுக்கு எதிரான ஒரு மனப்பாங்கு உருவாகி இருந்தால், 2024ல் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அந்த அணி முழுமையாக வெற்றி அடைந்திருக்க வாய்ப்பு இல்லை. ஆக இன்னமும் அதனுடைய கூட்டணி பலமும் மக்களுடைய செல்வாக்கும் கிட்டத்தட்ட அப்படியே இருக்கிறது என்று கொள்ளலாம்.
*பரிவு சார்ந்த காரணிகள்-அனுதாப காரணிகள்.
இத்தேர்தலில் நடிகர் விஜய் உச்சத்தில் இருக்கும் போது தனது வருமானத்தை விட்டு வந்ததாகவும், ஏராளமான வலிகளை சந்தித்து தேர்தலை சந்தித்ததாகவும் அனுதாபத்தை தேட முயற்சி செய்தார். கரூரில் அவர் நடத்திய கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசன் காரணமாக 41 பேர் இறந்ததையும் தனக்கு அனுதாபமாக மாற்ற முயற்சி செய்தார். ஆனால் வெற்றி பெற்றதாக தெரியவில்லை. இத்தேர்தலில் யாருக்கும் சாதகமான அனுதாப அலை எதுவும் பேசவில்லை என்பது உண்மை
*மதம் சாதியம் சார்ந்த காரணிகள்-மதம்- மற்றும் சாதி அடிப்படையிலான காரணிகள். தமிழகத்தில் மதரீதியான செயற்கை அணி என்பது மிகப் பெரிய அளவில் நடைபெறவிட்டாலும் அதற்கான முயற்சிகளை பாஜக கையில் எடுத்தது. திருப்பரங்குன்றம் மலை மேல் தீபம் ஏற்றி தொடர்ந்த வழக்கு மதுரை முருகன் மாநாடு போன்று மதப்பிரச்சினைகளை எந்த அளவுக்கு மக்கள் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். அதே நேரம் பொதுவாக ஏராளமான திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தியது, திருக்கோயில்கள் சொத்து மீட்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் அரசுக்கு சாதகமான விஷயங்களே.
அதே போல ஜாதிய ரீதியான அணிசேர்க்கை இந்த ஐந்தாண்டுகளில் நிறைய முயற்சிகள் நடைபெற்றன.அவற்றின் பாதிப்புகளை போற்றிப் பார்க்க வேண்டும்.
*ஊடக காரணிகள் - ஊடக காரணிகள்
தேர்தலில் ஊடகங்கள் அதிகபட்சமாக ஒருதலைப்பட்சமாக செயல்பட்டது என்பது கண்கூடாகத் திரிந்தது அவர்கள் விரும்புகிற போக்கிற்கு தேர்தலில் திசை வெளிப்பட அமைய சகல விதமான வித்தைகளையும் ஊடகங்கள் செய்த உதாரணத்திற்கு தேர்தலை சந்திக்காத அமைப்பு என்பது தனது பலத்தை சிறிதளவும் காட்டாதது அல்லது தனது கொள்கையை எந்த இடத்திலும் பிரதிபலிக்காத விதியை தமிழக ஊடகக் கழகத்திற்கு வழங்கிய முக்கியத்துவம் வாய்ந்தது. ஜனதா கட்சி நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளுக்கு அவர்களுடைய பலத்தை விட கூடுதலாக கிடைத்தது. அந்த அளவுக்கு பிரதான வெளிச்சத்தை பிரதான கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி காங்கிரஸ் கட்சி பொதுவுடமைக் கட்சிகள் போன்றவற்றின் ஊடகங்கள் செய்திடவில்லை என்பது கண்கூடான வெளிச்சம் குறிப்பாக விவாத மேடைகளில் பாஜக வலதுசாரி பத்திரிக்கையாளர் அரசியல் விமர்சகர்கள் என்ற பெயரில் அவர்களுக்குக் கொடுக்கும் அளவுக்கு அதிமுக கட்சிகள் ஆதரவு பெற்ற ஊடகப் பிரச்சாரத்திற்கு எதிராக திமுக இரு கட்சிகளும் பல சமூகங்களைச் சார்ந்து இருக்க வேண்டும். ஒரு புதிய கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளனர். இதில் நேர்முறையாக செய்யப்பட்ட விமர்சனங்கள் காட்டிலும் எதிர்மறையான விமர்சனங்கள் தனிமனித அவதூறுகளை மிக அதிகமாக இருந்தன அவை எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் இளைஞர்கள் மத்தியில் பாதிப்பை உண்டாக்குகின்றன என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் எனினும் இத்தேர்தலில் ஊடக காரணி என்பது மிக முக்கியமாக இருந்தது என்ற உண்மையை மறந்திருக்க கூடாது.
*இதர காரணிகள் - மற்ற காரணிகள்.
இதர காரணிகளாக பார்ப்பது பணம் இந்த தேர்தலில் எந்த அளவுக்கு புகுந்து விளையாடியது என்பதுதான். இதில் பிரதான கட்சிகள் எந்த வகையிலும் குறைச்சல் இல்லாமல் செயல்பட்டன. அவர்களை சார்ந்து நிற்கும் சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளுடைய நிழலில் ஒதுங்கி தேர்தல்களை சந்தித்தார்கள். சில தனிப்பட்ட வேட்பாளர்கள், மிக செல்வம் படைத்தவர்கள், மிக செல்வாக்கு படைத்தவர்கள் வாக்குக்கு பணம் அல்லது பரிசுத்தொகை பரிசு பொருட்கள் என்று ஏராளமாக செலவு செய்யப்பட்டது. ஆனால் அவற்றை சட்டபூர்வமாக யாராலும் குற்றம் சாட்ட முடியாது.
இத்தேர்தலில் நேர்மறை வாக்குகள் என்று சொல்வதானால் அந்தந்த கட்சிக்கான இயல்பாக விழக்கூடிய நம்பிக்கையின் அடிப்படையில் வாக்குகள். இது ஒரு குறிப்பிட்ட சதவீதம் நிச்சயமாக கிடைக்கும் எந்த சூழ்நிலையிலும் மாறிவிடாத வாக்குகள்.
அரசின் மீதான நம்பிக்கைக் குறைச்சல் அல்லது அதிருப்தி அந்த ஆத்திரத்தின் கோபத்தை வெளிப்படுத்தும் விதத்தில் செயல்படும் வாக்குகள் அல்லது குறிப்பிட்ட கட்சியின் இயல்பான எதிர்ப்பான வாக்குகள் என்பதை எடுத்துக் கொள்ளலாம். அப்படிப் பார்த்தால் திராவிடக் கூட்டணி முன்னேற்றக் கழகம் அதனுடையக் கட்சிகளுக்கான இயல்பான வாக்குகள் இயல்பாகவே கிடைக்கக் கூடியவை. அதேபோல அதிமுக கூட்டணியின் மீதான நம்பிக்கையின் அடிப்படையிலான வாக்குகள் ஓரளவுக்கு நிரந்தரமானது. அரசின் மீதான எதிர்மறை வாக்குகள் எந்த அளவுக்கு அதிகரித்தது, அந்த அளவுக்கு ஆளுங்கட்சிக்கான வாய்ப்பு குறைவதும் எதிர்க்கட்சிகளுக்கான வாய்ப்பு அதிகரிப்பதும் இயல்பானது. ஆனால் இங்கு அதிமுக அரசுக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை பகிர்ந்து கொள்ளப் போகிறவர்கள் யார் என்கிற கேள்விதான் பிரதானமாக எழுகிறது. எந்த அளவுக்கு தவேக வாக்குகள் வாங்குகிறதோ அந்த அளவுக்கு அதிமுக கூட்டணிக்கான வாய்ப்புகள் குறைவே.
பொதுவாக புதிதாக ஒரு கட்சி வரும்போது அந்த நம்பிக்கையில் ஏற்கனவே எதிர்மறையான சிந்தனைகள் உள்ளவர்கள் அந்த பக்கம் சாய்வது என்பதும், காலப்போக்கில் அந்த எதிர்மறை வாக்குகள் வேறொரு பிரிவிற்கு தான் செல்ல வாக்களிக்க வாய்ப்புள்ளது. உதாரணமாக திரு விஜயகாந்த் அவர்கள் கட்சி ஆரம்பித்த போதும் நாம் தமிழர் கட்சி ஆரம்ப காலத்திலும் பெற்ற வாக்குகள் அப்படியே அவரிடம் தங்கி விடவில்லை. அதேபோ போல புதிதாக வந்திருக்கும் தவெக விற்கு செல்ல வாய்ப்புள்ளது.
முடிவுரை.
பல்வேறு காரணிகளை அலசி ஆராய்ந்ததில் கூட்டணி பலம் என்பது திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு அதிக சாதகமாகவே உள்ளது அதிமுக கூட்டணியில் சில கட்சிகள் சேர்ந்திருந்தாலும் முக்கிய தலைவர்கள் சில பிரிவுகள் பிரிந்து சென்று எதிரணியில் தனியாகவோ நிற்பதால் பெரிய பாதிப்புகளை அவர்களால் அரசு உருவாக்க முடியாது என்கிறது மனோபாவத்திற்கு எதிரான மனப்பாங்கு உருவாக்க செல்வாக்கு ஓரளவு சிதைவினை சரி செய்ய இயலும் காரணிகள் ஊடக காரணிகள் இம்முறை கூடுதலாக புதிதாக உருவான தவேகாவிற்கு நிறைய வெளிச்சத்தை கொடுத்துள்ளது. ஏராளமான செலவுகள் செய்து சமூக ஊடகங்கள் மூலமாக அவர்கள் நிறைய பிரச்சாரம் செய்திருக்கிறார்கள். அது எந்த அளவுக்கு பாதிப்பு உண்டாக்கும் என்பது உடனடியாக சொல்ல இயலாது.
மற்ற வகையில் இத்தேர்தல் திமுக அணிக்கு கூடுதல் வாய்ப்பளிப்பதாக அமையும் என தெரிகிறது.
No comments:
Post a Comment