சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 12 April 2026

ஒரு நூற்றாண்டு வெறி-தொடர்ச்சி.

 ஒரு நூற்றாண்டு வெறி (7)

முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி

இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான முதல் படியாக அதற்கான அரசியலமைப்பைத் தயாரிக்கும் திட்டத்தைக் கடந்த 2022 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் பிரயாக்ராஜில் (பழைய அலகாபாத்) நடைபெற்ற தர்ம சம்சாதில் (தர்ம சபை) ஆர். எஸ். எஸ். அறிவித்திருக்கிறது. அதன்படி முப்பது ஆர். எஸ். எஸ். மத வெறியர்கள் (அறிவு ஜீவிகள்), அந்த அரசியலமைப்பைத் தயாரித்து முடித்துள்ளனர்.

அகண்ட பாரதம் என்னும் பெயரில் இந்து ராஷ்டிரம் அமைப்பதற்கான கொள்கை விளக்கங்களாக, 750 பக்கங்களில் இதைத் தயாரித்திருப்பவர்கள் எல்லாம் சாம்பவி மடம், இந்து ராஷ்டிரிய நிர்மான் சமிதி போன்ற முக்கிய அமைப்புகளின் நிர்வாகிகள். இதில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்களும் (நீதிபதிகளும்?), பாதுகாப்புத் துறை நிபுணர்களும் அடக்கம். இந்த வரைவு அரசியலமைப்பு, 2023 ஆம் ஆண்டு, சனவரியில், அலகாபாத்தில் நடைபெற்ற மகாமேளா தர்ம சம்சாதில் முன்வைக்கப்பட்டு இறுதி செய்யப் பட்டிருக்கிறது.

இதன்படி 'வாரணாசி' (காசி) இந்தியாவின் தலைநகரம் ஆக்கப்படும். புதிய பாராளுமன்றம் ஒன்று காசி வாரணாசியில் கட்டப்படும். அது 'தர்மசபை' என்று அழைக்கப்படும். தற்போதையக் கல்வி முறை ஒழிக்கப்பட்டுக் குருகுலக் கல்விமுறை நடைமுறைப்படுத்தப்படும். நாடாளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகள் இருக்க மாட்டார்கள். 'மத'ப் பிரதிநிதிகள் தான் இருப்பார்கள். மூச்சு முட்டுகிறதா? இன்னும் இருக்கிறது.

இந்தியாவில் முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வாழலாம். ஆனால் அவர்கள் தேர்தல்களில் பங்கு கொள்ள முடியாது. ஏன், வாக்களிக்கக் கூட முடியாது. இந்துக்களில் பதினாறு வயது முடிந்தோர்க்கு வாக்குரிமை அளிக்கப்படும். ஒவ்வொரு குடிமகனுக்கும் கட்டாய ராணுவப் பயிற்சி அளிக்கப்படும்.

இந்த அரசியலமைப்பு வரைவின் முகப்பு, அகண்ட பாரதத்தின் வரைபடத்தைக் கொண்டிருக்கிறது. அகண்ட பாரதம் என்பது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, மியான்மர் ஆகியவை இணைந்த பகுதியாகும் (டைம்ஸ் ஆப் இந்தியா, மும்பை, 13. 8. 2022).

மொத்தத்தில் திரேதா யுகம், துவாபர யுகங்களில் இருந்த சனாதனச் சட்டங்களின் அடிப்படையிலேயே நீதிப் பரிபாலனங்கள் நடைபெறும். நான்கு வர்ணங்களின் அடிப்படையிலான மனுதர்மம் முதலாக அனைத்தும் சட்டத்தின் தகுதியைப் பெறும்.

முட்டாள்களிலும் கேடுகெட்ட முட்டாள்கள் கூடச் சதுர்யுகம், சாஸ்திரங்கள் தேவை என்று பேச மாட்டார்கள் என்று அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகியோர் எத்தனையோ சொல்லி விட்டுச் சென்றார்கள். அவர்கள் இல்லாத இந்தியாவுக்கு இவை எல்லாம் உரைகல்.

தமிழ் நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிடவில்லை. அவற்றிற்குத் தான் திராவிட மாடல் ஆட்சியைக் குறை சொல்வதிலேயே பக்கங்கள் தீர்ந்து விடுகிறதே... (இதுதான் சங்கிகள் ஆதரவு நிலை).


ஒரு நூற்றாண்டு வெறி (8)

இந்து ராஷ்ட்ரம் ஏற்படுத்த ஓர் சனாதன அரசியலமைப்பு உருவாக்கப் பட்டுள்ளதையும், அதன் எதிர்காலத் திட்டங்கள் பற்றியும் கூறும் ஆர். எஸ்.எஸ். அமைப்பினர், தங்களைச் சமத்துவ வழியில் பணியாற்றும் (!) சமூக நீதி போற்றும் அமைப்பாகவும் கூறிக் கொள்கின்றனர்.

நான்கு வர்ணங்களின் வழியே இச்சமுதாயம் நடக்க வேண்டும் என்பதை ஒரு பிரகடனமாகச் செய்யும் அமைப்பு, 'சமூகநீதி' என்று சொல்லை உச்சரிக்கும் தகுதி கூட இல்லாதது. இந்நாடு, காட்டு மிராண்டிகள் வாழும் சமுதாயமாக மலர வேண்டும் என்பதைக் கொஞ்சம் கூட வெட்கமின்றிக் கூறுவது மட்டுமல்ல, அதுவே தங்களின் எதிர்கால இலட்சியமாகவும் அறைகூவல் விடுத்துள்ளனர்.

இந்து என்ற போர்வையில் அவர்களோடு சேர்ந்து கொண்டு பெரியார், அம்பேத்கர் சிலைகளைச் சேதப்படுத்தும் நால்வர்ண அடிமைக் கூட்டங்கள் இப்போது கூட விழிப்புணர்வு பெறவில்லை என்றால் வேறு எப்போது? இத்தனை ஆண்டுக் காலமாகச் சூத்திரர் என்றும், அவர்ணர் என்றும், இவர்கள் அனைவரும் தாசி மக்கள் என்றும் மனுநீதி மற்றும் பிற சாஸ்திரங்கள் வழி பேசியும், எழுதியும் வந்தும் மானம் இன்றி வாழ்ந்து வந்த கூட்டங்கள் பெரியார், அம்பேத்கரால் தான் உண்மை தெரிந்து, சுயமரியாதை, சமதர்மம், சமூக நீதி என்ற கோட்பாடுகளைப் புரிந்து கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாகக் கல்வி அறிவு பெற்ற சமுதாயமாக மாறி வந்துள்ளனர்.

"கற்பி, புரட்சி செய், ஒன்று சேர்" என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதையும், "மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு" என்று பெரியார் சொன்னதையும் மறந்து, எவன் தன் தாயைப் புனிதம் இல்லாதவராக ஆக்கினானோ, அவன் காலில் விழுந்து சரணம் என்று அடிவருடும் கூட்டத்தைக் காட்டுமிராண்டிக் கூட்டம் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது?

காட்டுமிராண்டிக் காலத்து இனக்குழுக்கள் போன்று விதவிதமான வண்ணக் கோடுகளை நெற்றியிலும், உடம்பிலும் பட்டை பட்டையாகப் பூசிக் கொள்வதன் காரணம், தாங்கள் இந்த இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்று காட்டிக் கொள்ளும் காட்டுமிராண்டித் தனம்தானே?


ஒரு நூற்றாண்டு வெறி (9)

மதவெறியின் கதை இதற்கு மேலும் நீள்கிறது. உச்ச கட்டப் பொய்யாக, இந்திய மனங்களைக் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க உருவாக்கிய அமைப்பாகத் தங்களை வெட்கமின்றி மார்தட்டிக் கொண்டுள்ளது ஆர்.எஸ்.எஸ்.

பிரிட்டிஷ்காரர்களிடம் மன்னிப்புக் கேட்டும், ஓய்வூதியம் பெற்றும் வாழ்ந்தவர்கள்; அதற்காகப் 'புல்புல்' பறவை மீது ஏறித் தாய்நாடு வந்தவர்கள்; நாட்டு விடுதலைக்காகப் பாடுபடும் விடுதலை வீரர்களைக் காட்டிக் கொடுத்தவர்கள்; காந்தியைக் கொல்லப் பலமுறை முயன்று, இறுதியில் கொன்றே பழி தீர்த்தவர்கள்;

மதக் கலவரங்களைத் திட்டமிட்டு உருவாக்கி, அதில் இன்னும் குளிர்காய்ந்து கொண்டிருப்பவர்கள்; இந்துக்களைத் தவிர பிற மதத்தினர் இந்தியாவில் வாழும் நிலையைக் கேள்விக்குறியாக்கி, அவர்கள் எப்போதும் அச்சத்துடனேயே வாழும் நிலையைக் கொண்டு வந்தவர்கள்; கர்ப்பிணிகளையும், குழந்தைகளையும் பாலியல் வன்முறை செய்து கொடூரமாகவும் கொன்று தீர்த்த ராம, கிருஷ்ண பக்தர்கள்;

சாதியப் பிரச்சினைகளுக்கு எண்ணெய் ஊற்றிப், பெரிதாகத் தீபம் ஏற்றி, அதனால் விளையும் கலவரங்களுக்குத் தாங்கள் பலியாகாமல் பிற இந்துக்களை, நந்தனாரைப் போன்றும், வள்ளலாரைப் போன்றும் பலியாக்கத் துடிப்பவர்கள்; இந்தியாவை உலக அரங்கில் தலைகுனிய வைத்திருப்பவர்கள்; நாட்டுக் கொடிக்கோ, நாட்டுப் பாடலுக்கோ எப்போதுமே மரியாதை தந்திராதவர்கள்;

சொல்லப்போனால் இந்தியச் சட்டத் தொகுப்பினில் (இ.பி.கோ.) உள்ள அத்தனைப் பிரிவுகளையும், குற்றங்களையும் செய்தவர்கள், செய்து கொண்டிருப்பவர்கள், நாளையும் இவற்றைச் செய்யும் பொழுது தங்களுக்கு மனுநீதி அளிக்கும் பாதுகாப்பை வேண்டி, மனுதர்ம ஆட்சி வேண்டும் என்று பேசுபவர்கள்; கடைந்தெடுத்த தேசத்துரோகிகள்; மனிதத் தன்மையே சிறிதுமற்ற இழிபிறவிகளான இவர்கள் நாட்டுணர்வைப் பற்றிப் பேசுவது கீழ்மையிலும் கீழ்மை தானே!

(தொடரும்)


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...