"என்ன நீங்கள் தேசிய வளர்ச்சி திட்டத்தில் பங்கேற்கிறீர்களா? அரசு அறிவித்துள்ள திட்டத்தை மதிக்கிறீர்களா? அப்படியானால் உங்களை நாங்கள் தண்டிக்கிறோம்!" என்று ஒரு அரசு சொன்னால் அது எவ்வளவு நாணய குறைச்சல், நேர்மைக்குறைவான செயல் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
பூவுலகில் பிறந்த மற்ற உயிரினங்களை காட்டிலும் மிக உயர்ந்த உயிரினம் மனிதன். காரணம் எல்லா உயிரினங்களும் இயற்கையில் கிடைத்த அத்தனை பொருட்களையும் அப்படியே பயன்படுத்தி வாழும்போது, மனிதன் மட்டுமே தன்னுடைய அறிவை பயன்படுத்தி உற்பத்தியிலும் ஈடுபட்டு இயற்கையை சாதகமாக்கி முன்னேற்றத்தை கண்டவன்.
அவன் ஒரு வளர்ந்து விட்ட சமூக பிராணியாக இருந்ததால் உணவு, உடை, இருப்பிடம், கலை, கலாச்சாரம் என்று அடுத்தடுத்த நிலைக்கு சென்று வாழ ஆரம்பித்தான்.
மனித இனம் மட்டுமே , குழு, இனம், அரசு அரசியல் என முன்னேற்றம் கண்டது . அப்படி மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் கடமை அரசுக்கு அமைந்ததால் அதில் சந்தித்த பிரச்சனைகளை எல்லாம் ஆய்வு செய்தனர். அவ்வாறு ஆய்வுகள் செய்ததில் மிகப்பெரிய பிரச்சினையாக அமைந்தது மக்கள் தொகை பெருக்கம். உலகம் சந்தித்த மிகப்பெரிய சமூக பிரச்சனையான மக்கள் தொகை பெருக்கத்தை பற்றி ஏராளமான ஆய்வுகள் நடைபெற்றன அதில் முக்கியமான தாமஸ் ராபர்ட் மால்தஸ் (1798) முன்வைத்த மக்கள் தொகை கோட்பாடு.
மக்கள் தொகை பெருக்கம் (ஜியோமெட்ரிக்) உணவு உற்பத்தியை (எண்கணிதம்) விட வேகமாக இருக்கும் என்று கூறுகிறது. இது கட்டுப்பாடற்ற மக்கள் தொகை பஞ்சம், நோய் மற்றும் போருக்கு தூண்டுகிறது என எச்சரிக்கிறதுமால்தஸ் மக்கள் தொகை கோட்பாடு . இதனைத் தடுக்கத் தடுப்பு மற்றும் நேர்மறை சோதனைகளை அவர் பரிந்துரைத்தார்.
மால்டஸ் கோட்பாட்டின் அம்சங்களாக 1)மக்கள் தொகை பெருக்கம்: மக்கள் தொகை பெருக்கு விகிதத்தில் (1, 2, 4, 8, 16...) வேகமாக வளர்ந்து வருகிறது.
2)உணவு உற்பத்தி: உணவு வழங்கல் எண்கணித விகிதத்தில் (1, 2, 3, 4, 5...) மெதுவாக முக்கியத்துவமாக வளர்கிறது.
3)சமநிலை: மக்கள் தொகைக்கான விநியோகத் தலையீடு.
அதற்கு அவர் பரிந்துரைத்த தடுப்பு நடவடிக்கைகளாக மனிதர்கள் தாமே முன்வந்து திருமணத்தைத் தள்ளிப்போடுதல், ஒழுக்கத்தைக் கடைப்பிடித்தல் போன்ற வழிகளில் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல். போன்றவை ஆகும் அவ்வாறு குடும்ப நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்திய நாடுகள் முன்னேறின.
வளர்ந்து வரக்கூடிய நாடாக இருந்து இந்தியா மக்கள் தொகை பெருக்கத்தை கண்டு அஞ்சிய நிலையில், மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையிலேயே குடும்ப நலத்திட்டங்கள் உருவாக்கப்பட்டன. கருத்தடை பெருமளவில் ஊக்குவிக்கப்பட்டது. ஏராளமான விளம்பரங்கள் எல்லாம் செய்யப்பட்டன.
ஆரம்ப காலத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் இப்போது வேண்டாம் 3 குழந்தைகளுக்கு மேல் எப்போதும் வேண்டாம் என்ற விளம்பரம் பிரபலமாக இருந்தது. பிறகு நாம் இருவர் நமக்கு இருவர் என்றானது. அதன் பின் நாம் இருவர் நமக்கு ஒருவர் என்று மாறியது.
இந்த குடும்ப நலத்திட்டத்தை தேசிய வளர்ச்சி திட்டமாக நாடு முன்னேற திட்டமாக அரசு அறிவித்தது மக்களிடம் வேண்டுகோள் விடுத்தது. அதை சீரும் சிறப்புமாக நடைமுறைப்படுத்திய மாநிலங்கள் தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட தென் மாநிலங்கள் ஆகும்.
அதன் விளைவாக அதன் தேசிய வளர்ச்சியில் தென் மாநிலங்கள் முன்னிலையில் நிற்பதற்கு, குடும்ப நலத்திட்டங்களை சிறப்பாக நடைமுறைப்படுத்தியதே காரணம்.
இந்தியாவில் பொருளாதார வளர்ச்சி, தேசத்திற்கான வரி வசூல் ஆகியவற்றின் பங்கேற்பில் தென் மாநிலங்கள் மிக உயர்ந்த நிலையில் உள்ளன.
துரதிர்ஷ்டவசமாக குடும்ப நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்தாத, மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தாது வட மாநிலங்கள் இன்றும் பின்தங்கியே உள்ளன. இன்னும் சொல்லப்போனால் தேசிய வளர்ச்சிக்கு தடையாகவும் சுமையாகவும் உள்ளனர்.
ஆனால் இதற்கு நேர் எதிரிடையாக அரசியல் சித்து விளையாட்டில் மக்கள் தொகை எண்ணிக்கையில் கூடுதலாக இருப்பதால் இந்த பேசக்கூடிய மாநிலங்களான வடமாநிலங்கள் உச்சத்தில் உள்ளன.
இந்தியா குடியரசாக அறிவிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் காண பிரதிநிதித்துவம் என்று வரும்போது வட மாநிலங்களில் உறுப்பினர் எண்ணிக்கை கூடுதலாக உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ஏற்ப உறுப்பினர் எண்ணிக்கை என்று வரும்போது குடும்ப நலத்திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடிய தென் மாநிலங்கள் பாதிக்கப்படக்கூடிய ஆபத்து கடுமையாக எடுத்துரைக்கப்பட்டதால், 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலைப்பாடு 25 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது. 1996 லும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.
தற்பொழுது நாடாளுமன்றத்தில் ஒன்றிய பாஜக அரசு 131 சட்டத்திருத்தம் என்ற பெயரில் மக்கள் தொகையில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 815 ஆக உயர்த்தப்பட்ட சட்டம் கொண்டு வர சட்ட முன் முடிவை தாக்கல் செய்துள்ளது.
இதனால் ஏற்கனவே 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ள தற்போதைய எண்ணிக்கை மாறும். தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மக்கள் மற்றும் இந்தி பேசாத பிற பகுதிகளில் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை குறையும். இந்த மாநிலங்கள் ஆன உ.பி., பீகார், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் மக்களவை உறுப்பினர் எண்ணிக்கை உயரும்.
இது ஒன்றிய அரசின் கொள்கை படி, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு வழங்கப்படும் தண்டனை. மக்கள் தொகையை மட்டுமே ஒரு அளவுகோலாக கொண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை தீர்மானிப்பது அநீதி. நேற்றுதான் பாஜகவினர் முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாக தவறாக கூறினர்.ஆனால் அந்த அநீதி நடைமுறைக்கு வர உள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தாமல் தள்ளி போடலாம். அது சாத்தியமில்லாத போது, மக்கள் தொகை உயர்வு சதவீதம் ஒரு அளவுகோலாகக் கொள்ளலாம். இல்லாவிட்டால் எல்லா மாநிலங்களுக்கும் 50 சதவிகிதம் உயர்வு கொடுத்து எண்ணிக்கையை கூட்டலாம். உதாரணமாக 40 நாடாளுமன்ற உறுப்பினர் உள்ள தமிழகம் புதுவைக்கு 60 ஆக உயர்த்தலாம். ஆனால் மக்கள் தொகையை அளவுகோலாக கொண்டால் தற்போதைய 39 நாடாளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 31 ஆக குறையும். கேரளா 20 உறுப்பினர்கள் எண்ணிக்கை 12 ஆக குறையும்.பஞ்சாப், மேற்கு வங்காளம் குறையும்.உ.பி மற்றும் பீகார்,ம.பி.தற்போதைய எண்ணிக்கை விட கூடுதலாக பத்து இடம் பெறும்.
இது அநீதி. இரண்டாம் தர குடிமக்களாக குறைந்த மக்கள் தொகையைக் கொண்ட மாநிலங்கள் நடத்தப் படலாம். நமது கோரிக்கையை கேட்க வேண்டிய அவசியம் ஒன்றிய அரசுக்கு இல்லை.
துரதிர்ஷ்டவசமாக இவ்வளவு பெரிய ஆபத்து தென் மாநிலங்களுக்கு இருக்கும் போது தென் மாநில அரசியல் கட்சிகளில் ஒரு பெரும்பகுதியினரும் மத்திய பாரதிய ஜனதா கட்சியும் அந்த கூட்டாளிகளும் அப்படி ஒரு ஆபத்து இல்லை என்று சித்தரிக்கிறார்கள். பிரதமர் மோடியின் கீழ் மட்டும் பொய் சொல்கிறார்கள் என்று சொல்வதை விட உண்மையை முழுமையாக மறைத்து தென் மாநில மக்களுக்கு அநீதி இழைக்கிறார்கள்.
இதை மாநில அனுமதித்தால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும், தென்னகங்களில் செய்யப்படும் அநீதியை தடுத்து நிறுத்த தவறிய பாவத்திற்கு நாம் ஆளாவோம்.
எங்கிருந்து இத்தன முக்கியமான சூட்சுமம் பொதிந்த விசயத்தை ஆராய்ச்சி செய்து வெளியிடுகிறார் எழுத்தாளர்.!!வாழ்த்துக்கள்.. கோவை செல்வராஜ்
ReplyDelete