சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 6 April 2026

கடவுளும் ஐநா சபையும்

 இந்த பூவுலகத்தில் எல்லா இடத்திலும் வியாபித்து இருப்பதாய் நம்பப்படுபவர் கடவுள். அதே போல இந்த உலகத்தில் உள்ள எல்லா நாடுகளையும் ஒருங்கிணைத்து கட்டுப்படுத்தி, வழிநடத்திக் கொண்டிருப்பதாய் சொல்லப்படுவது ஐநா சபை. தனிமனித உரிமை, சுதந்திரம், பெண்கள் பாதுகாப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், நீதி உணவு, சுற்றுச்சூழல், கலாச்சாரம் என எல்லாத்துறையிலும் வியாபித்து அனைத்து மக்களுக்கும் வழிகாட்டக்கூடிய கருதுகோள்களை உருவாக்கக்கூடிய மாபெரும் மிகச் சிறந்த அமைப்பாக நம்பப்படுவது ஐநா சபை. 

 அரசாங்கங்களுக்காக சுயாதீன உரிமை  கோட்பாடு, பக்கத்து நாடுகளுடனான ஒற்றுமை, ஒருமைப்பாடு, சமாதானம் ஆகக்கூடிய அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைக்கக்கூடிய, உறுதியளிக்கக் கூடிய அமைப்பு ஐநா சபை என்று சொல்லிக் கொள்கிறார்கள். 

ஆனால் ஒரு புண்ணாக்கும் பயன் இல்லாத, வெட்டி தண்ட கருமாந்திரங்களுடைய சபை என்று சிலர் திட்டிக் கொண்டிருக்கிறார்கள். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. ஐநா சபை நினைத்தால் எதை வேண்டுமானாலும் செய்து விடக் கூடியது. அதை நினைத்தால்  அது தீர்மானித்தால் பல நாடுகளைக் கொண்ட படைப்பிரிவை அனுப்பி எந்த நாட்டையும் கட்டுப்படுத்தக்கூடிய வல்லமை படைத்தது. ஆனால் அந்த நாடு எதற்கும் வக்கற்ற ஏழை நாடாக இருக்க வேண்டும். கொஞ்சம் பெரிய நாடாகவோ வல்லரசாகவோ, வல்லரசுக்கு அல்லக்கையாகவோ இருந்துவிட்டால் ஒன்றும் செய்யாது. கருத்து மட்டுமே கூறிக் கொண்டிருக்கும். 

அதே போல தான் கடவுளும்... உலகத்தில் மத நம்பிக்கை கொண்டவர்கள் தான் மிக அதிகம். ஏராளமான மதங்கள்.. அவரவர்க்கென்று ஏராளமான கடவுள்கள், ஏராளமான கோட்பாடுகள், ஏராளமான தத்துவங்கள், ஏராளமான வழிகாட்டுதல்கள் என்று  வழிகாட்டக்கூடிய,  கட்டுப்படுத்தக்கூடிய  தண்டனை அளிக்கக்கூடிய, இம்மையில் இல்லாவிட்டாலும் மறுமையிலாவது தண்டனை வழங்க்கூடிய வல்லமை படைத்தவர் கடவுள். உலகத்தில் உள்ள அனைவரும் கடவுளின் குழந்தைகளே. அனைவரையும் சமமாக பாவிக்க வேண்டும்.. ஏனென்றால் எல்லாம் அவருடைய படைப்பு. அவற்றை அழிக்க யாருக்கும் உரிமை கிடையாது, அதிகாரம் கிடையாது . யார் தவறு செய்தாலும் இறப்புக்குப் பின், இறுதி தீர்ப்பு நாளிலே அல்லது மறுமையிலே விசாரித்து தவறு செய்தவர்களுக்கு தண்டனை அளிப்பார் என்று எல்லா மத நம்பிக்கையாளர்களும் நம்புகிறார்கள். 

ஆனால் அந்த மத நம்பிக்கை வலியுறுத்துகிறார் கள்,  அந்த மதத்தின் பெயரால் ஆட்சி செய்பவர்கள் யாரும் துளி கூட ஆண்டவனின் கட்டளையை மதிப்பதில்லை. ஆண்டவனுக்கு அதிகாரம் இருப்பதாக கூட நினைப்பதில்லை. ஆக கடவுளால் ஒன்றும் செய்ய முடியாது என அதிகமாக நம்புபவர்கள் அந்த மதத்தை நம்புபவர்களே. 

எப்படி ஐநா சபை எதையும் கட்டுப்படுத்த முடியாத வெட்டிமன்றமாக இருக்கிறதோ அதேபோல மனதுக்கு வெறுமனே ஆறுதல் அளித்து அனுப்பி வைக்கக்கூடிய மையமாக ஆண்டவர்களுடைய ஆலயங்கள் மாறி வருகின்றன.


உலகெங்கிலும் உள்ள 140 கோடி கத்தோலிக்கர்களின் தலைவர், பிறப்பால் ஒரு அமெரிக்கர், தன்னை உருவாக்கிய தேசத்திலிருந்தே ஒரு அகதியாகிவிட்டார். அவர் டிரம்பின் அமெரிக்காவைப் பார்க்கும்போது, ​​அது மிகவும் விரோதமானதாகவும், சட்டவிரோதமானதாகவும், அச்சுறுத்தலானதாகவும் தெரிகிறது, அதனால் அவர் அதிலிருந்து முற்றிலும் விலகியே இருக்க விரும்புகிறார். அவர் அநீதியான போரை எதிர்க்கிறார் என்பதால் அமெரிக்க அரசின் வேண்டாத விருந்தாளியாகிவிட்டார்.பென்டகனால் மிரட்டப்பட்ட போப் தனது ஜூலை 4ஆம் தேதி அமெரிக்கப் பயணத்தை ரத்து செய்தார்.

. இது தான் அவர்கள் கடவுளுக்கு கொடுக்கும் மரியாதையின் லட்சனம்..

*********

கருணையை விட உயர்ந்த மதம் எதுவுமில்லை.

கருணையை விட ஆழமான புனித நூல் எதுவுமில்லை.

அன்பை விட புனிதமான சடங்கு எதுவுமில்லை.

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...