சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 17 April 2026

பிறந்தநாள்

 பிள்ளை பிராயத்திலே 

பெற்றோரும் உற்றாரும் 

கொண்டாடி மகிழ்விக்கையிலே

 புரியாத சந்தோஷம்... 


இளம் வயதில் 

இணையரோடு

கொண்டாடி மகிழ்கையில்

 ஏராளமான சந்தோசம்.... 


. பிள்ளை குட்டிகளோடு 

உற்றார் உறவினரோடு

 கொண்டாடுகையிலே

 உலகு வென்ற சந்தோஷம்.... 


சிறகு முளைத்து 

பறவைகள் பறந்த பின் 

வெற்றுக் கூடு தனில்

எஞ்சிய இணையரும் 

மிஞ்சிய நண்பரும் 

வாழ்த்துகையில் 

நெஞ்சமெல்லாம் நெகழ்ச்சி...

No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...