சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 23 April 2026

அவலத்தின் குரல்


 அவலத்தின் குரலோ, 

ஆவேசத்தின் குரலோ. , 

 கானகத்து விலங்கு, 

சமூகத்து விலங்கு, 

அகிலத்து விலங்கென 

அத்தனைக்கும் பொதுவானது....


இருட்டு கருமையானது, 

 திகிலூட்டுவது, 

வெறுக்கத்தக்க., 

 எனினும் 

வானத்தை ரசிக்க, 

 நட்சத்திரங்களை ஆராதிக்கும், 

 இருட்டே விருப்பமானது.....


தேனீக்கள் இல்லாத உலகம்

உயிரற்ற உலர்நிலம்....

தாவரங்கள் விலங்குகளில்லா 

உலகு கான்கிரீட் காடு...

மனிதர்கள் இல்லாத உலகு

 உயிரனைத்துக்கும் பூலோக

சொர்க்கம்.



No comments:

Post a Comment

சமநிலை காப்போமெ

காடுகள்,  ஆறுகள்,  பறவைகள்,  விலங்குகள்   தூய்மையான காற்று  ஒருபுறம் இயற்கை தந்த அருட்கொடையயாய்.....  புகை,  எண்ணெய், தொழிற்சாலைகள்,  கான்கி...