சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 5 April 2026

படித்ததை பகிர்கிறேன்.🙏🏻

பெயர் வெளியிட விரும்பாத ஒரு பெண்மணியின் பதிவு.*

கடந்த சனிக்கிழமை அன்று என் கணவரோட நண்பர் வீட்டுக்குப் போயிருந்தோம்.

அவரோட அப்பா பெங்களூர் யுனிவர்சிட்டி ரிட்டயர்டு ப்ரஃபசர்.

கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, துளு, ஆங்கிலம் என பன்மொழி வல்லுனர்.

கன்னட மொழி குறித்து ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிய கன்னடர். அவரிடம் பேச வாய்ப்புக் கிடைத்தது.

*அவர் கூறியதும், எனது ஹிந்தி மொழி குறித்த சிந்தனையையே மாற்றி விட்டது.*

அவர் சொன்ன தகவல்:

உங்கள் தமிழகம் போல ஆட்சி செய்யனும்னுதான் நாங்களும் விரும்பறோம்.

ஆனா இப்ப அங்கேயும் வடமாநில ஆதிக்கம் ஊடுருவத பாக்குறதுக்கு

ரொம்ப வேதனையா இருக்கு.

*எங்களப் பாத்து நீங்க திருந்திக்கணும்.*

இங்க பெங்களூர்ல ஹிந்தி மொழி ஆதிக்கம் வந்து பல காலமாச்சு.

கொஞ்சம் கொஞ்சமா ஊடுருவி இப்ப எங்களால சமாளிக்க முடியாத அளவு ஆக்கிர மிச்சிட்டாங்க.

அவன் வடநாட்டுல இருந்து இங்க வந்து ஹிந்தியில பேசறான்.

*"எனக்கு ஹிந்தி மட்டுந்தான் தெரியும்"னு ஆணவமா சொல்றான்.*

கன்னடம் தெரியாதுங்கறான்.

எவரும் உலகத்துல எங்க போனாலும் அந்த பிரதேச மொழியில பேசறதுதான் வழக்கம்.

ஆனா இங்க மட்டும் அவனுக்காக நாங்க எங்க தாய்மொழிய விட்டுட்டு அவங்கிட்ட ஹிந்தியில பேசற நிலைமைக்கு வந்துட்டோம்.

*மொழிங்கறது வெறும் பேச்சில்லை* .

அது வாழ்க்கையின்ஜீவாதாரம்.

ஆனா நாங்க அந்த ஜீவாதாரத்தைத் தொலைச்சுட்டு இருக்கோம்.

இப்ப *எங்க தாய்பூமி பெங்களூர்ல* குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே வாழ முடியும்கிற அளவுக்கு ஒடுக்கப்பட்டு வருகிறோம்.

சிட்டியில முக்கிய இடங்கள்ல அவனுங்கதான் வாழறாங்க.

சித்தராமையா கூட அன்ஸ்கில்டு லேபர்ஸ் கன்னடர்களாகத்தான் இருக்க வேண்டும் என சட்டம் போடப்போறதா அறிவிச்சாரு.

ஆனா முடியல்ல. அதுக்குவடமாநில பிரஷர்தான் இதுக்கெல்லாம் அடிப்படைக் காரணம்..

தமிழகம் மாதிரி, மாநில நலன் சார்ந்த கட்சிகளை நாங்க ஆதரிக்காம *தேசிய கட்சிகளை ஆதரித்ததுதான் தப்பு*

தமிழகம் போல இருமொழிக் கொள்கை இல்லாம மும்மொழிக் கொள்கையை ஏற்றதுதான்.

நவோதயா பள்ளி ஆரம்பிச்சா மத்திய அரசு நிதி தரும், அது தரும், இது தரும்னுஆசை காட்டுவாங்க.

அது உங்க நன்மைக்கு இல்லை. அவன் ஆளுங்களோட வாழ்வாதாரத்தை மேம்படுத்தத்தான்.

தமிழுக்கு என்னம்மா குறைச்சல்.????

ஏன் ஹிந்தி கற்க ஆசப்படுறீங்க..?

உள்ளூர் தொடர்புக்கு தமிழ்,

உலகத்தொடர்புக்கு ஆங்கிலம் போதும்.

இப்பவே பல நிலைகளிலும் உங்க *வேலை வாய்ப்புகளை ஹிந்திக்காரங்க பறிக்க* ஆரம்பிச்சாச்சி.

நீங்க ஹிந்திமேல ஆர்வப்பட்டா அவங்க ஊடுருவுவதும், தன் ஆட்களை தென் மாநிலங்களில் குடியேற்றுவதும் எளிதாகி விடும்.

எனவே,

அனுபவப்பட்டவன் என்கிற முறையில நான் சொல்றேன்.

ஹிந்தி கற்க ஆர்வப்படாதீங்க. ஒருவேளை வடமாநிலத்துக்கு யாராவது வேலைக்குபோனா அவன் தானாகவே ஹிந்தி கத்துக்குவான்.

ஹிந்தி கத்துக்க ஆர்வப்படாதீங்க. *மும்மொழிக்கொள்கையை ஆதரிக்காதீங்க.*

இதெல்லாம் செஞ்சா உங்க 

வாழ்வாதாரமே சீரழிஞ்சிடும்.

_உங்க தலைமுறைக்குப் பிறகு உங்க இனமும் அவனுக்கு அடிமைப்பட்டுப் போய்டும்..._

என வருத்தப்பட்டுக் கூறினார்.

இது எந்தளவு ஏற்புடையது என நீங்கதான் சொல்லணும்.

எனக்குத் தெரிந்த சில மொழியியல் பேராசிரியர்கள் பெங்களூருவில் உண்டு. அவர்களுடைய கருத்தும் இதுவாகவே இருந்தது.

மும்பையில் வாழ்பவருக்கு மராத்தி கொஞ்சம் கூட தெரிய வேண்டிய அவசியம் இல்லை!. ஏன் இந்த நிலைமை அந்த மண்ணுக்கு ஏற்பட்டது?

நாங்கள் ஓரளவுக்கு மொழிகளின் வரலாறும், மானுடவியலும் படித்தவர்கள் . *இந்தியோ சம்ஸ்கிருதமோ இத்தமிழ் மண்ணில் வளர்ந்தால், தமிழ் தானாக அழிந்து படும்.*

அப்படி, தமிழ் அழிந்து தான், மலையாளம், கன்னடம், தெலுங்கு உருவாயின.

மறைமலையடிகள் சோமசுந்தர பாரதியார், திரு வி. க, கி.ஆ.பெ, பன்மொழிப் புலவர் அப்பாதுரை ஆகியோரால் நம் மொழி காப்பாற்றப் பட்டது.

இந்த ஒரு விஷயத்திலாவது நீங்கள் வித்தியாசமாக இருங்கள்! நாளைக்கு உங்கள் மனசாட்சி உங்களைத் *'தாய் மொழித் துரோகி'* என சபிக்கும் நிலைக்கு ஆளாகி விடாதீர்கள்.

நாம் கண்ணுக்கு தெரியாத கடவுளின்பால் காட்டும் ஈடுபாட்டில், சிறிதளவு கூட தாய்மொழி மேல் காட்டுவதில்லை.

*தாய் மொழி மறந்த சமூகம் அடிமைச் சமூகமாக மாறும் என்பது திண்ணம்!* இதுவே கடந்த கால வரலாற்று உண்மை!

படித்ததை பகிர்கிறேன்.🙏🏻

***'******

இப்படித்தான் மராத்தி, குஜராத்தி, போஜ்பூரி, போன்ற மொழிகள் மெல்ல மெல்ல அழிந்தன.... 


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...