ஒரு நூற்றாண்டு வெறி (10)
ஆர். எஸ். எஸ். அமைப்பு, அரசியல் சாசனத்தை மதிக்கும் அமைப்பு என்றும் அதன் செயலாளர் தத்தாத்ரேயா கூறியிருக்கிறார்.
அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்பில் சமத்துவம், மதச்சார்பின்மை ஆகிய சொற்களை (அரசியலமைப்பு சட்டத் திருத்தத்தின் போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி அம்மையாரால் சேர்க்கப்பட்ட சொற்கள்) நீக்கிவிட வேண்டும் என்று போராடிக் கொண்டும், அதற்காகப் பாராளுமன்றத்தில் தனிநபர் தீர்மானம், கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தும், ஊடகங்களில் அதைப் பற்றிப் பகிரங்கமாக அறிவித்தும் வரும் அமைப்பாகத் தங்களை வெளிப்படுத்திய பின்பும், அண்ணல் அம்பேத்கரை மதிக்கும் அமைப்பு என்று கூறிக் கொள்ளும் இவர்களுக்கு மானம் இருந்தால், பாராளுமன்றக் கட்டிடத்திற்கு வெளியே தூக்குப் போட்டுத் தொங்கி இருக்க வேண்டும்.
'மானம்' என்ற சொல் ஆரியப் பண்பாட்டிலேயே இல்லை. ஆதலால், அதைக் கேட்டும், உணர்ந்தும் அறியாத ஆர்.எஸ்.எஸ்., பாராளுமன்றத்தின் உள்ளேயே சென்று விட்ட பி.ஜே.பி. மூலம் காய் நகர்த்தி வருகிறது. அதன் வெளிப்பாடு தான், அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை, சமத்துவம் ஆகிய சொற்களை நீக்கிவிட வேண்டும் என்று ஐந்து ஆண்டுகளாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.
தற்போது அதற்கும் மேலே சென்று இனி அரசியலமைப்புச் சட்டங்கள் தேவையில்லை. மனுநீதியின் சட்டங்களே இந்நாட்டை ஆளட்டும் என்று வெளிப்படையாக அறிவித்தும் விட்டனர்.
இந்தியா இனி 'மனிதர்கள் வாழும் நாடு' என்ற தகுதியை இழப்பதற்கான அடையாளம் தான் மனுநீதிக் கூட்டம் ஆளுகின்ற நிலை. மிருகத்தன்மையில் கூட ஓர் ஒழுங்கும், இயற்கை நியதியும் உண்டு. ஆனால் மதம், சாதி, மனுநீதி என்று ஒழுகும் இவர்களை 'மனிதர்கள்' என்று எப்படிச் சொல்வது? இவர்களை நாகரிகமாகத் திட்டுவதற்குக் கூடச் சொற்கள் இல்லையே. அது மாதிரியான சொற்கள் உலகின் எந்த மொழிகளிலும் இருக்க முடியாது என்றே தோன்றுகிறது.
அப்படியே கிடைத்தாலும் அவற்றை மொழியக் கூடாத சொற்களாகத் தடைபோடும் இழிபிறவிகள் ஆகிவிட்ட இவர்களிடம் தான், இந்த நாட்டின் இறையாண்மை மாட்டிக் கொண்டு குற்றுயிராய்த் திணறிக் கொண்டிருக்கிறது, குழந்தை ஆசிபாவைப் போல.
(தொடரும்)
(மீள்)
முனைவர் சிவ இளங்கோ, புதுச்சேரி.


No comments:
Post a Comment