நீங்கள் வாக்களியுங்கள். தயவு செய்து வாக்களியுங்கள். யாருக்காவது வாக்களியுங்கள். யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள்....
ஆனால் வாக்களிக்கும் முன் ஒருவர் இந்து என்பதற்காகவோ, முஸ்லிம் என்பதற்காகவோ, கிறிஸ்தவர் என்பதற்காகவோ, சீக்கியர் என்பதற்காகவோ வாக்களிக்காதீர்கள்.
அவர் எந்த மதத்தை வேண்டுமானாலும் சார்ந்தவராக இருக்கலாம். ஆனால் அந்த மதத்தவர் என்பதற்காக மட்டுமே வாக்களிக்காதீர்கள். அவர் பிறமதங்களை வெறுக்க கூடியவராக இல்லாமல் மத நல்லிணக்கம் உள்ளவரா, அமைதியை பேணுபவரா என்று பார்த்து வாக்களியுங்கள்.
அவர் இந்த ஜாதிக்காரன் அந்த ஜாதிக்காரன் என்பதற்காக வாக்களிக்காதீர்கள். அவர் எந்த சாதிக்காரனாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆனால் சாதி வெறியனாய் இல்லாமல், சாதியை தூண்டி விடாமல், நல்லிணக்கம் பேணுபவரா, தீண்டாமையை பேணுபவரா, தீண்டாமையை எதிர்த்து களம் காண்பவரா என்று பார்த்து வாக்களியுங்கள்..
அவர் தமிழர் என்பதற்காகவோ, மலையாளி என்பதற்காகவோ, தெலுங்கு என்பதற்காகவோ வாக்களிக்காதீர்கள். அவர் எந்த மொழி பேசுபவராக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் பிறமொழி நம் மீது திணிக்கப்படும் போது அதை எதிர்த்து நிற்பவரா, அல்லது பிறமொழி திணிப்பவரோடு இணைந்து நிற்பவரா, தாய்மொழி காப்பவரா அல்லது பிற மொழி பேசுவோருக்கு எதிராக வெறியை தூண்டி விடுபவரா என்று பார்த்து வாக்களியுங்கள்.
அவர் கடவுள் நம்பிக்கை உள்ளவர் அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதற்காக வாக்களிக்காதீர்கள். ஏனெனில் அது அவரது நம்பிக்கை. ஆனால் பிறரது நம்பிக்கையை மதிப்பவராக இருக்கிறாரா, நம்பிக்கையை அவமதிப்பவராக இருக்கிறாரா என்று பார்த்து வாக்களியுங்கள்..
100% யோக்கியன் இல்லையென்று நோட்டாவிற்கு வாக்களிக்காதீர்கள். ஏனெனில் யாருமே 100% யோக்கியன் இல்லை நாம்உட்பட.
எனவே இருப்பதில் நல்ல தேர்வாக பார்த்து வாக்களியுங்கள்..
யாருக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள். ஆனால் தயவு செய்து வாக்களியுங்கள்.....
Very nice message
ReplyDelete