சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 2 April 2026

தேர்தல் திருவிழா 7

 பொதுவாகவே கீழ் கண்ட( Factors ) காரணிகளே தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கின்றன.

*கூட்டணி காரணிகள் — கூட்டணி காரணிகள் Alliance factors. 

*ஆளுமை எதிர்ப்பு காரணிகள்-anti incumbency factors. 

*பரிவு சார்ந்த காரணிகள்-அனுதாப factors. 

*மதம் சாதியம் சார்ந்த காரணிகள்-Religion- and Caste-based Factors.

*ஊடக காரணிகள் - Media factors

*இதர காரணிகள் - Other factors.

கூட்டணி காரணிகள் — கூட்டணி காரணிகள்

இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்ததில் இருந்து இன்றுவரை பார்த்தால் ஒவ்வொரு கட்சிகளுடைய பலம் மாறிக்கொண்டே இருந்திருக்கிறது. சுதந்திரம் கிடைத்த புதிதில் மிகப்பெரிய கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பிரிட்டிஷ் இந்தியாவில் சுதந்திரத்திற்காக போராடிய ஒரு இயக்கமாக இருந்தது. வலுவான கட்டமைப்பு என்பது இந்தியா முழுக்க கொண்டிருந்த கட்சியாக அது இருந்தது. அதனால் அதற்கென்று நிரந்தரமான ஒரு வாக்கு வங்கி இருந்தது. அதற்கு அடுத்தபடியாக உள்ள கட்சிகள் எல்லாமே முன்பு காங்கிரஸிலிருந்து, கொள்கை மாறுபாடுகளினால் அல்லது பிற காரணங்களினால் வெளியேறி கட்சிகளை உருவாக்கிக் கொண்டவர்கள். அவர்களுக்கான கட்டமைப்பு என்பது இந்தியா முழுமைக்கும் நிறைந்திருந்தது என்று சொல்ல இயலாது. முஸ்லிம் லீக் பொதுவுடைமைக் கட்சிகள் உழவர் உழைப்பாளர் கட்சி பிரஜா சோசியலிஸ்ட் பார்ட்டி என ஏராளமான கட்சிகள் காங்கிரஸிலிருந்து வெளிவந்தவை தான். 

அதேபோல தேர்தல் அரசியலும், இயக்க அனுபவமும் குறைவாக கொண்டிருந்ததால் அவர்களது வாக்கு வங்கி காங்கிரஸுக்கு சமமானதாக இல்லை என்பதை விட வெகு தொலைவில் தான் இருந்தது என்பதை தேர்தல்களை பற்றி ஆய்வுகளில் காண முடியும். 

இந்தியாவில் தேர்தல் முறை என்பது நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுத்து பெரும்பான்மை கொண்டவர்களைக் கொண்டு மைய, மாநில ஆட்சி அமைக்கக்கூடிய முறை.

நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை மக்கள் தேர்ந்தெடுக்கும் போது ஆக கூடுதலாக ஒரு வாக்கு யார் பெற்றிருக்கிறாரோ அவரே தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி ஆவார். மொத்த  வாக்களிக்கும்  தொகையில் மிகக் குறைந்த சதவீதம் பெற்று இருந்தாலும் கூட ஒரு வாக்கு கூடுதலாக பெற்று விட்டார் அவர் பிரதிநிதி. அவருக்கு எதிராக ஏராளமான சதவீத வாக்குகளை பெற்று ஆனால் ஒரு வாக்கு குறைவாக பெற்று இருந்தாலும் அவர்கள் தோல்வி அடைந்தவர்கள். உதாரணத்திற்கு நூறு வாக்காளர்கள் வாக்களிக்கும் போது 20 வாக்கு பெற்ற ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் அவருக்கு எதிராக 80 சதமான வாக்குகள் பதிவாக இருந்தாலும் பிரச்சனை இல்லை ஒரே ஒரு வாக்கு குறைவாக  19 வாக்குகள் பெற்றவர் கூட தோல்வி அடைந்தவர் தான். சில நாடுகளில் இருப்பதைப் போல தொகுதிக்கான பிரதிநிதி கூடுதலாக ஒரு வாக்கு பெற்று இருந்தால் அவர் தேர்ந்தெடுக்கப்படுவார். அதேநேரம் தேசம் முழுக்க கட்சிகள் பெற்றிருக்கக் கூடிய வாக்கின் அடிப்படையில், சதவீத அடிப்படையில் சில குறிப்பிட்ட அளவு வாக்கு பெற்ற கட்சிகள் தங்கள் பிரதிநிதிகளையும் நாடாளுமன்றத்திற்கு அனுப்ப முடியும். உதாரணமாக அருகில் இருக்கக்கூடிய இலங்கை நேபாளத்தை எடுத்துக் கொள்ளலாம்.

அதனால் தேர்தல்களை சந்திக்கும்போது  பிரதான கட்சிகள் யாருடைய தயவும் இன்றி ஆட்சி அமைக்க முடியும் என்பதால் தனியாக நிற்பதும்,மற்ற கட்சிகள் தங்கள் எதிர்க்கக்கூடிய கட்சிக்கு எதிராக ஒரு குறைந்த பட்ச திட்டத்தோடு கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்திப்பதும் தவிர்க்க முடியாதது. ஜனநாயக அமைப்பில் ஏற்றுக் கொள்ளக் கூடியது .எல்லாக் கட்சிகளுக்கும் ஒரு வாக்கு வங்கி என்பது இயல்பாகவே இருக்கும். அப்பொழுது கூட்டணி அமைத்து தேர்தல்களை சந்திக்கும்போது தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கக்கூடிய ஒரு முக்கிய காரணியாக கூட்டணி காரணிகள்  Alliance factors அமைந்துவிடுகிறது. பின்னாளில் எந்தக் கட்சியுமே தனித்து தேர்தலை சந்திக்க இயலாது கூட்டணி அமைத்தால் தான் சந்திக்க முடியும் என்ற நிலைமை ஏற்பட்டது தான் வரலாற்று உண்மை. 


தொடர்ந்து யோசிப்போமே. 

1 comment:

  1. சிறந்த தகவல்கள்….. நன்றி. அ கோ சூரி.

    ReplyDelete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...