தேர்தல் முடிவுகளை பல்வேறு காரணிகள் தீர்மானித்ததைக் கண்டோம். நேர்மையாக விருப்பு வெறுப்புகள் தாண்டி ஆய்வு செய்யும் போது பல்வேறு விஷயங்களைக் காண முடியும்.
அசாதாரண சூழலில் தேர்தல் தேர்தல்கள் நடைபெறும் போது மேற்கண்ட காரணிகள் பெருமளவில் பயன்படாது. அசாதாரண சூழ்நிலை என்று சொல்வது போர் பதற்றம்,தீவிரவாதம், உள்நாட்டு சட்ட ஒழுங்கு குலைவு, போன்ற கட்டங்களில் நடைபெறும் தேர்தல்களில் இயல்பான தேர்தல்களைப் போல அமைந்து விடுவதில்லை.
தேர்தல் புறக்கணிப்பு அழைப்புகள். கெடுபிடிகள், அச்சுறுத்தும் சூழல்களின் தேர்தலின் பங்கேற்பு என்பது மிகக் குறைந்த சதவீதமாக உள்ளது. தவிர வாக்குச்சாவடி சூறையாடல், கைப்பற்றல் தேர்தல் முறைகளை போன்ற விஷயங்களும் ஆங்காங்கே நடைபெற்றதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. பெரும்பாலும் வட மாநிலங்களில் இம்மாதிரி குற்றச்சாட்டுகளை அதிகம் காணலாம். கள்ள ஓட்டு, வாக்காளர் பெயர் நீக்கம் போன்ற போன்ற குற்றச்சாட்டுகளை பொதுவாக எல்லா இடங்களிலும் காண முடியும். இவற்றைச் சட்டப்பூர்வமாகப் பேச முடியாது, ஏனென்றால் இது போன்ற விடயங்கள் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்படாத வரை வெறும் குற்றச்சாட்டுகளே. ஆனால் நீதிமன்றங்கள் விரைவில் விசாரித்து தீர்ப்பளிக்கப்படுவதில்லை. இது பற்றி பேசினால் நீதிமன்ற அவமதிப்பு கூட வந்து விட வாய்ப்பு இருக்கிறது. உதாரணமாக ராதாபுரம் தொகுதியில் திரு அப்பாவு வழக்கு தொடர்ந்து பத்து ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இன்னும் தீர்ப்பு வரவில்லை. ஆனால் என்ன செய்வது. அதிகார துஷ்பிரயோகம் தேர்தல் முறைகள் ஆகியவற்றால் தண்டிக்கப்பட்டவர்கள் என்பது மிக மிக குறைவு. அதனால் தான் ஒரு சிறு பிரிவினர் தேர்தல் நம்பிக்கை தேர்தல் மீது நம்பிக்கை இழந்து வாக்களிக்க கூட செல்லாமல் இருந்து விடுகிறார்கள்.
ஆனாலும் வென்றவர் நீதி வென்றது என்பார். தோற்றவர் புலம்புவார் வேறு என்ன செய்ய முடியும்.
தேர்தல்களில் தேர்தல் வாக்குறுதிகள் அல்லது மக்களை கவரக்கூடிய சில கோஷங்கள் பெரிய அளவுக்கு மக்களிடையே ஒரு மாற்றத்தை உண்டாக்கும். சில கட்சிகளினுடைய தேர்தல் அறிவிப்புகள், வாக்குறுதிகள் மிகவும் கவர்ச்சிகரமாக மக்களை கவரக்கூடியதாக இருக்கும். சில நேரங்களில் தேர்தல் கால பிரச்சனைகளை மையப்படுத்தி வைக்கப்படும் கோஷங்கள் பெருமளவிற்கு மக்கள் இடையே சலசலப்பை உண்டாக்கும். உதாரணமாக 1967 தேர்தலில் திமுக வைத்த மிக முக்கியமான கோஷம் "ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம் ஒரு படி நிச்சயம்". இந்த கோஷமானது அரிசி பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கியது. 1971 இல் தேர்தலின் போது அன்றைய பிரதமர் இந்திரா காந்தி "கரீபி ஹட்டோ... வறுமையே வெளியேறு" என்ற கோஷத்தை முன் வைத்தார் அது பெரிய அளவில் மக்களிடையே கொண்டு சேர்த்தது. 1980 தேர்தலில் ஜனதா ஆட்சி உள்கட்சி பூசலினால் கவிழ்ந்த போது "நிலையான ஆட்சி" என்ற கோஷம் மக்களை கவ்வி பிடித்தது. மீண்டும் காங்கிரசுக்கு ஆட்சி கிட்டியது. இதுபோன்று தேர்தல் நேரத்தில் கட்சிகளால் அளிக்கப்படக்கூடிய தேர்தல் வாக்குறுதிகளும் சில கோஷங்களும் பெரிய அளவுக்கு அல்லது ஓரளவுக்கு பாதிப்பை உண்டாக்கும்.
தொடர்ந்து யோசிப்போமே
.
No comments:
Post a Comment